பெறுநர்
உயர்திரு செய்தி ஆசிரியர்/ தலைமை நிருபர் அவர்கள்,
சென்னை.
பத்திரிகை செய்தி
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் பண்பு பயிற்சி முகாம்கள் நடைபெறுவது வழக்கம். சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கான இந்த முகாம்களில் கல்லூரி மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை முழுவதும் தங்கியிருந்து தேசிய, சமூகப் பணிகள் குறித்து பயிற்சி பெறுவார்கள். இந்த ஆண்டும் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கும் இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான பொறுப்பாளர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதில் தமிழகத்தில் உள்ள 6 இடங்களில் நடந்த பயிற்சி முகாம்களில் 1,185 பொறுப்பாளர்கள் பயிற்சி பெற்றனர்.
கோவூர் அமிர்த வித்யாலயத்தில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முதல் இன்று வரை நடைபெறும் இந்த முகாமில் வட தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் இருந்து 261 ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு யோகா, பாடல், தன்னம்பிக்கை உரைகள், உடற்பயிற்சிகள், சேவைப் பணிகள் உட்பட பல்வேறு பயிற்சிகளை பெற்றனர். இந்த முகாமிற்கு வேலூரைச் சேர்ந்த திரு ஜெகதீசன் அவர்கள் முகாம் தலைவராக இருந்து வழிநடத்தினார்.
இந்த நிறைவு நிகழ்ச்சியில் முனைவர் கே.கே.சாமி எழுதிய ‘பூரண சமர்ப்பணம் ஸ்ரீ பத்து ஜி’ என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது.
இந்த நிறைவு நிகழ்ச்சி பற்றி தங்களுடைய ஊடகத்தில் செய்தி வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தாயகப் பணியில்
பா. நரசிம்மன்
வட தமிழக ஊடகப்பிரிவு செயலாளர்
ஆர்.எஸ்.எஸ்
+91 89399 98809


One thought on “Press Release – Sangh Shiksha Varg 2024”
Comments are closed.