Press Release by Sri Ramagopalan

19
VSK TN
    
 
     
முஸ்லிம் அமைப்புகளின்
நயவஞ்சக கோரிக்கை..
தவ்ஹித் ஜமாத் எனும் முஸ்லிம்
அமைப்பு அதிமுகவிற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. முஸ்லிம்களுக்கு மாநிலத்தில் 7%, மத்தியில்
10% இட ஓதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்க வேண்டும் என்று
அதிமுகவிற்கு அந்த முஸ்லிம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது நயவஞ்கத்தனமானது. முஸ்லிம்களின்
இந்த மாய வலையில் எந்த அரசியல் கட்சிகளும் வீழ்ந்துவிடக்கூடாது என்று இந்து முன்னணி
கேட்டுக்கொள்கிறது. இப்படி ஆரம்பித்த கோரிக்கையால் தான், முஸ்லிம்களுக்காக பாரதத்தை
வெட்டிப் பிளந்து ஒரு நாடே பிரித்துகொடுக்க வைத்தது. மீண்டும் இந்த கோரிக்கையைமெல்ல
மெல்ல மீண்டும் எழுப்பும் நோக்கம் பிரிவினையின் தோற்றம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
26 முஸ்லிம் அமைப்புகள் இணைந்த
கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் என்னதான் கோரிக்கையை ஏற்பவருக்கு எங்கள் ஆதரவு
என்று ஒவ்வொரு முஸ்லிம் அமைப்பும் கூறினாலும், அவர்களின் கூட்டமைப்பு யாரை முன்னிறுத்துகிறதோ
அவர்களுக்கு தான் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி கிடைக்கும்.
கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும்
இதற்கு முந்தைய தேர்தலிலும் இதுபோன்ற நிலையை எடுத்தனர். திமுக அணியில் ஒரு குழுவும்,
அதிமுக அணியில் ஒரு குழுவும் இடம்பெற்றதோடு, ஆதரித்தன.
உண்மையில் அவர்கள் யாரை ஆதரித்தனர்
என்பது தேர்தலின் முடிவில் தெரிந்தது. அதிமுக அணியில் நின்று வெற்றி பெற்ற மனிதநேய
மக்கள் கட்சி அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அணி மாறி சென்றுவிட்டது என்பதையும் தமிழக
அரசியல்வாதிகள் கவனதில் கொள்ள வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளில், கல்வி உதவித்
தொகையில் மாநில, மத்திய அரசுகள் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும்
வாரி வாரி வழங்கியுள்ளன. மேலும் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் நடத்திட தங்குதடையற்ற
நிதி உதவிகளும், நிர்வாக உதவிகளையும் வழங்குகின்றன அரசுகள். ஆனாலும் இவர்களது பாகாசுர
பசி அடங்குவதாக தெரியவில்லை. இதனை வளரவிட்டால் மீண்டும் ஒரு பிரிவினைக்கு வழிவகுக்கும்.
மத ரீதியிலான இடஒதுக்கீடு என்பது
நமது நாட்டின் அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதனை எல்லா அரசியல் கட்சிகளும் நிராகரிக்க
வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

The Business of Valentine's Day in India

Thu Feb 13 , 2014
VSK TN      Tweet     – Ayush Nadimpalli Every year, the Valentines day becomes a media event. Few days before the day, the media channels take interviews of some people who are branded as “right wing groups”, then follow it up with interviews with police on security and finally hold TV debates whether […]