RSS ABKM 2023 – RSS PRESS MEET IN CHENNAI

VSK TN
    
 
     

ஆர்.எஸ்.எஸ். வருடாந்திர அகில பாரத செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம் புஜ் நகரில், நவம்பர் 5, 2023 முதல் நவம்பர் 7, 2023 வரை நடைபெற்றது.

ஆர்.எஸ்.எஸ் மாநில தலைவர் டாக்டர்.குமாரசாமி ஜி பத்திரிக்கையாளர்களை சென்னையில் இன்று சந்தித்தனர். அவருடன் திரு.ஜெகதீசன் ஜி, ஆர்.எஸ்.எஸ் மாநில பொதுச் செயலாளர் மற்றும் திரு நரசிம்மன் ஜி மாநில ஊடகத்துறை பொறுப்பாளர் உடன் இருந்தனர். இதில் அகில பாரத செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பகிர்ந்து கொண்டனர்.

ஜனவரி 22, 2024 அன்று அயோத்தியில் ராமர் கோவிலில் ராமர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இதையொட்டி ஶ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை வழங்கியுள்ள ராமஜன்ம பூமி ஆலய படம், அங்கு பூஜை செய்யப்பட்ட அட்சதைகளை எடுத்துக் கொண்டு அயோத்தி ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயத்தையும், ஸ்ரீராமரையும் தரிசிக்க வருமாறு பல லட்சக்கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்க ஒவ்வொரு இல்லத்திற்கும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் செல்ல இருக்கிறார்கள்.

ஶ்ரீராம ஜன்ம பூமி ஆலயப் படம், அட்சதை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு விட்டன. ஜனவரி 1 முதல் 15 ஆம் தேதி வரை இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஶ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை திட்டமிட்டுள்ள இந்நிகழ்ச்சி வெற்றி பெற ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் உதவிட உள்ளனர்.
சங்க நூற்றாண்டையொட்டி, சமுதாய மாற்றத்திற்காக 5 முக்கிய விஷயங்களை முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமாஜிக் சமரஸ்தா – சமுதாய நல்லிணக்கம்.
சமுதாயத்தில் நிலவும் சாதி வேற்றுமைகள், ஏற்ற – தாழ்வுகளை களைய ஸ்வயம்சேவகர்கள் பணியாற்றுவார்கள். ஹிந்து அனைவரும் சகோதரர்கள் என்பது தாரக மந்திரம். பிறப்பின் அடிப்படையில் அமைந்த எந்த ஒரு வேறுபாட்டையும் நாங்கள் ஏற்கவில்லை. சமுதாயத்தில் நிலவும் இந்த பேதங்களை நீக்க, சங்க தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.

குடும்ப பிரபோதன் – உன்னத குடும்பம்
நமது பண்பாடு, கலாச்சாரம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 பொறுப்புகள் உள்ளன. சமுதாய சேவையில் ஈடுபட வேண்டும், அதே போன்று நமது தர்மத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் உதாரண குடும்பமாக திகழ வேண்டும்.

பர்யாவரன் ரக்ஷக் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு
மரம் நடுதல், பிளாஸ்டிக் கவர்கள் தவிர்த்தல், தண்ணீர் சேமிப்பு, இவையெல்லாம் அடிப்படை விஷயங்கள். உதாரணமாக ராஜஸ்தானில், சங்க ஸ்வயம்சேவகர்கள் சுற்றுசூழல் விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டனர். அதில் 45 நாட்களில், 15 லட்சம் மரக்கன்றுகள் நட்டுள்ளனர். கர்நாடகாவில் 1 கோடி விதைப்பந்துகள் தயாரித்துள்ளனர். பொதுமக்களுடன் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஸ்வயம்சேவகர்கள் மேலும் பல பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

சுதேசி ஒட்டிய வாழ்க்கை முறை.
தாய்மொழிக்கு முக்கியத்துவம், உள்ளூர் தயாரிப்பை உபயோகித்தல், கலாச்சாரம் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கையே சுதேசியை மையப்படுத்திய வாழ்க்கையாக இருக்க வேண்டும்.

குடிமகனுக்கான கடமைகள்
சமூக ஒழுக்கம் ஒவ்வொரு குடிமகனும் சமூக ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் அடிப்படை கடமைகள் என்று உள்ளன, அதே போன்று சமூக கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

ஸ்வயம்சேவகர்கள் தங்கள் குடும்பத்தினர் மத்தியில் இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவர். பின்னர் ஷாகா சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் மத்தியில் இந்த செய்தியை எடுத்து செல்வர். தொடர்ந்து ஒட்டுமொத்த சமுதாயம் மத்தியிலும் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள். உதாரணமாக கோவில்கள், பள்ளிகள், சேவை கல்லூரிகள். அங்குள்ளவர்களை சந்தித்து, இவற்றை கடைபிடிப்பதன் அவசியத்தை எடுத்து சொல்வார்கள்.

உதாரணமாக பள்ளிகளில் சுற்றுசூழல் விழிப்புணர்வு, சமுதாய நல்லிணக்கம் கோவிலில் சொல்ல வேண்டும். வியாபாரிகள் மத்தியில் சுதேசி பற்றி சொல்லலாம். இவ்வாறு ஒவ்வொரு விஷயத்தையும் சமுதாயத்தின் முன்னே எடுத்து செல்ல எங்கள் கார்யகர்த்தர்கள் பணி செய்வார்கள்.

Next Post

An invitation to 10 crore families on behalf of Sri Rama Janmabhoomi .

Wed Nov 15 , 2023
VSK TN      Tweet    உலகில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு ஸ்ரீராம ஜென்மபூமி சார்பில் அழைப்பு – அலோக் குமார். விஷ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான அலோக் குமார் கூறுகையில், வரும் ஜனவரி மாதம் அயோத்தியில் நடைபெற உள்ள ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பின் பேரில், ராமர் விக்கிரக ப்ரதிஷ்டைக்கு , பாரதம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள 10 கோடி குடும்பங்களுக்கு அழைப்பு விடுக்கவுள்ளது. இந்நாளில், அயோத்தியில் அனைத்து […]