சாதுக்களின் மரணம், இதயத்தை துளைக்கும் பல கேள்விகள்

VSK TN
    
 
     
திரியம்பகேஸ்வர் தட்சிணாமுகி அனுமன் கோவிலைச் சேர்ந்த மஹந்த் கல்பவ்ரிக்ஷ கிரி மகாராஜ் (70), அவரது தோழர் மஹந்த் சுஷில் கிரி மகாராஜ் (35) மற்றும் அவரது ஓட்டுநர் நிலேஷ் டெலகடே (30) ஆகியோர் கொடூரமான முறையில் அடித்துக் கொல்லப்பட்டனர். ஏப்ரல் 16, 2020 அன்று, மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் உள்ள கட்சின்ச்சிலே
கிராமத்தில் அவர்கள் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டனர். இரண்டு சாதுக்களும் வாரணாசியின் ஸ்ரீ பஞ்ச் தசனாமா அகாராவைச் சேர்ந்தவர்கள். இந்த கோர கொலையில் ஈடுபட்ட பாதகர்கள், ஏப்ரல் 17, 2020 அன்று கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோக்கள் ஏப்ரல் 19 அன்று சமூக ஊடகங்களில் வைரலாகி விட்டன. அதன் பிறகே இந்த கோர சம்பவத்தைப்பற்றி நாம் அனைவரும் அறிந்து கொண்டோம். மனிதாபிமான உணர்வுள்ள எவருமே அந்த வீடியோக்களைப் பார்ப்பதன் மூலம் மனம் உடைந்து போவார்கள். ஆனால், எதற்கெடுத்தாலும் மெழுகுவர்த்தி-பதாதைகளுடன் வீதிகளில் போராடும் தாராளவாதிகள், இடதுசாரிகள், இஸ்லாமிய மற்றும் ஜே.என்.யு. கும்பல் இந்த படுபாதகச் செயலைப் பற்றி மூச்சு கூட விடவில்லை. இந்த சம்பவம் “விசேஷ சமுதாய” மக்களில்
யாருக்கேனும் நிகழ்ந்திருந்தால் இன்று எவ்வளவு சலசலப்பு ஏற்பட்டிருக்கும். அதற்கு மேல், மகாராஷ்டிராவில் பாஜக அரசு இருந்திருந்தால், அவர்களின் கூக்குரலுக்கு எல்லையே இருந்திருக்காது. ஆனால், இந்த படுபாதகச் செயலில் பாதிக்கப்பட்டவர்கள் காவி உடை அணிந்த சாதுக்கள். ஆகவே, அவர்கள் தங்கள் மனசாட்சியை தூங்க விட்டு அமைதியாக இருப்பதில் வியப்பென்ன?
இந்த சம்பவத்திற்கு தங்களுடைய கடும் கண்டனத்தையும் அனுதாபத்தையும் தெரிவிப்பவர்கள், இது தொடர்பான சில முக்கியமான பின்னணியையும் உண்மைகளையும் தெரிந்து கொள்வது அவசியம்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கொங்கனா, வார்லி மற்றும் தாகூர் பிரிவு மக்கள் வாழ்கின்றனர். நவீன வளர்ச்சியை கண்டிராத இந்த தொலைதூர கிராமங்களை கிறிஸ்தவ மிஷனரிகளும் இடதுசாரிகளும் பல ஆண்டுகளாக தங்கள் கோட்டையாக மாற்றி உள்ளனர். சிறிது காலத்திற்குப் பிறகு மதம் மாற்றும் சக்திகளின் சூழ்ச்சியால், அந்த பிரிவு மக்கள், தாங்கள் ஹிந்துக்கள் அல்ல எனவும் தாங்கள் தனி மதம் எனவும் கோரிக்கை வைக்க துவங்கினர்.
