VSK TN
குரு நானக் சமய சமுதாய புரட்சி நடத்திய பிறகுதான் சீக்கியர்களின் அரசியல் புரட்சி வந்தமைந்தது. ‘எந்த ஒரு தேசமும் அரசியல் விடுதலை பெருவதற்கு முதல் தேவை என்ற முறையில் அந்த தேசத்தின் மாநசீக ஆன்மிக விடுதலை அவசியம்’ என்பதை புரிந்துகொள்வதற்கு இதைத் தவிர வேறு உதாரணங்கள் தேவையில்லை. எனவேதான் இதை மனதில் கொண்டு சுதந்திர போராட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கும் அதை வலுப்படுத்துவதற்கும் டாக்டர் ஹெட்கேவார் தேசத்தில் மாநசிக, ஆன்மிக விடுதலைக்கான பணியை அதாவது சமுதாய ஒருங்கிணைப்பை தொடங்கினார். ரவீந்தரநாத தாகூரும் ‘ஸ்வதேசி சமாஜ்’ என்ற தமது நூலில் மக்களுக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்கிற சேம நல அரசு பாரதீய சிந்தனை வழியில் வந்தது அல்ல என்று ஆணித்தரமாக கூறுகிறார். மக்களுக்குத் தேவையான அனைத்தையும் செய்வது நமது நாட்டில் அரசு அமைப்பு அல்ல. முக்கியமான சில துறைகள் அரசிடம் இருக்கும். உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வி, முதலிய எல்லா விஷயங்களும் சமுதாயத்தின் கட்டுப்பாட்டில்தான் இருக்கும். ஒரே மூங்கில் மீது ஒரு கூடாரம் நிற்கிறது என்றால் அந்த கொம்பு முறிந்துபோனால் எல்லாமே நிலைகுழைந்து தரைமட்டமாகிவிடும். ஆனால் கூடாரம் நாலைந்து கம்பங்கள் மீது அமைக்கப்பட்டிருந்தால் ஒரு கொம்பு உடைந்தாலும் கூடாரம் சரியாது. அந்த தூணை மட்டும் சரி செய்து கூடாரத்தை நிலைநிறுத்த வாய்ப்புண்டு. அதுபோலத்தான் முஸ்லிம்கள் சொல்கிற ஜிகாத் கிருஸ்தவர்கள் சொல்கிற சிலுவைப்போர் ஆகிய இயக்கங்கள் அரசையே நம்பியிருந்த நாடுகளில் ஆட்சியாளரை தோற்கடித்ததும் அந்த நாட்டின் எல்லா மக்களையும் இஸ்லாத்துக்கோ கிருஸ்தவத்துக்கோ மதமாற்றிவிட முடிந்தது. ஆனால் பாரதத்திலோ 850 ஆண்டுகளாக முஸ்லிம் அரசுகளும் 150 கிருஸ்தவ அரசும் நடந்தாலும் வெறும் 15 சதவித மக்களைத்தான் இஸ்லாத்துக்கும் 3 சதவித மக்களைத்தான் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றமுடிந்தது. இது பாரதத்தில் மட்டுமே நடந்திருக்கிறது. ஏனென்றால் பாரதத்தின் சமூதாய அமைப்பு ஆட்சி பீடத்தை நம்பி, ஒற்றை மூங்கில் மீது நிற்கிற கூடாரம் அல்ல. ஆட்சிப்பீடத்தில் அப்பால் சமுதாயத்திற்கு என தனி ஏற்பாடுகள் இருந்தன.
இதையெல்லாம் மனதில் கொண்டுதான் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் கட்டமைப்பு உருவானது. சங்கப்பணி பரிபூரணமாக சுயசார்பு கொண்டது. ஆட்சி பீடத்தை துளிகூட சார்ந்திருப்பது அல்ல. சங்க ஸ்வயம்சேவகர்கள், ஊருக்குள் எத்தனையோ விதங்களில் 1,30,000க்கும் அதிகமான தொண்டு பணிகள் புரிந்து வருகிறார்கள். அவற்றிலும் கூட 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் அரசு உதவியை நம்பி இருப்பவை அல்ல. நான் குஜராத் பிராந்த பிரசாரக்காக பணிபுரிந்தபோது கேசுபாய் படேல் தலைமையில் பாஜக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. வனவாசி (பழங்குடியினர்) மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட தொகையை வனவாசி கல்யாண் ஆசிரமம் அமைப்பிடம் ஒப்படைக்க பாஜக முன்வந்தது. வனவாசி கல்யாண் ஆசிரமம் மூலம் எத்தனையோ பழங்குடி மேம்பாட்டுக்கான தொண்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் கல்யாண் ஆசிரம கார்யகர்த்தர்கள் பாஜகவின் இந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சங்க கார்யகர்த்தர்களிடம், ‘ஏன் கல்யாண ஆசிரமம் அரசு உதவியை நாடுவதில்லை?’ என்று என்னை கேட்டார். நான் அவருக்கு வினோபா பாவே சொன்ன ஒரு விஷயத்தை சுட்டிக்காட்டினேன். ‘அரசாங்கப் பணம் எங்கிருந்து வருகிறது? வரிகள் மூலமாக சமுதாயம்தான் அரசாங்கத்திற்கு காசு கொடுக்கிறது. அதாவது அரசாங்கம் வேலைக்காரன், சமுதாயம் எஜமானன். நாம் ஏன் வேலைக்காரனிடம் பணம் வாங்கவேண்டும். எஜமானனிடம் கேட்கிறோம். அவரும் தருகிறார்’ என்பதுதான் வினோபாஜி சொன்ன விஷயம்.
