India Ayodhya celebrating the Ram Mandir’s 1st anniversary

VSK TN
    
 
     
ஓராண்டு நிறையும் பூரிப்பில் அயோத்தி பாலராமன் !   
கடந்த ஆண்டு 22-01-2024 அன்று அயோத்தி ராமஜென்ம பூமி ஆலயத்தில் பால ராமன் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதன் ஓராண்டு நிறைவு வரும் ஜனவரி 22ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஓராண்டு நிறைவில் அயோத்தி ராமஜென்ம பூமியின் ஆலயம் மீட்பும் அரை நூற்றாண்டு கால சட்டப் போராட்டமும் கடந்து 500 ஆண்டுகால இழப்பை பாரதம் மீட்டெடுத்த பெருமை மிகுந்த தருணம் அதன் வலி மிகுந்த தியாகத்தோடு சனாதனிகளால் மீண்டும் உணரப்படுகிறது.
 இந்த ஓராண்டு காலத்தில் பாரதத்தின் ஆன்மீக பொக்கிஷமாக உலகில் பாரதத்தின் பெருமிதமான அடையாளமாக அயோத்தி ராமன் ஆலயம் விஸ்வரூபம் எடுத்திருப்பதை ஆலயத்தின் தரவுகள் உலகிற்கு உணர்த்தி இருக்கிறது. 500 ஆண்டுகால இழப்பின் இரண்டாண்டு கால உழைப்பில் உலகில் ஆன்மீக பூமியான பாரதத்தின் ஆன்மாவான சனாதன தர்மத்தின் பெருமிதமான அடையாளமாக உலகையே தன் பக்கம் திருப்பும் பெரும் ஞான பூமியின் பொக்கிஷமாக அயோத்தி மிளிர்கிறது.
 இதுவரையில் உள்நாட்டு மக்களுக்கும் வெளிநாட்டவர் கண்களுக்கும் பாரதத்தின் அடையாளமாக இருந்த தாஜ்மஹால் என்ற அடையாளத்தை பின்னுக்குத் தள்ளி வெளிநாட்டவர்களின் விருப்பத்திலும் உள்நாட்டு மக்களின் தேர்விலும் முதலிடத்தில் அயோத்தி இடம் பெறுகிறது. கடந்த ஓராண்டில் அயோத்தி ராமன் ஆலய பிரதிஷ்டை முடிந்த 2024 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதத்தில் 110 மில்லியன் மக்கள் அயோத்தி ஆலயத்தை தரிசனம் செய்ததாக இணையதள தரவுகள் தெரிவிக்கிறது.
  ஓராண்டு நிறைவடையும் தருணத்தில் இதுவரையில் 135 மில்லியன் மக்கள் தரிசனம் செய்திருக்க கூடும் என்று சில தரவுகள் தெரிவிக்கிறது. இதில் மாற்று மதம் சார்ந்த கணிசமான சர்வதேச சுற்றுலா பயணிகளும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரதம் அடைந்த புகழ்!
 இந்த உலகில் எந்த ஒரு நாடும் இதுவரையில் தான் இழந்த பண்பாடு கலாச்சார அடையாளங்களையும் அல்லது தேசத்தின் பூர்வீக விழுமியத்தையோ முழுமையாக மீட்டெடுத்ததாக வரலாறு இல்லை. ஆனால் அந்த வரிசையில் உலகில் 500 ஆண்டுகள் முன்பு தான் இழந்த ஒரு ஆன்மீக பொக்கிஷத்தை பாரதம் முழுமையாக மீட்டெடுத்த முதல் நாடு என்ற பெருமிதத்தோடு உலகில் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கிறது.
மறுப்புறம் மன்னர் ஆட்சி காலத்தில் வல்லாண்டு வகுத்ததே மீதி என்று அன்னிய படையெடுப்பின் ஆக்கிரமிப்பில் கொடூரமான ஆயுத பிரயோகத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிர் கொடுத்தும் காக்க முடியாத ஆலயத்தை இழந்த வலியோடு 500 ஆண்டுகள் போராட்ட வாழ்வு 50 ஆண்டுகால சட்ட போராட்டம் நடத்தி நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் ஒத்த கருத்தை உருவாக்கி யாருடைய எதிர்ப்பும் யாருடைய புண்படுத்துதலும் இல்லாமல் இதன் காரணமாக மன வருத்தம் அடையும் தரப்பிற்கும் கூட அவர்களுக்கும் உரிய நிவாரணத்தை வழங்கி நாங்கள் இழந்ததை மீட்கிறோம் தவிர யாரையும் புண்படுத்தும் எண்ணம் இல்லை என்ற சனாதன தர்மத்தின் உச்சம் காட்டி நிற்கிறது பாரதம்.
எந்த அந்நிய படையெடுப்பில் அயோத்தி சிதைந்ததோ ? அதன் வம்சம் இன்றும் இந்தியாவில் வாழ்வதும் அவர்களாக மனமுவந்து அயோத்தி ஆலயத்திற்கு தங்கம் வெள்ளி பணம் என்று வாரி வழ்ங்கியதும் இசுலாமிய நாடுகளில் இருந்து கூட அயோத்தி இராமனுக்கு ஆபரணங்கள் உள்ளிட்ட காணிக்கை தனி விமானத்தில் வந்து குவிந்ததும் உலகின் ஆன்மீக குருவான பாரதத்தின் பெருமிதத்தின் சாட்சியங்கள்.
 எல்லோரையும் வாழ வைக்கும் எல்லோருக்கும் தர்மத்தையும் ஞானத்தையும் மட்டுமே வழங்கும் தாய் பூமி பாரதம் என்பது இன்றளவும் உலகில் மெய்ப்படுகிறது. அதன் காரணமாகத்தான் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஞானமும் தர்மமும் மோட்சமும் வேண்டுபவர்கள் ஜாதி மத இன மொழி பேதம் கடந்து பாரதத்தை நோக்கி நகர்கிறார்கள்.
 தமிழகத்தின் பங்கு !
அயோத்தியில் பிறந்து இலங்கையில் தன் கருமத்தை முடித்து மீண்டும் அயோத்தியில் முடிசூடி வாழ்ந்திருந்தாலும் ராமனுக்கு அயோத்திக்கு அடுத்தபடியாக மிகுந்த பிணைப்பும் பங்களிப்பும் வழங்கிய தர்ம பூமி தமிழகமே. ஆம் தன் தேவியை பிரிந்து காடும் மேடும் அலைந்த ராமனுக்கு அவள் இலங்கை என்னும் தீவிற்கு கடத்தப்பட்டதை ஜடாயுவின் மூலம் உணர்ந்து அந்த புண்ணிய ஆத்மாவின் இறுதிச்சடங்கையும் தன் கரங்களாலே செய்து முடித்த திருப்புட்குழி எனும் திவ்ய தேசம் அமைந்திருப்பதும் இந்த தமிழகத்தில் தான்.
தன் மனைவியை மீட்டெடுக்க தீவிற்கு பாலம் கட்ட தொடங்கியதும் சேது கரையிலிருந்து சேனைகள் உடன் இருக்க தன் யுத்த பிரகடனத்தை தொடங்கியதும் தமிழகத்திலிருந்து தான். எடுக்கும் காரியம் வெற்றிகரமாக முடிய அதர்மம் அழிந்து தர்மத்தை நிலை நாட்ட தனக்கு தெய்வ அனுக்கிரகம் வேண்டி மகா சக்தியாம் மகிஷாசுரமர்த்தினியை வணங்கியதும் தன் கரங்களால் நவகிரகங்களை பிரதிஷ்டை செய்து வணங்கிய புண்ணிய பூமி தேவிபட்டினம் இங்கு தான் இருக்கிறது.
 இராமனுக்கு இதுதான் வழி இப்படித்தான் முன்னேறிச் செல்ல வேண்டும் என்று வழிகாட்டிய உப்பூர் விநாயகர் முதல் சமுத்திர மகாராஜனை கட்டி வைத்து கடலில் பாலம் கட்ட துணை நின்ற திவ்ய தேசமாம் திருப்புல்லாணி வரை இங்கு தான் இன்றளவும் இராமன் பேர் பாடுகிறது.
 இலங்கையில் ராவண வதம் முடிந்து திரும்பிய விஜயராமனுக்கு அவனது பிரம்மஹத்தி தோஷம் விலக சீதா தேவி சமேதராய் சிவலிங்க பிரதிஷ்டை செய்த பூஜித்த ராமேஸ்வரம் ராமநாத ஈஸ்வரன் என்னும் புண்ணிய தலம் மிகுந்தது ஆன்மீக பூமியான தமிழகம்.
  ராமனின் வாழ்வில் முக்கியமான தருணங்களையும் பெருமிதமான பங்களிப்புகளையும் வழங்கிய பூமி என்பதால் தான் அவன் பாதம் பட்ட இந்த புண்ணிய பூமியில் அவனுக்காய் ஆயிரம் ஆலயங்கள் அவன் பக்தியின் உறைவிடமாக பக்தர்களை இன்றும் அரவணைக்கிறது.
தர்மத்தின் உறைவிடமான அந்த ராமனின் பாதம் பட்ட புண்ணியம் இன்னும் இந்த பூமியில் இன்னும் இந்த மக்களின் மனதில் ஆழ்மனதில் புதைந்திருப்பதால் தான் அயோத்தி ராமனுக்கு காணிக்கை என்று வரும்போது அதுவும் சுய விருப்பத்தின் பெயரில் காணிக்கை என்ற சூழல் இருந்த போதும் பாரதத்திலேயே அயோத்தி ராமனுக்கு அதிக அளவு காணிக்கை கொடுத்ததில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கிறது. அயோத்தி ராமனுக்கு தமிழகத்தின் மண்ணில் மட்டும் இடமில்லை. இங்குள்ள மக்களின் மனதிலும் என்றைக்கும் நீங்காத பக்தியும் அன்பும் உண்டு என்பதற்கு கண் கண்ட சாட்சியம் தான் அயோத்தி ஆலயத்திற்கு குவிந்த தமிழகத்தின் காணிக்கை.
இந்த பக்தியையும் அயோத்தி ராமனின் மகத்துவத்தையும் உணராத நாலாந்தர அரசியல்வாதிகள் தமிழகத்திற்கும் ராமனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ராமன் ராமாயணம் எல்லாம் கட்டுக்கதை என்று அரசியல் காரணங்களுக்காக வாக்கு வங்கி அரசியலுக்காக வாய்க்கிழிய பேசலாம். ஆனால் அவர்களின் ஊரிலும் அந்த ராமன் குடி கொண்ட அவன் வரலாறு பேசும் ஆலயங்கள் உண்டு என்பதும் அவர்கள் வாழ்விலேயே தேர்தல் வெற்றிக்காக அவர்கள் அதே ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதும் அவர்களே உணராத கசப்பான உண்மை.
பொருளாதார முன்னேற்றம்.
முன்னோர்கள் ஆக்கி வைத்த ஆலயங்கள் எல்லாம் வெறும் ஆன்மீக உறைவிடங்கள் அல்ல. கலை இலக்கியம் பண்பாடு சார்ந்த பொக்கிஷங்கள் மட்டுமல்ல. அதை அனைத்தையும் கடந்து அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்பதை கண்முன்னே மெய்ப்பித்து வருகிறது அயோத்தி ராமன் ஆலயம். இந்த ஓராண்டில் ஆலய பிரதிஷ்டை காரணமாக அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் ஆலய தரிசனம் வேண்டி வருவதும் அதன் காரணமாக முன்பு எப்போதும் இல்லாத அளவில் அங்கு உணவகங்கள் சிற்றுண்டி தங்கும் விடுதிகள் உள்ளூர் போக்குவரத்து மேம்பட்டு அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் தனிநபர் வருவாய் பெருமளவு உயர்ந்திருப்பதும் கண்கூடான உண்மை.
