VSK TN
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
ராமசேதுவைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க முடிவெடுத்த
தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்;
தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்..
தமிழக முதல்வரைப் பாராட்டுகிறோம்;
தமிழக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்..
சேதுசமுத்திரத் திட்டம், ராமசேது பாதுகாப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுவில் சேதுசமுத்திரத் திட்டத்தைக் கைவிடவும், ராமசேதுவைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இதனை இந்து முன்னணி வரவேற்கிறது. தமிழக முதல்வரின் தெளிவான, துணிச்சலான முடிவைப் பாராட்டுகிறோம்.
உச்சநீதிமன்றம் ராமசேதுவைப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க மத்திய அரசின் கருத்தைக் கேட்டதற்கு, உறுதியான பதிலைத் தராமல், உச்சநீதிமன்றமே முடிவெடுத்துக்கொள்ளலாம் என மழுப்பலாகப் பதில் அளித்தது.
மேலும் பச்சோரிக் கமிட்டியின் அறிக்கை சேது சமுத்திரத் திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது அல்ல என்றும், மாற்றுப்பாதையைப் பொருளாதார ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் செயல்படுத்த முடியாது என்றும் கருத்து கூறிய நிலையில், தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
மத்திய அரசோ பச்சோரி கமிட்டி அறிக்கை மீதான தனது கருத்தைத் தெரிவிக்க இன்னமும் கால அவகாசம் தேவை என்று இழுத்தடிக்கிறது. இந்நடவடிக்கை, மத்திய அரசிடம் இதுகுறித்து தெளிவான கொள்கையில்லை என்பதைப் புலப்படுத்துகிறது.
தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் இதனால் பெரிதும் பாதிக்கப்படும் என்பதும், இந்தச் சேது கால்வாய்த் திட்டம் நடைமுறை சாத்தியமில்லாதது என்ற நிபுணர்களின் முந்தைய கருத்தையும் அறிவுகொண்டு ஆராய முற்படாமல், செயலில் இறங்கியது `அறிவியல்பூர்வமாக ஊழல்’ செய்யவோ என்பது மக்களின் சந்தேகமாக இருக்கிறது.
இந்நிலையில் சேது கால்வாய்த் திட்டம் பற்றி முழு ஆய்வுப் பணியினை மேற்கொள்ளாமலும், மக்களின் கருத்தை அறியாமலும் அவசர கோலத்தில் சிலரது பைகளைப் பணத்தால் நிரப்பவே இத்திட்டம் அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது நிரூபணமாகிறது. எனவே இத்திட்டத்தால் பலன் அடைந்தவர்கள், அதில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.