VSK TN
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.) தென்-சென்னையின் சீருடை அணிவகுப்பு, அக்டோபர் 13, 2019 – ஞாயிறு அன்று தாம்பரத்தை அடுத்த முடிச்சூரில் நடைபெற்றது. மஹாத்மா காந்திஜியின் 150வது பிறந்த நாள் விழா, ஜாலியன்வாலாபாக் படுகொலை 100ம் ஆண்டு நினைவு, ஆசாத் ஹிந்த் அரசை நேதாஜி நிறுவியதன் 75வது ஆண்டு, குருநானக் அவர்களின் 550வது பிறந்த நாள் விழா, ஆகியவைகளை மையப்படுத்தி இந்த அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த சீருடை அணிவகுப்பில் தென் சென்னை பகுதிகளை சேர்ந்த சுமார் 1000 ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் .300பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
திரு. இரா.கோ. இராசசேகர், நிறுவன தலைவர், இந்து பறையர் முன்னேற்ற கழகம் கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில்,” ராஜராஜ சோழன் காலத்தில் சாதிய பாகுபாடு இல்லை. அந்நியர்கள் புகுந்த பிறகே சாதிய கொடுமைகள் , மத மாற்றம் ஆரம்பமானது. அந்நிய சக்திகளின் சக்தியை ஹிந்துக்கள் இணைந்து முறியடிக்க வேண்டும்” டாக்டர் S. சரவணகுமார், நிர்வாக இயக்குனர், Dr. Kumar’s Speciality Hospital நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் ” நாட்டுப்பற்று, ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றிற்கு பெயர் போன இயக்கம் ஆர்.எஸ் எஸ். நமது வளர்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். பங்களிப்பு மிக முக்கியம்” என தெரிவித்தார்.
விழாவிற்கு முன்னிலை வகித்த திரு. M. நடேசன், மாநில தலைவர் மருத்துவர் சமூக நலச்சங்கம் & முடிதிருத்தும் தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் திரு. M. நடேசன் பேசுகையில், “தேசத்திற்கு சேவை செய்ய தோன்றிய அமைப்பு ஆர்.எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்தவர். நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து சமுதாய பணியில் ஈடுபடுவோம்”. என தெரிவித்தார்.
ஆர்.எஸ்.எஸ். தென்மாநில சேவா ப்ரமுக் திரு. K. பத்மகுமார், சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில்,”இன்று உலகமே ஆர்எஸ்எஸ் அமைப்பை உற்று நோக்குகிறது. சமுதாயத்தில் பல நல்ல முன்னேற்றங்களை ஆர்எஸ்எஸ் ஏற்படுத்தி வருகிறது. ஷாநவாஸ் என்னும் அறிஞர் ஆர்எஸ்எஸ் அமைப்பை அனைவரும் படிக்கவேண்டும். அவர்களால் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். அடித்தட்டு மக்களுக்கு சேவை சென்றால் மட்டுமே நாடு முன்னேற முடியும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அதைப் பின்பற்றி சங்கம் வேலை செய்து வருகிறது. முன்னாள் தலைவர் பாலா சாகேப் தேவரஸ் ஜி கூறியதுபோல உலகத்திற்கு வழிகாட்டக் கூடிய அளவிற்கு நாட்டை வலிமையாக்க வேண்டும் என்பதே சங்கத்தின் நோக்கம்”.
ஆர்.எஸ்.எஸ். முன்னாள் பிரச்சாரக் மற்றும் பாரதீய கிசான் சங்கம், பாரதீய மஸ்தூர் சங்கம், சுதேசி ஜாக்ரன் மஞ்ச் ஆகியவைகளின் நிறுவனர் திரு. தத்தோபந்த் டெங்கடி அவர்களின் பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அவரது வாழ்க்கை சரித்திரம் குறித்த புத்தகமும் இந்நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது.