VSK TN
சேது
——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 கர பங்குனி 24 ( 2012, ஏப்ரல் 6)
பதினோரு தலைமுறைகளாக பக்தர்களுக்கு பணிவிடை
சிவனடியார்களான 63 நாயன்மார்கள் திருவிழா தமிழகத்தின் பெரிய சிவாலயங்களில் கொண்டாடபடுவது தொன்றுதொட்டு வரும் பழக்கம். சென்னை கபாலீஸ்வரர் அறுபத்து மூவர் உற்சவத்தில் பங்கேற்க வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அந்தப்பகுதியில் வாழும் பாரம்பரிய தச்சர்களான இரண்டு குடும்பத்தார் நீர்மோர், பானகம் வழங்கி சேவை செய்து வருகிறார்கள். இந்தத் தொண்டு 11 தலைமுறைகளாக ஒரு ஆண்டு கூட தவறாமல் நடந்து வருகிறது. 1860ல் இந்த சேவையை தொடங்கியவர் சடையப்ப ஆசாரி. இவரது இன்றைய வாரிசு 78 வயதான திரு எஸ் ஸ்ரீனிவாசன் கூறுவதாவது: “எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு தலைமுறையிலும் ஒரு மகன்தான். அவரும் இந்த சேவையை தவறாமல் நிறைவேற்றி விடுவார்.” 1875 ல் இந்த சேவையை தொடங்கிய கிருஷ்ணப்ப ஆசாரியின் மகன் பிச்சாண்டி 93 வயதிலும் பக்தர்களுக்கு பணிவிடை செய்து வருகிறார். “இதுவும் ஒரு விதமான வழிபாடுதான்”. இதை நான் கைவிடப்போவதில்லை”. என்று கூறுகிறார் அவர் மகன் பாலு.
மண்டைக்காடு ஒன்றியம்: ஹிந்துக்கள் கையில் உள்ளாட்சி
லக்ஷக்கணக்காண பக்தர்கள் ஒவ்வொரு வருடமும் கொடை திருவிழாவிற்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் கூடுவது வழக்கம். அம்மனை தரிசிப்பதற்கு முன்பு கடலில் குளித்துவிட்டு ஒரு சிறு குடத்தில் தூய்மையான நீர் கொண்டு கோவிலுக்குள் செல்வது பழக்கம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலிலிருந்து கோவிலுக்கு செல்லும் வழியில் கடற்கரை பகுதிகளில் கடைகள் நடத்த ஏலம் விடுவது வழக்கம். கடந்த பல வருடங்களாக இக்கடைகளை கத்தோலிக்க கிருஸ்துவர்கள் மட்டுமே ஏலம் எடுத்து நடத்தி வந்தார்கள். ஹிந்துக்களுக்கு ஏலம் எடுத்து கடை போட இயலவில்லை. இதனால் ஒவ்வொரு வருடமும் அரசாங்கத்திற்கு ரூ. 2 .5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. இந்த முறைகேட்டால் ஹிந்துக்களிடையே வருத்தம் இருந்தது. கட ந்த வருடம் பேரூராட்சி தேர்தலில் ப.ஜ.க 10 வார்டுகளிலும் வெற்றி பெற்றது. பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், “கொடை விழா நடத்துவதற்கு முன் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் பேரூராட்சிக்கு சொந்தமான அனைத்து இடங்களில், தற்காலிக உரிமம் மற்றும் தரை வாடகை வசூல் செய்தால் கரையிலும் வசூல் செய்ய வேண்டும். கரையில் வசூல் செய்தால் தரையிலும் வசூல் செய்ய வேண்டும்”.என்றார். ஹிந்துக்களின் ஒருமித்த குரலுக்கு பல விதமான எதிர்ப்பு வந்த போதும் தளராமல் போராடி வெற்றி பெற்றனர். இந்த முறை அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படாமலும், கிருஸ்துவர்கள் தலையீடு இல்லாமலும் பகவதி அம்மன் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
ராமகோபாலன் தேறிவருகிறார்
குளியல் அறையில் வழுக்கி விழுந்ததால் தோள்பட்டையில் எலும்பு முறிவு, முகத்தில் காயம் ஏற்பட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 85 வயது நிரம்பிய ஹிந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தேறிவருகிறார். அவர் ஒரு மூத்த சங்க பிரசாரக். ஈரோடு அருகே பவானி டவுனில் நடக்க இருந்த தீப பூஜையில் கலந்து கொள்ள அவர் வந்து இருந்தார். டாக்டர்கள் அவரது உடல் நிலை நன்றாக இருப்பதாக தெரிவித்தனர்.