தமிழ் இலக்கியவாதியும், சுதந்திரப் போராட்டவீரருமான வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை அதிரடியானது.திருப்பங்கள் பல நிறைந்தது. சிறுகதை வடிவம் எப்படி இருக்கவேண்டும் என்கிற ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வையில் முழுமையாக, உரைநடையில் தமிழின் முதல் சிறுகதை எனப் பிற்காலத்தில் கருதப்பட்ட ‘குளத்தங்கரை அரசமரம்’ எனும் படைப்பினை அளித்த படைப்பாளி இவர். அதற்கு முன்னரெல்லாம்- 19-ஆம் நூற்றாண்டுவரைகூட, தமிழின் எழுத்து மொழியே கவிதை வடிவில்தான் இருந்தது என்பதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.உரைநடை வடிவம் தலையெடுக்க […]