VSK TN
கடந்த 28/8/19 அன்று இந்துமுன்னணி மாநில அமைப்பாளர் திரு.கா.பக்தவச்சலன் அவர்கள், பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியதாவது: வருகின்ற செப் – 2ம் தேதி 37ம் ஆண்டாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை மிகவும் விமர்சையாக கொண்டாட இந்து முன்னணி முடிவு செய்துள்ளது. சென்னை திருவல்லிகேணியில் ஒரு பிள்ளையாரோடு துவங்கிய இவ்விழாவானது தமிழகம் முழுவதும் இன்று ஒன்றரைலட்சதிற்கும் மேலாக விநாயகர் திருமேனிகள் பிரதிஷ்டை செய்து விழா நடைபெறவிருக்கிறது. ஹிந்து மக்கள் ஒற்றுமையோடு கொண்டாடும் திருவிழாவாக இந்த விழா அமைந்துள்ளது .
ஒவ்வொரு விழாக்குழுவினரும் விழாவை சிறப்பாக நடத்திட காப்புகட்டி, மாலை போட்டு, விரதம் இருந்து உறுதி எடுத்துகொள்வர். விழா நடைபெறும் நாட்களுக்கு ஏற்ப ,மகா ஆரத்தி ,தம்பதிகள் பூஜை ,சமுதாய சமத்துவ தினம் , சிறுவர் தினம், அன்னையர் தினம், ஹிந்து ஏழுச்சி தினம் என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, சிறுவர்களுக்கு பக்திப்பாடல்கள் பாடுவது, பக்தி உடை அலங்காரம், சமுதாய சமத்துவ தினத்தில் அனைத்து சமுதாய தலைவர்களையும் அழைத்து சமத்துவத்தை உணர்த்துதல், தம்பதிகள் பூஜையில் உறவின் மகிமையை உணர்த்த குடும்பத்தின் மூத்த தாத்தா பாட்டியை அழைத்துவந்து அவர்களுக்கு பூஜை செய்து ஆசிபெறுவது, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டி போன்ற விஷயங்கள் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விழாவின் மைய கருத்து ஒன்று மக்களிடம் வலியுறுத்தப்படும் அந்த வகையில் இந்த ஆண்டு ” தெய்வீக தமிழை காப்போம் ,போலி தமிழின வாதத்தை முறியடிப்போம் ” என்ற மையக்கருத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.
வழக்கம் போல, இந்த ஆண்டும் சென்னையில் மூன்று இடங்களிலிருந்து ஊர்வலம் துவங்கி ,பட்டினப்பாக்கம் ஸ்ரீனிவாசன் கடற்கரையில் நிறைவு பெறும். அங்கு மாலை 4 மணிக்கு இந்து ஏழுச்சி பொது நிகழ்ச்சி, மற்றும் கலைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நல்முறையில் நடைபெற ஒத்துழைப்பை நல்குவதாக காவல் துறையினர் நம்பிக்கை அளித்துள்ளனர். எனவே அவர்களுக்கு இந்து முன்னணி சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். இவ்விழாவில் அனைத்து சமுதாய மக்களும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டுமாய் கேட்டு கொள்கிறோம் இவ்வாறு அவர் கூறினார்.
வீரத்துறவி இராமகோபாலன்ஜி, நிறுவன அமைப்பாளர், திரு.க.பக்தன் மாநில அமைப்பாளர், திரு.T.மனோகர் மாநிலச் செயலாளர், திரு.A.T.இளங்கோவன், மாநகரதலைவர், திரு.பசுத்தாய்கணேசன் மாநகர செய்தித்தொடர்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.