VSK TN
சேது
——————————————————————–
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன ஆடி 13 ( 2012, ஜூலை 28)
சென்னை CLRI முன்வைக்கிறது பயோ-சுத்திகரிப்பு ஆலை
பல காலமாக வேலூர் மாவட்டத்தின் தோல் பதனிடும் தொழிற்சாலைகளின் கழிவுகள் அங்குள்ள நிலத்தடி நீரை மிகவும் மாசுபடுத்திவிட்டது. சுமார் நாள் ஒன்றுக்கு 2400 டன் கழிவுகள் வெளியேறி சுற்று சூழல் மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன. இருப்பினும் ஒரு நல்ல செய்தி. உலகத்திலேயே இந்த கழிவுகளை சுத்திகரிக்கும் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ போகிறது. சென்னையில் உள்ள CLRI (Central Leather Research Institute ) இந்த சுத்திகரிப்பு ஆலையை முதன் முதலில் தயார் செய்த பெருமையை பெற்றுள்ளது. இந்த பயோ-ரிபைனரி மூலம் பயோ-டீஸல், பயோ-எதனோல், பயோ-ஹைட்ரஜன், பயோ-மீதேன் ஆகிய உப பொருட்கள் தயார் செய்ய முடியும். ‘இந்த பயோ-ரிபைனரி மூலம் நாட்டின் எந்த பகுதியிலும் உள்ள கழிவுகளை சுத்திகரிக்க இயலும்’, என்கிறார் சண்முகம் இந்த பயோ-ரிபைனரியை வடிவமைத்தவர். மேலும் இதன் மூலம் மின் உற்பத்தி, பயோ-டீஸல், சமையல் எரிவாயு ஆகியன தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் தேவையற்ற முன்னுரிமைகள்
பிரபஞ்சத்தில் அண்டத்தின் கரு அத்வைதமே என்பதற்கு வலுவான சான்றுகள் உள்ளன. தில்லை நடராஜர் நடனமாடிகொண்டிருக்கும் சிதம்பரமே பிரபஞ்சத்தின் மைய புள்ளி ஆகும். இறைவனின் அண்ட நடனம் பண்டைய கால புராணங்களையும் நவீன இயற்பியலையும் ஒன்றிணைக்கிறது. ஹிக்ஸ் போசனின் ‘கடவுள் துகள்’ (போசன் — சத்யேந்திர நாத் போஸ், ஒரு இந்திய புள்ளியியல் இயற்பியலாளர் பெயரிடப்பட்டது) ஹிக்ஸ் போசனின் ‘கடவுள் துகள்’ (போசன் — சத்யேந்திர நாத் போஸ், ஒரு இந்திய புள்ளியியல் இயற்பியலாளர் பெயரிடப்பட்டது) துணை அணு துகள்களுக்கு வடிவம் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. சோனியாவின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நமது வேத பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளியே கொண்டு வராமல், ஒரு நியுட்ரினோ ஆய்வகம் அமைக்க 12ம் தேசிய திட்டத்தில் 1,350 கோடி ரூபாய் அறிவியல் ஆராய்ச்சிக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
நலிவுற்ற வேத ஆய்வுகளை கண்டு ஆச்சர்யார் மன வேதனை
மத சார்பற்ற அரசின் பிரதிநிதிகள் அதிகாரபூர்வமாக இந்து மத சன்யாசியை வரவேற்றனர். சென்னைக்கு சிருங்கேரி சாரதா பீட ஆச்சார்யர் பாரதி தீர்த்த மகாஸ்வாமிகள் வந்த போது மேயர் சைதை எஸ் துரைசுவாமி மற்றும் நீதிபதி சி நாகப்பன் வேதங்கள் கோஷமிட வரவேற்றனர். 17 வருடங்களுக்கு பிறகு ஆச்சாரியார் சென்னைக்கு விஜயம் செய்தார். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆசி பெற்று செல்கின்றனர். சென்னை ‘சுதர்ம’வில் தங்கி அனுக்ராஹா பாஷணம் செய்து கொண்டிருக்கிறார். சுவாமிஜி, ” 60 ஆண்டுகளுக்கு முன்பு தேனி மாவட்டம் மேலமங்கலம் கிராமத்தில் 120 வேத பண்டிதர்கள் வேத சம்ரக்ஷணம் செய்து வந்தனர். ஆனால் இன்று வேதனைக்கு உரிய விஷயம் என்ன வென்றால் இன்று 3 பண்டிதர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு யாகம் செய்ய வேண்டுமானால் வெளியில் இருந்து ஆட்கள் கொண்டு வர வேண்டியுள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். இந்த கிராமத்தில் 120 வேத பண்டிதர்கள் உருவாக வேண்டும், என்றார்.