VSK TN
ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவை சங்கம்
04- ஜூலை -2019
ஜான்சி.
04- ஜூலை -2019
ஜான்சி.
சங்க பணிகளில் புதிய தலைமுறையின் பிரவேசம் வேகமாக நடந்து கொண்டிருக்கிறது என்று ராஷ்ட்ரிய சுவயம் சேவக சங்கத்தின் அகில இந்திய பிரச்சார தலைவர் அருண் குமார் தெரிவித்தார். மாறிவரும் சூழலை மனதில் கொண்டு சங்கமானது (ஆர் எஸ் எஸ்) ஆறு புதிய திட்டங்களை துவங்கியுள்ளது.
இதில் சுற்றுச்சூழல், கிராம வளர்ச்சி, பசு பாதுகாப்பு, சமுதாய சமத்துவம் மற்றும் குடும்ப கல்வி ஆகியவை உள்ளன.
சமுதாயத்தின் பலவிதமான பலவீனங்களை ஒழிப்பதற்கு, கிராமங்களின் சமுதாய சக்தியை தூண்டுவது அவசியம் ஆகும்.
இவ்வாறு அம்பாம்பில் அமைந்துள்ள எஸ்.ஆர். இன்ஜினீயரிங் கல்லூரியில் நடந்து கொண்டிருந்த ஒருங்கிணைப்பாளர் பயிற்சி முகாமில் பத்திரிக்கையாளர்களிடம் அகில இந்திய பிரச்சார பிரமுகர் அருண் குமார் தெரிவித்தார்.
2010 முதல் சங்க பணிகள் வெகுவாக அதிகரித்து வருவதாக அவர் கூறினார்.
இதற்கு காரணம் நமது சமுதாயத்தில் சங்க பணிகளை ஏற்றுக்கொள்வதும், பின்பற்றுவதும் அதிகரித்து உள்ளதே ஆகும் என்றார். மேலும் 2010இல் சங்கத்தில் இருந்த 40 ஆயிரம் கிளைகள் பெருகி 2019இல் 60 ஆயிரம் ஆகியது முக்கிய காரணம். மக்களிடம் சங்கத்தை பற்றி அறியவும் சங்கத்தில் இணையவும் மிகுந்த விருப்பம் தோன்றி உள்ளது.
2012இல் இருந்து 2019 ஜூன் வரை 6 லட்சம் மக்கள் சங்கத்தில் ஆன்லைனில் சேருவதற்கான ஆசையை தெரிவித்து உள்ளார்கள். இதில் 2018இல் ஒன்றரை லட்சம் பேரும், 2019இல் இதுவரை 6 மாதத்தில் மட்டும் 67 ஆயிரம் பேர் சங்கத்தில் சேர்வதற்கான விருப்பம் தெரிவித்துள்ளார்கள்.
மொத்த கிளைகளில் (ஷாகா) 6 ஆயிரம் கிளைகளில் 40 வயதிற்கு மேற்பட்ட தொண்டர்கள் வருகின்றனர்.
16 ஆயிரம் கிளைகளில் 20ல் இருந்து 40 வயதிற்கு உட்பட்ட தொண்டர்கள் வருகின்றனர்.
37 ஆயிரம் கிளைகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வருகின்றனர்.
சங்கத்தில் புதிய தலைமுறை வேகமாக நுழைகிறது என்று அவர் கூறினார்.
தேசம் முழுவதும் ஓராயிரம் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இதில் 7 நாட்கள் நடைபெறும் தொடக்க பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு வருடமும் 1 லட்சத்து 25 ஆயிரம் மக்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர்.
இதனால் சங்கத்தின் எதிர்பார்ப்பு என்னவெனில் சங்கம், அனைத்து தரப்பினரையும் சென்றடைந்து குறைகளை களைவதே ஆகும்.
தேசத்தில் பெருகி வரும் சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வுகாண நீர் பாதுகாப்பு, மரம்நடுதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகிய பணிகள் செய்ய சங்கம் முடிவெடுத்துள்ளதாக அவர் கூறினார்.
இது மட்டும் அல்லாது கிராம வளர்ச்சிக்காக பசு சேவை மற்றும் பாதுகாப்பிலும் சங்கம் கவனம் செலுத்துகிறது.
நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை கருத்தில் வைத்து மத, சமூக மற்றும் அனைத்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து சமுதாய நல்லிணக்கத்தை உண்டாக்கும் பணியை சங்கம் செய்து கொண்டு இருக்கிறது.
குடும்ப அமைப்பே நமது சமூகத்தின் பலம் என்று அவர் கூறினார். இதனால் குடும்ப அமைப்பை வலியுறுத்தும் செயல்பாட்டையும் தொடங்கி உள்ளது.
சங்கத்தின் பணிகளின் முன்னேற்றத்தை கண்டு சமுதாயத்தில் சங்கத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக சங்கம் 5 வருடங்களுக்கு முன்பிருந்தே பயிற்சி பணிகளை தொடங்கியது. இதன்மூலம் தொண்டர்கள் செயல் திறனையும் தரத்தையும் அதிகரிக்க முடியும். சங்க பணிகளின் ஆதாரம் அதன் தொண்டர்களே.
நாட்டில் 300 விபாக் மற்றும் 800 மாவட்டங்களிலும் சங்க வேலை உள்ளது.
இதில் ஜில்லா அதற்கு மேற்பட்ட அளவில் 9 ஆயிரம் மற்றும் பிராந்த , அதற்கு மேற்பட்ட அளவில் 1 ஆயிரம் கார்யகர்த்தர்கள் கடந்த 5 வருடங்களில் பயிற்சி பெற்றுள்ளனர்.
தற்போது நடக்கும் இந்த பயிற்சி முகாமில் நாடு முழுவதுமிருந்து 140 கார்யகர்த்தர்கள் பங்கேற்கின்றனர்.
கேள்வி ஓன்றிற்கு பதிலளிக்கையில் அவர், சமுதாயத்தில் நல்லிணக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் அகில இந்திய இணை பிரச்சாரகர் நரேந்திர குமார் மற்றும் இணை பிராந்திய செயலாளர் இன்ஜினீயர் அனில் ஸ்ரீவாஸ்தவா ஆகியோர் பங்கேற்றனர்.