அவர்களுடைய அடையாளம் ஹிந்துக்களிடமிருந்து வேறுபட்டது என்று மீண்டும் மீண்டும் அவர்களிடம் கூறப்பட்டு வந்தது. பாரதத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக, 1871-1951க்கு
இடைப்பட்ட காலத்தில் பழங்குடியினருக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பில் “சர்னா” என்ற தனி மதக் குறியீடு செய்யப்பட்டது. 1951 இல் சுதந்திரத்திற்குப் பிறகு, இது மக்கள் தொகை கணக்கெடுப்பிலிருந்து நீக்கப்பட்டது.
இருப்பினும், இடதுசாரி கிறிஸ்தவ சதிகாரர்கள் பழங்குடியினரை ஹிந்துக்களில் இருந்து அந்நியப்படுவதற்கான உணர்வை உருவாக்க அயராத முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதன் விளைவாக, பழங்குடியினரில் மாற்றப்பட்ட சிலர் இந்து மதத்தை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினர். சில ஆண்டுகளாக, இந்த வெறுப்பு பால்கர் மாவட்டத்தின்
பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த சில நபர்களிடமும் உருவாகியுள்ளது. இந்த கவலைக்குரிய செயல்பாடுகளை மனதில் வைத்து, கிறிஸ்தவ மிஷனரி செயல்பாடுகள் குறித்த நியோகி குழுவின் அறிக்கை (1956) மதமாற்றத்திற்கு சட்டப்பூர்வ தடை விதிக்க பரிந்துரைத்தது. இருப்பினும், சில துரதிர்ஷ்டவசமான காரணங்களால் அது செயல்படுத்தப்படவில்லை.
நம் தேசத்தையும், சமுதாயத்தையும் பிளவுபடுத்த பல முயற்சிகள் நம் நாட்டில் நடந்து வருகின்றன. ஆனால் உண்மையில் பாரதத்தில் பழங்குடியினருக்கும் நகர் வாசிகளுக்கும் வேறுபாடு உள்ளதா? பாரதீய நாகரீகத்தின் அடையாளங்களான வேதங்கள், புராணங்கள், ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில், வனவாசிகள் மற்றும் நாகரி சமூகத்தினரிடையே நல்லிணக்கம் பற்றிய விளக்கம் தெரியும். ஆச்சார்யா வினோபா பாவே ரிக்வேதத்தை பழங்குடியினரின் புத்தகமாக கருதினார்.
பீல், கோண்ட், மாண்டியா, பிரகான் போன்ற பல பழங்குடியின சமுதாய மக்கள் மஹாதேவ் என்கிற சிவபெருமானை வழிபடுகின்றனர். ஹிந்துக்களின் வழிபாட்டு முறையான இயற்கையை வணங்கும் வழிமுறையை தான் பழங்குடி இன மக்களும் பின்பற்றுகிறார்கள். வட மற்றும் தெற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து நாடுகளில் நடந்தது போன்ற இனப் படுகொலை பாரத நாட்டில் நடந்ததற்கான
எந்த ஆதாரமும் இல்லை. ஆரிய படையெடுப்பு ஒரு கட்டுக்கதை என்று தீர்க்கமாக முடிவு செய்யப்பட்ட ஒரு உண்மையாகும். இருப்பினும் தொடர்ந்து யார் சதி செய்கிறார்கள் ? நாம் அதை விவாதிக்க வேண்டும்.
நம் தேசத்திற்கு எதிராக சமுதாயத்திற்கு பங்கம் விளைவிக்கும் எந்த சதி நடந்தாலும் அதை எதிர்த்து குரல் கொடுத்த சாதுக்களும் சமூக தொண்டாற்றும் அர்ப்பணிப்பாளர்களும் மிக பயங்கரமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருந்துள்ளது.
சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி, கிறிஸ்தவ மிஷனரி மற்றும் தீவிரவாத கம்யூனிச நக்சலைட் கும்பலால் ஆகஸ்ட் 23, 2008 , ஜன்மாஷ்டமி புனித நாள் அன்று கொல்லப்பட்டார். அவர் செய்த தவறு என்ன? ஒடிசாவின் காந்தமால் மாவட்டத்தில், பழங்குடியினரை மதம் மாற்றுவதை எதிர்த்தார். இந்த காரணத்திற்காக, அவர் தனது உயிரை தியாகம் செய்ய வேண்டியிருந்தது. அதே வழியில் சுவாமி அசிமானந்த் ஜி தண்டிக்கப்பட்டார். குஜராத்தின் டாங் மாவட்டத்தில் பழங்குடியினரின் சமூக மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்காக அவர் பணியாற்றினார். அவரது பணி மற்றும் யோசனைகளால் ஈர்க்கப்பட்ட பல பழங்குடி சகோதரர்கள் இந்து மதத்திற்கு திரும்ப விரும்பினர். இதன் விளைவாக, அவருக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதன் மூலம் அவர் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன, மேலும் அவர் பல சித்திரவதைகளை
அனுபவிக்க வேண்டியிருந்தது.இதேபோல், மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் சனாதன் ரக்ஷா தளத்தைச் சேர்ந்த சூர்யாச்சார்யா
கிருஷ்ணதேவானந்த் கிரி மகாராஜும் கிளர்ந்தெழுந்தார்.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் நடந்த சில சம்பவங்களின் சிறிய வரலாற்றைக் கண்டறிந்த பின்னர், இந்த சதி ஒரு பயங்கரமான வடிவத்தை எடுத்து வருகிறது என்பது தெரிய வருகிறது. இரண்டு நிகழ்வுகளை இங்கு முக்கியமாகக் குறிப்பிடுவது அவசியம். 1965 ஆம் ஆண்டில், பால்கர் மாவட்டத்தின் தேராண்டா கிராமத்தில் ‘இந்து சேவா சங்கம்’ நிறுவப்பட்டது, மறைந்த தமு அண்ணா டோக்கர் ஜி, அப்போது மும்பை, ராய்காட் விபாக் பிரச்சாரக். பழங்குடி சமூகத்தில் சமூக, கல்வி மற்றும் பொருளாதார பின்தங்கிய நிலையை அகற்றும் நோக்கில் பணிகள் தொடங்கப்பட்டன.
தமு அண்ணாவின் சமூக மற்றும் மற்றவர்களின் தேவையை புரிந்து கொள்ளும் தன்மை காரணமாக, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கினர். இதைக் கண்டு பொறுக்காத, இடதுசாரிகள் மற்றும் மிஷனரி குண்டர்கள் அவரை படுகொலை செய்ய திட்டமிட்டனர். 1980 ஆம் ஆண்டில் ஒரு இரவு, அவர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அன்று தமு அண்ணா வேறு எங்கோ தங்க வேண்டிய சூழ்நிலை. இந்த குண்டர்கள் வாமன்ராவ் சஹஸ்த்ரபுதே மற்றும் அவரது மனைவி சேவா சங்க கார்யகர்த்தா ஆகியோரை கடுமையாக காயப்படுத்தினர்.
இடதுசாரிகள் மற்றும் கிறிஸ்தவர்கள், மாதவ்ராவ் கனேஜியைக் கொல்லும் நோக்கத்துடன் தலஸ்ரி ‘விஸ்வ இந்து பரிஷத் வன்வாசி கல்யாண் கேந்திரா’வைத் தாக்கினர். 1967 ஆம் ஆண்டில், தமு அண்ணாவின் யோசனையின் பேரில், மாதவ்ராவ்ஜி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் எல்லைகளில் அமைந்துள்ள பால்கர் மாவட்டத்தின் தலசாரி தாலுகாவில் மையத்தைத் தொடங்கினார். இந்த மையத்தின் மூலம் கல்வி, கிராம அபிவிருத்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் நடவு போன்ற திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
ஆகஸ்ட் 14, 1991 பிற்பகலில், 700-800 குண்டர்கள் கொண்ட ஒரு வெறிக் கும்பல் அவர்களைக் கொல்லும் நோக்கத்துடன் மையத்தைத் தாக்கியது. மாதவ்ராஜி கல்யாண் என்னும் இடத்தில் பிரவாஸில் இருந்தார், எனவே உயிர் பிழைத்தார்.
