VSK TN
Bharat Kissan Sangh Tamilnadu called for a protest demo today at Valluvar Kottam in Chennai. Around 220 people participated from 14 districts raising their voice to look into the life of farmers in the drought hit state.
இவ்வாண்டில் மழை 80% பொய்த்துவிட்டதால் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏரி குளங்களில் நீர் இல்லை மாடுகளுக்கு குடிநீர் மற்றும் தீவனங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே மாடுகளை காப்பாற்ற இயலாது அடிமாடுகளுக்காக விற்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் விவசாயம் பொய்த்துப்போனதால் 200க்கு மேற்பட்ட விவசாயிகள் கடந்த சிலநாட்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மழை பெய்யும் என எதிர்பார்த்து நம்பிக்கையுடன் முழுமையாக கடன்பெற்று செலவு செய்து, நடவு செய்யப்பட்ட பயிர்கள் கருகிவிட்டதால் மேலும் பலர் தற்கொலை செய்யும் அபாயகரமான சூழல் நிலவுகிறது.
இந்த காலகட்டத்தில் மத்திய மாநில அரசுகள் நிலமையின் தன்மை உணர்ந்து விவசாயிகளை காத்திட தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்கிட வலியுறுத்தி இன்று சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இப்பேரிடரில் இருந்து விவசாயிகளை காத்திட பாரதிய கிசான் சங்கம் வலியுறுத்தும் கோரிக்கைகள்.
1. ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 30 ஆயிரம் நிவாரணமாக வழங்கக்கோரியும்,
2. போர்கால அடிப்படையில் ஏரி, குளங்கள், அணைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரியும்
3. மத்திய அரசின் நதிகள் இணைப்புத்திட்டத்தை முனைப்போடு செயல்படுத்தும் குஜராத், மத்தியப்பிரதேசம், ஆந்திரபிரதேசம் போன்று தமிழக அரசும், மத்திய அரசும் இணைந்து தேசிய நதிநீர் இணைப்புத்திட்டத்தை செயல்படுத்தக் கோரியும்,
4. விவசாயத்தில் அன்னிய நேரடி முதலீடு, மரபணு மாற்றுப்பயிர் போன்றவற்றை தடை செய்ய கோரியும்,
5. விவசாய நிலங்களை, விவசாயம் அல்லாத பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தும் பொழுது, புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் மார்க்கெட் மதிப்பில் நான்கு மடங்காக் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரியும்,
6. நெல், கரும்பு, தேங்காய் கொப்பரை மற்றும் அனைத்து விவசாய விளைபொருட்களுக்கு M ஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைபடி உற்பத்தி செலவுடன் 50 சதவிகித லாபம் சேர்ந்து கொள்முதல் விலை நிர்ணயிக்கக் கோரியும்,
7. மழை பொழியை கேள்விக்குறியாக்கிய வேலிக்கருவேல் மரங்களை போர்கால அடிப்படையில் அகற்றவும், மழையை ஈர்க்கக்கூடிய சுற்றுச் சூழலுக்கு உகந்த சுதேசி மரங்கள் (புங்கன், வேம்பு, ஆல், அரசு) அவ்விடத்தில் நடவு செய்து பராமரிக்க கோரியும்,
8. தமிழகத்தை சிக்கிம் மாநிலம் போல் இயற்கை விவசாய மாநிலமாக மேம்படுத்திட தமிழக அரசு காலகெடு நிர்ணயித்து விவசாயத்துறையை முடுக்கிவிடக் கோரியும்,
9. பசுவினங்களை காத்திட மாமிச ஏற்றுமதியை தடை செய், பசுவதை தடைச்சட்டத்தை குஜராத், மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், இராஜஸ்தான், சட்டீஸ்கர் மாநிலத்தில் அமுல்படுத்தியது போல் தமிழகத்திலும் அமுல்படுத்திட கோரியும்
திரு ஆர் சுந்தர்ராஜன், மாநிலத்தலைவர் தலைமையில், திரு M ண் வைத்தியநாதன் மாநில பொருளாளர், திரு எ ண் கலியமூர்த்தி, மாநில செயலாளர் முன்னிலையில், திரு ஸ்ரீகணேசன், அகிலபாரத செயற்குழு உறுப்பினர், திரு T பெருமாள், அகில பாரத செயலாளர், திரு என் எஸ் பார்த்தசாரதி, மாநில செயலாளர், திரு என் டி பாண்டியன், மாநில துணை தலைவர், திரு M ராமமூர்த்தி மாநில துணைதலைவர் சிறப்பு உறையாற்றினார்கள்.