ஆர்.வி.எஸ். மாரிமுத்து,
தலைவர்,
ஆர்.எஸ்.எஸ்., தென் தமிழகம்
கண்டன அறிக்கை
தமிழகத்தில் தேச பக்தியை வளர்ப்பதற்கும், இந்து தர்மத்தை காப்பதற்கும் பாடுபட்டு வருபவர்களை பயங்கரவாதிகள் கொடூரமாக வெட்டி கொலை செய்வதும், கொடூர தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இந்து முன்னணியின் மாநில ö சயலாளர் திரு. வெள்ளையப்பன் வேலூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் பயங்கரவாதிகளால் இன்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். திரு.வெள்ளையப்பன் தனது வாழ்க்கையை சமுதாயப் பணிக்காக அர்பணித்தவர். தேசப் பணிக்காக இடையாறாத பணி செய்து கொண்டிருந்தவர். அவருக்கு உரிய பாதுகாப்பு தர தமிழக காவல்துறை தவறிவிட்டது.
தமிழகத்தில் சமீபகாலமாக தொடர்ந்து இந்து இயக்கத் தொண்டர்கள் பயங்கரவாதிகளின் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். வேலூரில் பாஜ கட்சியை சேர்ந் அரவிந்தரெட்டி வெட்டி கொலை செய்யப்பட்டார். பாஜ கட்சியை சேர்ந்த புகழேந்தி, காளையார்கோயில் படைவென்றான் அம்பலம் ஆகியோரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இரையாகியுள்ளனர். மேட்டுப் பாளையத்தில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் ஆனந்த், நாகர்கோயில் பாஜ மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி, குன்னூரில் இந்து முன்னணியின் ஹரி உள்ளிட்ட பலர் பயங்கரவாதிகளின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். ஆனால் தமிழக காவல்துறையினர் பயங்கரவாதிகளை கைது செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பதவியில் இருக்கும் காலங்களில் சமூகவிரோதிகளும், பயங்கரவாதிகளும் முழுமையாக கட்டுக்குள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அ.தி.மு.க அரசு பொறுப்பேற்றதும் பயங்கரவாதிகள் சுதந்திரமாக தங்களது ச மூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு தொடர்ந்து உள்ளாகி வரும் இந்து இயங்கங்களின் தொண்டர்கள் தமிழக அரசின் மீது இன்னமும் நம்பிக்கை வைத்து சட்டப்படியான நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் தமிழக அரசு உடனடியாக பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப்பணியில்,
ஆர்.வி.எஸ். மாரிமுத்து,
தலைவர்,
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்,
தென் தமிழகம்.