கடையெழு வள்ளல்களை அரசர்களாக நாம் படித்துள்ளோம்… ஆனால் கையிலெதும் இல்லாமல்,‌ காண்பவர்களிடமெல்லாம் கையேந்தி, ஒரு வருடம், இரு வருடமல்ல நூற்றியைம்பத்தாறு ஆண்டுகளாக அணையாமல் அடுப்பெரிந்து, மக்களின் வயிறு பசியால் எரியாமல் உணவளித்துக் கொண்டிருக்கும் வள்ளலாரைப் பற்றிக் காண்போமா! வடலூரில் 1867ஆம் ஆண்டு அவர் பற்ற வைத்த அடுப்பு இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது. கொரோனா காலகட்டத்திலும் ஒருநாள் கூட விடுபடாத அன்னதானம், அவரது ஆத்மசக்திக்கு சான்றாய் திகழ்கிறது. ஆம்! அதனால் தான் […]

  19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை திருவொற்றியூரில் திகம்பர சாமியார் ஒருவர் வீட்டில் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் செல்லும் மனிதர்களின் குணங்களை விமர்சித்து பாம்பு, நரி, பன்றி, எருமை, நாய் என்று சொல்வது வழக்கம். திடீரென அந்த சாமியார் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டி அதோ அறிவும் அன்பும் நிறைந்த மாமனிதர் போகிறார் என்று கத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த மகான் வள்ளலார் […]