ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்த பாரத தேசத்தை தட்டியெழுப்ப சிங்கநாதமாக முழங்கப்பட்டதுதான் வீரம் செறிந்த மருது சகோதரர்களின் “ஜம்புத்தீவு பிரகடனம்” ஆகும். ஆங்கிலேய படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து மருதிருவரால் 1801-ம் ஆண்டு ஜுன் மாதம் 16 ம் நாள் திருச்சி கோட்டைச் சுவற்றிலும், ஸ்ரீரங்கம் கோவில் சுவற்றிலும் சுவரொட்டியாக ஒட்டப்பட்ட பிரகடனம் அது. சுதந்திரப் போராட்டத்தில் வடக்கே நிகழ்ந்த போர்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றன இந்திய […]