TASMAC கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும், BMS

VSK TN
    
 
     
மதுவால் விளையும் தீமைகள்
பண்பாடு, கலாச்சாரம் சீர்குலைவு
குடும்ப அமைதி கெடுதல்
உடல் நலம் பாதித்தல்
பொருளாதார இழப்பு
வேலைக்கு செல்லாதிருத்தல்
1. குடும்ப அமைதி கெடுதல் மது அருந்தி தன்னிலை இழப்பதால் தாய், தந்தை, மனைவி, குழந்தைகளிடமிருந்து தனித்திருத்தல்- விளைவு : அவர்களின் அன்பை இழத்தல். நாளடைவில் மனோரீதியான நோய்களுக்கு ஆட்படுதல். குழந்தைகளுக்கு தகப்பனின் அன்பு, வழிகாட்டுதல் இழப்பு ஆகியவற்றால் அவர்கள் வழிதவறுதல் மற்றும் குடும்பத்தில் நிம்மதியின்மை. தவிர, இத்தகைய குடும்பங்களில் சில சிறுவர்களில் மதுப்பழக்கம் காண்பது.
2. உடல் நலம் பாதித்தல்
தொடர்ந்து மது அருந்துவதால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்புத் தளர்ச்சி, கல்லீரல் பாதித்தல், சிறுநீரக பாதிப்பு மற்றும் 200 வகையான நோய்கள்.
விளைவு: மஞ்சள் காமாலை உள்ளிட்ட கடுமையான நோய்களால் பீடிக்கப்படுதல், ஆண்மையிழத்தல், சமூகத்தில் மதிப்பிழத்தல், பொருளாதார ரீதியிலான இழப்பு.
ஒருவர் (40 வயதானவர்) கடந்த 20 வருடங்களாக குடிப்பழக்கம் – 60 வயது வரை வாழ்ந்தால் மொத்தம் 40 வருடம். மது அருந்துதல் சராசரியாக :
ஒரு நாள் செலவு – ரூ. 200
ஒரு மாத செலவு – 200 x 30 = ரூ. 6,000
ஒரு வருட செலவு – 6000 x 12 = ரூ. 72,000
40 வருடங்களுக்கு 72000 x 40 = ரூ. 28,80,000
நோய்வாய் படுவதால் குறைந்தபட்ச சிகிச்சை செலவு (வாழ்நாள் முழுமைக்கும்) ரூ. 2,00,000
மொத்தம் ரூ 28,80,000 +2,00,000 = ரூ. 30,00,000 (முப்பது லட்சம் ரூபாய்)
குறிப்பு : பள்ளிப்பருவத்திலேயே தற்பொழுது பலரும் (மாணவிகள் உட்பட) மது அருந்துவதாக செய்திகள் வருகின்றன. அதைத் தவிர்த்து 20 வயதில் ஒருவர் மது அருந்த தொடங்கினால் 40 வருடங்களுக்கு (விலை உயர்வு உட்பட) ரூ. 40,00,000 இழப்பு ஏற்படும்.
3. வேலைக்கு செல்லாதிருத்தல்
உடல் நலிவாலும் மன உளைச்சலாலும் மாதத்தில் 10 முதல் 15 நாட்கள் மட்டும் வேலைக்குச் செல்லுதல். விளைவு (5 நாட்கள் விடுமுறை எனக்கொள்வோம்)
மீதி 10 நாள் கூலி இழப்பு சராசரியாக – ரூ 5,000
1 வருடத்திற்கு -ரூ. 12×5,000 = 60,000
40 வருடத்திற்கு – ரூ. 40x 60,000 = 24,00,000
ஆக மதுவிற்காகும் செலவு – ரூ. 30,00,000 + ரூ.24,00,000 = ரூ.54,00,000 (ஐம்பத்து நான்கு லட்சம் ரூபாய்)
இதையே வேறொரு கோணத்தில் பார்த்தால் பேரதிர்ச்சி கலந்த பிரம்மிப்பூட்டும் நஷ்டம் ஏற்படுவதைக் காணலாம்,
அவையாவன:
ஒவ்வொரு மாதமும் குடிப்பற்கான செலவு ரூ. 6,000
ஒவ்வொரு மாதமும் வேலையிழப்பால் வருமான நஷ்டம் – ரூ. 5,000
ஒரு மாதத்திற்கு மொத்தம் – ரூ. 11,000
40 வருடத்திற்கு  480 மாதங்கள்
ஒவ்வொரு மாதமும் ரூ. 11,000-ஐ Monthly Recurring Deposit Scheme முறையில் FD செய்தால் 480 மாதங்களுக்கு கிடைக்கும் தொகை – ரூ. 2,18,38,484 (6 சதவிகித வட்டி)
வாழ்நாள் முழுமைக்குமான குறைந்தபட்ச
சிகிச்சை செலவு –                                                                         ரூ.      2,00,000
எனவே மொத்தம் –                                                                        ரூ. 2,20,38,484
