பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள்
தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்..
கடந்த காலங்களில் மும்பை, டெல்லி, கோவை, காசி எனப் பல இடங்களில் தொடர் குண்டு வெடிப்புகளினால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இதுபோன்ற பயங்கரவாதச் செயல்கள் மீண்டும் நடக்காமல் இருக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கையைப் புலனாய்வுத் துறை எடுத்து வருகிறது. தற்போது புதிய குழு ஒன்றை பெங்களூரில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியிருப்பது நாட்டையே உலுக்கி உள்ளது.
முஸ்லீம் பயங்கரவாதச் செயல்களின் உச்சகட்டமாக இவர்களது திட்டம் உள்ளது. நாட்டில் உள்ள அணுமின் நிலையங்களையும், ராணுவத் தளவாடங்களையும் தகர்க்கவும், நாட்டின் முக்கியத் தலைவர்களைத் தீர்த்துக் கட்டவும், பெரிய அளவில் மதக்கலவரத்தைத் தூண்டவும் திட்டமிட்ட விவரம் தெரியவந்துள்ளது.
இந்தக் குழுவில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு துறையைச் சேர்ந்தவர்களாக இருப்பதிலிருந்து, இதன் பின்புலம் மிகவும் திட்டமிட்ட ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. இந்தக் குழுவினை இயக்கும் அமைப்பு எந்த முஸ்லீம் குழு என்பது இதுவரை வெளியிடப்படவில்லை. இருந்தும் தென் பாரதத்தில் பல முஸ்லீம் அமைப்புகள் புதிது புதிதாக முளைத்து வருவதுடன், அவர்கள் தங்களை முன்னிலைப்படுத்த மற்ற அமைப்புகளோடு தங்களைத் தீவிரமாகக் காட்டிக்கொள்ளவும் முனைந்து செயல்பட்டு வருகிறார்கள். எனவே, மத்திய, மாநில புலானாய்வுத் துறை பயங்கரவாதத்தின் ஆணிவேரைக் கண்டுபிடித்து ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் இத்தகைய செயல்களுக்குப் பொருளாதார உதவியை சௌதி அரேபியா செய்து வருவது முன்பே தெரிந்த விஷயம். தற்போது கைது செய்யப்பட்ட குழுவுக்குப் பயங்கரவாத நடவடிக்கைக்கான பயிற்சியை சௌதி அரேபியா கொடுத்திருக்கிறது. சௌதி அரேபியாவின் பயங்கரவாதிகளுக்கு உடந்தையான விஷயத்தை உலக அளவில் பாரத அரசு கொண்டு சென்று சௌதி அரேபியாவின் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்பாட்டைக் கைவிட வைக்க வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களை அடியோடு அழிக்க வெளிநாட்டு நிதி உதவி, மற்றும் பயிற்சியைத் தடுத்து நிறுத்த கண்காணிப்புடன் கூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திலும் அந்தப் பயங்கரவாதக் குழுவிற்குத் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. சென்னைக்கு மிக அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையமும், விரைவில் செயல்பாட்டிற்கு வர இருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையமும் உள்ளதால் தமிழகக் காவல்துறை இன்னமும் விழிப்போடு செயல்பட வேண்டும்.
பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்ட நிலையிலேயே கண்டுபிடித்து முறியடித்த புலனாய்வுத் துறை, காவல்துறை அதிகாரிகளை இந்து முன்னணி பாராட்டுகிறது.
இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களினால் மதக் கலவரத்தை ஏற்படுத்த முன் ஏற்பாடுகள் செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களும் தங்கள் ஊர்களில், பகுதிகளில், அண்டை அயலார் வீடுகளில் புதிதாகவோ,சந்தேகப்படும்படியோ ஆள் நடமாட்டம் இருந்தால் உடன் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய, அனைத்து மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு பயங்கரவாதத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை முழுமையாக முடிக்கப்பட அரசியல்வாதிகளின் குறிக்கீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பு.