Mahamaham in Kumbakonam ends

14
VSK TN
    
 
     

Dakshin
Bharat Kumbhmela came to an end with lakhs of pilgrims having a holy dip in
Mahamaham in Kumbhakonam. VHP volunteers extended their service during Mahamaham
like Annadaanam, medical assistance, organizing and helping the pilgrims along
with police officials etc.
VHP
Tamilnadu organized three day All India Saints Conference at Govindapuram,
Kumbakonam during Mahamaham. Thousands of matathipathis across the world including
Naga Sanyasins participated in this congregation.  Resolutions were passed at the conference
are:
1.     Nationalise rivers in our country.
2.     Linking of rivers
3.     Protect and maintain purity of rivers
4.     Centre should allocate funds to clean River Cauvery
in South India
5.     Allocate subsidy to the pilgrims of Kailash Yatra,
Muktinath Yatra and Amarnath Yatra as subsidies allowed to other religions.
6.     State Government should allocate funds to form
sylabbus for religious classes to the students and religious classes should be
formulated by matathipadhis.
7.     Protect and preserve Go-shaalas.
8.     Protect and breed national cows.
9.     Rejuvenate dilapidated temples etc..



அகில பாரத துறவியர்கள் மாநாடு நிறைவில் 12 தீர்மானங்களை நிறைவேற்றியது.

மஹாமக விழாவை முன்னிட்டு கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி சமஸ்த்தானில் அகில பாரத துறவிகள் மாநாடு 3 நாட்கள் நடந்தது.இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான துறவிகள், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட பல வெளிநாடுகளை சேர்ந்த துறவிகள், நாகா சந்நியாசிகள் உட்பட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

மாநாட்டின் நிறைவு நாள் அன்று தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதில் பாரதத்தின் முக்யமான அனைத்து  நதிகளும் தேசியமயமாக்க வேண்டும்.  முதல் கட்டமாக தென்னக நதிகளை இணைக்க வேண்டும். அனைத்து நதிகளையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.  கங்கை நதியை தூய்மைப்படுத்த நிதி ஒதுக்கி உள்ளது போல காவேரி நதியையும் தூய்மைப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

கயிலாய யாத்திரை, முக்திநாத், அமர்நாத் யாத்திரை செல்லும் அடியார்களுக்கு மற்ற மதத்தினர் புனித யாத்திரை செல்ல நிதி ஒதுக்குவது போல் யாத்திரை நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.  தற்போது பெயரளவில் கண்துடைப்பாக மட்டும் நிதி ஒதுக்கப்படுகிறது.  அந்த நிதியை பெற கடும் கட்டுபாடுகள் விதித்து இந்துக்களை அவமதிக்கப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.
இந்து சமய மாணவர்களுக்கும், குழந்தைகளுக்கும் வழிகாட்டிகளாகவும், பொறுப்பாளர்களாகவும், விளங்கக்கூடிய ஆதீனங்கள், மடாதிபதிகள் மூலமாக நிரந்தரமான சமய கல்வி திட்டத்தை உருவாக்கி அதற்க்கான நிதியை நேரடியாக ஒதுக்கீடு அறநிலையத்துறை மூலம் செய்து அளிக்க வேண்டும் என மாநில அரசை கேட்டுக் கொள்கிறது.
கோசாலைகளை பராமரிக்கவும், பாதுகாக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு பசு மாடுகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழமையான கோயில்கள், குளங்களை சீரமைத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையை தனித்து இயங்கும் வாரியமாக அறிவித்தல் செய்து அந்த வாரியத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், துறவியர்கள், ஒய்வு பெற்ற நீதிபதிகள், ஐ ஏ எஸ் அதிகாரிகளை நியமித்து அதற்க்கான வரைவுத் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்.
பிற மதத்தினருக்கு வழங்கப்படும் கல்வி சலுகைகளை போல இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் அல்லது வறுமை கோட்டின் அடிப்படையில் அனைத்து மதத்தினருக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும். கோயில்கள், திருமடங்கள், ஆசிரமங்கள் மற்றும் அதனை சார்ந்த சேவை அமைப்புகளுக்கு வர்த்தக மின்கட்டணத்தை நீக்கி சலுகை விலையில் மின் கட்டணம் நிர்ணயிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருகோயில்களுக்கு மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் சொத்துக்களுக்கு குத்தகை சட்ட விதிகளிலிருந்து விலக்கு அளிப்பதுடன் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

National Democratic Teachers Front (NDTF) submits memorandum to the President on JNU

Fri Feb 26 , 2016
VSK TN      Tweet     The following are the contents of the letter submitted to the President of India which is signed by about 1000 prominent teachers of University of Delhi on the issue of JNU including A K Bhagi, Rajesh Gogna; Members of Executive Council University of Delhi; I M Kapahy, N […]