news shook the state as Hindu Munnani town secretary Sri Jeevaraj (38) was found
murdered in Sankarankovil, Tirunelveli, near his house. A deep cut in the throat have caused the
death. Police have formed special teams
to nab the killers. Sri Ramagopalan,
Hindu Munnani founder has strongly condemned the inaction of the Government in
safeguarding the Hindu leaders in the state.
காவல்துறையின் மெத்தனப்போக்கைக் கண்டிக்கிறோம்..
வீட்டின் முன்பு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனை இந்து முன்னணி
வன்மையாக் கண்டிக்கிறது. கொலை செய்ய தமிழகத்தில் எந்த பயமும் இல்லை என்ற
நிலையை கொலையாளிகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது காவல்துறை என்பது கவலை
அளிக்கிறது.
கொலை நடந்த பிறகு தனிக்குழு, தனிப்படை அமைக்கும்
காவல்துறை, கொலையாளிகளை உடன் பிடிக்கவும், தண்டிக்கவும் உடனடி
நடவடிக்கையும் எடுத்தால் மட்டுமே கொலைகளைத் தடுக்க முடியும். குற்றம் செய்ய
பயம் வரும்.
ஆனால் தமிழக காவல்துறையின் நுண்ணறிவு பிரிவு வேலை
செய்கிறதா என்பதே தெரியவில்லை. காவல்துறை சுதந்திரமாக செயல்பட
அனுமதிக்கப்படுகிறதா என்பதும் சந்தேகமா இருக்கிறது.
இப்படிப்பட்ட
கொடூர குற்ற செயல்கள் தமிழக முதல்வரின் பார்வைக்குச் செல்கிறதா என்பதை
ஊடகங்கள் தான் மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். ஏனெனில் காவல்துறை
முதல்வரின் கீழ் உள்ளது. முதல்வரின் கண் அசைவிற்காக காவல்துறை காத்து
நிற்கிறதா? அரசாங்கத்தின் அலட்சியத்தால் தனது கடமையிலிருந்து தவறுகிறதா
காவல்துறை? என்ற கேள்விகள் எழுகின்றன.
கடந்த சில வருடங்களில் நடந்த
படுகொலைகளையும், காவல்துறையின் நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டு
பார்க்கையில் தமிழகத்திலா இப்படிப்பட்ட நிலையா என்ற கேள்வி எல்லோரும்
மனதிலும் எழும்! இதற்கு காவல்துறையோ, தமிழக முதல்வரோ பதில் சொல்லாமல்
இருக்கலாம்? காலம் பதில் சொல்லும். என்பதை மறக்க வேண்டாம்! ஜனநாயகத்தில்
மக்கள் தங்களது பதிலையும் ஆட்சியாளர்களுக்கு எதிராக தக்க நேரத்தில் பதிவு
செய்வார்கள்!
காவல்துறை அலுவலகங்கள், நீதிமன்றங்கள்,
மருத்துவமனைகள், மக்கள் நடமாடும் இடங்கள் இவற்றில் படுகொலைகளை பகிரங்கமாக
நிறைவேற்றிவிட்டு, நிதானமாக கொலையாளிகள் தப்பிக்கிறார்கள்.
இந்து முன்னணி இயக்கத்தில் இருப்பவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை தெரிந்தும் காவல்துறை அலட்சியமாக நடந்துகொள்வது எதனால்?
காவல்துறை மீதும், அரசாங்கத்தின் மீதும் மக்கள் நம்பிக்கை இழந்து சட்டத்தை
தங்கள் கையில் எடுத்துக்கொண்டால் அது பேராபத்தாகவிடும் என எச்சரிக்கிறோம்.
சாதாரணமாக குடிநீர் கேட்டு சாலை மறியல் செய்யும் பெண்களிடம் கூட
அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையை ஏற்படுத்த முனைகிறார்களே
ஏன்? மக்கள் அரசு மீது நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்காக! ஆனால் நமது
அரசியல்வாதிகள் இப்படிப்பட்ட படுகொலையின் மீது வாய் மூடி மௌனியாக
நின்றால்,மக்கள் கோபவேசமாக மாறிவிடுவார்கள், நம்பிக்கை இழந்துவிடுவார்கள்!
எனவே, தமிழக அரசும், காவல்துறையும் உடன் நடவடிக்கை எடுத்து கொலைகாரர்களை
கைது செய்ய வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறு கண்காணிப்பை
தீவிரப்படுத்த வேண்டும். சந்தேகத்திற்கு இடமானவர்களை உடனே கைது செய்யவும்,
சந்தேகப்படும் இடங்களில் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் காவல்துறையை கையில்
வைத்திருக்கும் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட வேண்டும் என
இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
சமுதாய சேவையில் தன்னை
இணைத்துக்கொண்டு பணியாற்றிய ஜீவராஜ் மறைவிற்கு இந்து முன்னணி ஆழ்ந்த
இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரை இழந்து வாடும் அவரது
குடும்பதாருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மா
நற்கதி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறது.
என்றும் தேசிய, தெய்வீகப் பணியில்
(இராம கோபாலன்)