பரவலாக்கம் மிக முக்கியம்:
ஒரி பிரப்மன், ராட் பெக்ஸ்ட்ராம் இருவரும் எழுதியுள்ள ‘த ஸ்டார்பிஷ் அண்ட் ஸ்பைடர்’ நூலில் அதிகாரபீடம், சமுதாயம் இவற்றின் அதிகார கட்டமைப்பு எப்படியிருக்கும் என்பதை ஒப்பிட்டிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் இரண்டு உவமைகளை எடுத்தாண்டிருக்கிறார்கள். ஒன்று சிலந்திப்பூச்சி அதற்கு நிறைய கால்கள். அதன் ஓரிரு கால்கள் ஒடிந்துபோனாலும் அது தொடர்ந்து நடமாடும். அதன் உயிர் அதனுடைய சின்னஞ்சிறு தலைக்குள் பொதிந்திருக்கிறது. அதன் தலை நசுங்கினால் சிலந்தி இறந்துவிடுகிறது. இன்னொரு உவமை ஸ்டார்பிஷ் என்ற மீன். அதனுடைய உயிர் ஒரு புள்ளியில் மையமிட்டு இருக்காமல் பரவலாக பல மையங்களில் இருப்பதால் ஏதாவது ஒரு மையம் சேதம் ஆனாலும் ஸ்டார்ஃபிஷ் உடனே இறந்துவிடுகிறது. அதை இரண்டாக துண்டுபோட்டால் இரண்டு ஸ்டார்ஃபிஷ் கிடைக்கிறது.
இதை புரிந்துகொள்ள இந்த நூலில் நூலாசிரியர் ஒரு உதாரணம் தந்துள்ளார். லத்தின் அமெரிக்க நாடுகளின் வரலாறு நன்கு கற்றறிந்த நிபுணர் பேராசிரியர் நொவின் தன் நூலில் வரலாற்றின் சில காலகட்டங்களை பட்டியலிட்டுள்ளார். பதினாறாவது நூற்றாண்டில் ஐரோப்பா ஸ்பெயின் நாடுகளிலிருந்து ஏராளமான மக்கள் படைதிரட்டிக்கொண்டு மற்ற நாடுகளை கொள்ளையடிக்கப்போனார்கள். தங்கவேட்டை நடத்த கப்பலில் ஏறிச்சென்றார்கள். இதை ‘ஸீ எக்ஸ்படிஷன்’ என்று அழைத்தார்கள். ஸ்பெயினிலிருந்து ஒரு படைப்பிரிவு கப்பலில் ஏறி லத்தின் அமெரிக்க நிலப்பரப்பை நோக்கிச்சென்றார்கள். கண்ணில் பட்ட பூமியை கைப்பற்றுவதுதான் நோக்கம். 1519 ல் ஒரு ஸ்பானிய ராணுவ படைப்பிரிவு ‘எஜ்டெக்’ என்ற ஒரு லத்தீன் அமெரிக்க பழங்குடி பகுதிக்குச் சென்றது. அங்கிருந்த தலைவனிடம் துப்பாக்கியைக் காட்டி ‘‘இருக்கிற தங்கத்தையெல்லாம் கொடு, இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம்’’ என்று மிரட்டினார்கள். இப்படிப்பட்ட கொல்லை கும்பலை சந்திக்க நேரிடும் என்று அந்தத் தலைவன் கனவு கூட கண்டிருக்கமாட்டான். உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தங்கத்தையெல்லாம் எடுத்துக்கொடுத்ததும் ஸ்பெயின் படையினர் தங்கத்தையும் எடுத்துக்கொண்டு அந்தத் தலைவனையும் கொன்றுவிட்டார்கள். இரண்டே ஆண்டுகளில், அதாவது 1521க்குள் எஜ்டெக் பழங்குடிப்பகுதி முழுமையாக ஸ்பானியர்களின் பிடிக்குள் வந்துவிட்டது. இதே மாதிரி 1534ல் ஒரு ஸ்பானிஷ் படைப்பிரிவு ‘இன்கா’ என்ற லத்தீன் அமெரிக்க பழங்குடி மக்கள் பகுதிக்கு போய் அங்கும் இதே வரலாற்றை நடத்தியது. அதன்பிறகு 1536க்குள் ‘இன்கா’ பகுதியும் ஸ்பானிஷ் ராணுவத்தின் பிடிக்குள் சென்றுவிட்டது. அங்கேயும் தலைவனை கொன்று போட்டது. இப்படி ஒவ்வொரு வட்டாரமாக ஸ்பானிஷ் ராணுவம் விழுங்கிக்கொண்டே இருந்தது.