(இரண்டு கோடியே இருபது லட்சத்து முப்பத்து எட்டாயிரத்து நானுற்று என்பத்து நான்கு ரூபாய்)
நன்மை (மதுவால் அரசிற்கு கிடைக்கும் வருவாய்)
14.03.2020 மார்ச் அன்று அமைச்சர் மாண்புமிகு. தங்கமணி அவர்களின் அறிக்கையின் படி எதிர்பார்ப்பு
நிதியாண்டு 2019-20-ல் ரூ. 31,000 கோடி.
2020 பிப்ரவரி 29 வரை கிடைத்த வருமானம் ரூ. 28,839.08 கோடி.
இந்த இழப்பை ஈடுகட்ட வழி:
தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கை ஏறத்தாழ 6 கோடி. இதில் ஒரு கோடிப்பேரை தவிர்த்து ஏனைய 5 கோடி பேரிடம் “தமிழக மக்கள் நலவாழ்வு நிதி” எனப் பெயரிட்டு மாதம் ரூ.50 வசூல் செய்தால் வருடத்திற்கு ரூ.3000 கோடி கிடைக்கும்.
இதற்காக பெரியளவில் பிரச்சாரம் தேவைப்படும். “மாதம் 50 ரூபாயா அல்லது சீரழியும் தமிழகமா” என்கிற கேள்வியினை முன் வைத்தால் நிச்சயமாக மக்கள் இதைவிட அதிக நிதி அளிப்பர்.
· APL கார்டு உரிமையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்ய வேண்டும்.
· தொழில் நிறுவனங்களிடம் வருமானத்திற்கேற்ப இதே கோரிக்கையை முன்வைத்து வசூல் செய்யலாம்.
· *இவை குறிப்பிட்ட சில காலத்திற்கு நடைமுறைப்படுத்தக் கூடியவை*
· சுற்றுச் சூழலுக்கு பாதிப்பின்றி கிரானைட் குவாரிகளை அரசே ஏற்று நடத்தலாம்.
· மணல் குவாரிகளில் திருட்டை தடுப்பது.
· தென்னை, பனை மரங்களிலிருந்து பதநீர் இறக்க விவசாயிகளை அனுமதித்தல்; ; இதனை பதப்படுத்தி பாக்கட் முறையில் விற்பனை செய்யலாம். இதற்கு 30 சதவிகிதம் வரை வரியாய் வசூலிக்கலாம்.
· பொருளாதார நிலை மேம்படும் வரை மிகவும் அத்தியாவசிமானவர்களுக்கு மட்டும் இலவசங்களை வழங்குவது.
· 100 நாள் வேலை வாய்ப்பு உறுதித் (MGNREGA) திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அளித்து அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் வருவாயைப் பெருக்குதல்.
(வேலைத்திறனை உறுதிப்படுத்தவது அவசியம்)
தவிர,
சமயப்பெரியோர்கள். அனைத்து துறை சார்ந்த நிபுணர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல், தொழிற்சங்கங்கள், தொழிலதிபர்கள், வணிகர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவினை அமைத்து அரசிற்கான வருமானத்தினை உயர்த்துவதை பொது மக்களின் ஒத்துழைப்புடன் உறுதிப்படுத்தலாம்.
இறுதியாக 40 வருட குடிப்பழக்கம் உள்ள ஒருவரின் வேண்டுகோள் “50 வருடங்களாக தமிழக மக்களை சீரழித்து வரும் மதுவிலிருந்த காக்க ஆண்டவன் அளித்த வாய்ப்பு தற்பொழுது கிடைத்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி TASMAC கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்”
எஸ். துரைராஜ் 
தென்பாரத அமைப்புச் செயலாளர், 
பாரதீய மஸ்தூர் சங்கம் (BMS)

Next Post

Lack of Hindu Unity emboldens all and sundry to indulge in vilifying the age old culture of the Land and get away with it.

Wed May 6 , 2020
VSK TN      Tweet     In the last couple of days two incidents of denigrating, defaming of Hindu god and saint are the trending in social media. The entire Hindu community could only see the annual Meenaskshi Kalyanam in temple city Madurai in a web cast only. The Hindu community , realizing its […]