ஆனால் மையத்தில் அமைந்துள்ள மகாதேவ் ஜோஷிஜி மற்றும் அவரது மனைவி வசுதா ஜோஷி ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயங்கள் மிகவும் பலமாக இருந்தாலும் கடவுள் அருளால் இருவரும் உயிர் பிழைத்தனர்.
ஏப்ரல் 16, 2020 அன்று இரண்டு சாதுக்கள் மற்றும் அவர்களின் ஓட்டுநரைக் கொடூரமாகவும் கொன்றது இந்த கோர மனநிலையை பிரதிபலிக்கிறது. தங்களது குருபந்துவின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள கல்பவ்ரிக்ஷா கிரி மகாராஜ் மற்றும் ஓட்டுநர் நிலேஷ் தெல்கேட் ஆகியோருடன் குஜராத்தில் உள்ள சில்வாஸாவுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
இரவு நேரமானதால், வழி தவறி காசா காவல் நிலைய அதிகாரத்திற்கு உட்பட்ட கட்சின்சலே கிராமத்திற்குச் செல்லத் தொடங்கினர். வழியில், வன்முறை கும்பல் அவர்களைத் தடுத்து அடிக்கத் தொடங்கியது. அருகிலுள்ள வன காவல் அதிகாரி அவர்களை மீட்டு, தனது அலுவலகத்தில் அவர்களை அமர்த்தி காவல் நிலையத்திற்கு டெலிபோன் செய்தார்.
அவர்கள் இருந்த கட்சின்ச்சிலே கிராமத்தில் இருந்து காசா காவல் நிலையம் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. போலீஸ் வர எப்படியும் 30 நிமிட நேரம் பிடிக்கும். ஆனால் வன்முறை கும்பல் அதுவரை ஏன் அவர்களைக் கொல்லவில்லை?
காவி உடை அணிந்த சாது போலீஸ்காரரின் கையை பிடித்துக்கொண்டு செல்வதையும், அந்த போலீஸ்காரர் சாதுவை வன்முறை கும்பலிடம் கொடுப்பதையும் நாம் வீடியோவில் பார்த்தோம். இது நன்கு திட்டமிடப்பட்ட சதியா ? காவி உடை அணிந்த சாதுக்களை திட்டமிட்ட முறையில் அடித்துக் கொல்ல யார் காரணம் ? என்ன காரணம் ?
போலீஸ் 3 முறை காற்றில் துப்பாக்கி குண்டு வெடித்திருந்தாலோ வன்முறையாளர்களை கால்களுக்கு கீழே சுட்டிருந்தாலோ நிராயுதபாணிகளாக இருந்த சாதுக்களை காப்பாற்றியிருக்கலாம். பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது சாதுக்களின் சடலங்கள் ஏன் அவமானப் படுத்தப்பட்டன ? இதயத்தைத் துளைக்கும் அந்த சம்பவத்தைப் பார்த்தால் இதுபோன்ற பல கேள்விகள் எழுகின்றன.
ஹிந்து சமுதாயம் பீறிட்டு எழுமுன், இந்த படுபாதகச் செயலை விசாரிக்க உயர் மட்ட குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும். இந்த படுபாதைச் செயலைச் செய்த கொடியவர்கள் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும்.
இந்த கட்டுரையின் ஆசிரியர் டெல்லி பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட ஷியாம் லால் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணி புரிகிறார்.

Next Post

Leftist liberals silence on Sant Lynching

Thu Apr 23 , 2020
VSK TN      Tweet     Mahant Kalpavriksha Giri Maharaj (70) of Triyambakeshwar Dakshinamukhi Hanuman Temple, his companion Mahant Sushil Giri Maharaj (35) and his driver Nilesh Telgade (30) were killed in a heinous murder. On April 16, 2020, they were brutally killed in Gadchinchale village in Palghar district of Maharashtra. Both saints belonged […]