ஆனால் 1618ல் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ஸ்பெயினிலிருந்து ஒரு ராணுவப்படைப்பிரிவு 1618ல் ‘அபாச்சி’ என்ற பழங்குடி பகுதிக்கு போய்ச்சேர்ந்தது. அங்கேயும் தலைவனை கொன்றுபோட்டது. இத்தனைக்கும் அந்த பழங்குடி சமுதாயம் கொள்ளை அடிக்கிற அளவுக்கு செழிப்பானதான இருக்கவில்லை. எனவே ஸ்பெயின் காரர்கள் அந்த மக்களை மதமாற்றி வயல்வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். ஆனால் மெல்ல மெல்ல ஸ்பானிஷ் தலைவனைக் கொன்ற பிறகும் கூட சமுதாயத்தில் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே வந்தது என்பதை ஸ்பெயின் காரர்கள் மெல்ல மெல்ல உணரத்தொடங்கினார்கள். மற்ற எல்லா இடங்களிலும் ஓரிரு ஆண்டுகளிலேயே அந்தந்தப் பகுதிகளை ஸ்பெயினின் ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முடிந்தது என்றாலும் அதுபோல இங்கே நடத்தமுடியவில்லை. 200 ஆண்டுகாலம் போராட்டம் நடந்தது. இறுதியில் ஸ்பெயின் ராணுவம் பின்வாங்க வேண்டியதாயிற்று.
இதையெல்லாம் விவரித்த பேராசிரியர் மொவின் எழுதுகிறார் ‘‘ ‘எஜ்டெக்’, ‘இன்கா’ பகுதிகளில் இருந்த பழங்குடி படைகளைவிட அப்பாச்சி பகுதியின் படை அதிக வலிமையுள்ளது கூட இல்லை. அதுமட்டுமல்ல மற்ற இரண்டு பகுதிகளையும் தாக்கிய ஸ்பானிஷ் படை அதே பலத்துடன்தான் இங்கேயும் தாக்கியது. அப்படியிருக்க இதுபோல ஏன் ஆயிற்று. ஏனென்றால் அப்பாச்சி சமுதாயத்தின் கட்டமைப்பு ஆட்சி பீடத்தை சார்ந்து இருக்கவில்லை. அந்த சமுதாயத்தின் சக்தி முழுவதும் தலைவனிடம் குவிந்திருக்கவில்லை. சமுதாயத்திற்கு என அரசு சாராத தனி கட்டமைப்பு இருந்தது. எனவே அரசு தோற்றுப்போனாலும் சமுதாயம் தோற்கவில்லை. நீண்ட நெடுங்காலம் போர்புரிய முடிந்தது’’.
அத்தகைய கட்டமைப்பை நாம் புரிந்துகொள்வது அவசியம். எனவே டாக்டர் அம்பேத்கரும் கூறினார்: ‘‘எந்தவொரு நாடும் அரசாங்க சுதந்திரம் பெறுவதற்கு முன்னுரையாக மக்கள் மாநசீகமாக ஆன்மிக ரீதியில் விடுதலை பெறுவது அவசியம்’’ ஸ்வாமி விவேகானந்தர் கூறியது இது: ‘‘தேசிய உணர்வின் அடிப்படையில் கட்டமைப்புடன் நாம் ஒருங்கிணைவது அவசியம்’’. சமுதாயம்தான் சூத்திரதாரி. ‘ஸ்வதேசி சமாஜ்’ உருவாக்கி அதை நிலைநிறுத்துவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பணி, அடிப்படை பணி என்பது புரியும். சுதந்திர போராட்ட காலகட்டத்தில் இந்தப் பணியின் அவசியத்தின் இன்றியமையாமையையும் கருத்தில் கொண்டுதான் டாக்டர் ஹெட்கேவார் சமுதாயம் முழுவதையும் தேசிய கண்ணோட்டத்துடன் விழிப்படையச் செய்து செயல்துடிப்பு மிக்கதாக ஆக்கிடும் பணி மிக முக்கியம் என்று உணர்ந்து சமுதாயம் முழுவதையும் கட்டுக்கோப்பு உள்ளதாக்கும் பணியை ஆரம்பிப்பதற்காக
‘ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்’ நிறுவினார். நாமும் அந்தப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ளவேண்டும். டாக்டர் ஹெட்கேடவார் தீர்க்க தரிசியாக இயக்க கட்டமைப்பு நிபுணத்துவம் வாய்ந்தவராக பார்க்கப்படுகிறார் என்றால் காரணம் இதுதான்.
கட்டுரையாளர் ஆர்.எஸ்.எஸ். இணைப்பொதுச்செயலர் டாக்டர் மன்மோகன் வைத்யா.