அரசின் பங்களிப்பு இல்லாமல் முழுவதும் பக்தர்கள் காணிக்கை மட்டுமே மூலதனமாக கொண்டு உருவானது தான் அயோத்தி இராமன் ஆலயம். ஆனால் அந்த ஆலய தரிசனம் வேண்டி வரும் மக்கள் மூலம் வரும் வருவாய் உத்தர பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் வாழ்வளிக்கும் கற்பக விருட்சமாக வளர்ந்து நிற்கிறது.
இந்த ஆன்மீக தரிசனம் காரணமாக பெருமளவில் மக்கள் கூடுவதால் அங்கு உணவு பொருள் உற்பத்தி தொடங்கி அனைத்து தொழில் வியாபாரமும் முன்னே எப்போதும் இல்லாத அளவில் பெரும் உச்சம் தொடுவது அங்கு இந்த ஆலயமும் அது சார்ந்த இன்னும் அருகருகே இருக்கும் சுற்றுலாக்களும் கூடுதலாக மக்கள் வருகை அதிகரிப்பதும் அதன் காரணமாக அந்தந்த பகுதிகளிலும் உள்ளூர் வியாபாரிகள் பொதுமக்கள் பெரும் வாழ்வாதாரம் பெறுவதும் இது போன்ற ஆலயங்கள் என்றைக்கும் நம் மக்களை வாழ்விக்கும் நித்திய வாழ்வாதாரங்கள் என்ற உண்மையில் மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தி இருக்கிறது.
 பெரும் மக்களை கையாளும் விமான நிலையங்கள் மிகப்பெரிய ரயில் முனைமங்கள் அமைவதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்குமே போக்குவரத்து தொடங்கி உள்கட்டமைப்பு வசதிகள் வரை கிடைப்பதோடு பெருவாரியான தொழில் உற்பத்தி சார்ந்த தொழில்கள் உள்ளூர் வியாபாரம் தொடங்கி நட்சத்திர விடுதிகள் வரை அனைத்தும் அனைத்து தரப்பு மக்களுக்கும் வாழ்வளிக்கும் வகையில் அயோத்தி அக்ஷய பாத்திரமாக வளர்கிறது.
அரசு கையாண்ட விதம்.
மத்தியிலும் மாநிலத்திலும் சனாதன தர்மத்தை மதிக்கும் அரசுகள் இருந்த போதிலும் நாம் இழந்ததை பெரும் வலியோடு நாம் கடந்து வந்த போராட்டத்தை வெற்றி கரமாகி நம் ஆன்மீக பொக்கிஷத்தை மீட்டு இருக்கிறோம் தவிர நாம் யாரையும் தோற்கடித்ததாக இல்லை. அதனால் எந்த தரப்பிற்கும் மனவேதனையோ சங்கடமும் வந்து விடக்கூடாது என்பதை அயோதி இராமன் ஆலயம் இந்த தேசத்தின் அனைத்து மக்களுக்குமான ஆன்மீக அடையாளம் அது மாபெரும் இழப்பை மீட்டெடுத்த பெரும் வெற்றியாயினும் அது தேசத்தின் அனைவருக்கும் ஆனது என்ற பொதுவான ரீதியில் தான் மத்திய மாநில அரசுகள் கையாண்டது. அதன் காரணமாக தனிப்பட்ட முறையிலான கொண்டாட்டங்கள் சர்ச்சைகள் சங்கடங்கள் எழாமல் மிகுந்த கவனத்தோடு மத்திய மாநில அரசுகள் பொறுப்பாக நடந்து கொண்டதன் விளைவுதான் மாற்று மதம் சார்ந்தவர்களும் அதன் பின்னணியின் அரசியல் கொண்டவர்கள் கூட ஆலயத்திற்கு பெரிய அளவில் எதிர்ப்பு இடையூறு செய்யாமல் அமைதியாக ஒதுங்கி வழி விட காரணமாக இருந்தது. அவ்வகையில் மத்திய மாநில அரசுகள் கொடுத்த ஒத்துழைப்பும் இந்த விஷயத்தை கையாண்ட விதமும் உலகையே ஆச்சரியப்பட வைத்தது என்றால் அது மிகையல்ல.
இந்த பொறுப்பை உணர்ந்ததால் தான் லட்சக்கணக்கில் கூடும் மக்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை விமான நிலையம் ரயில் நிலையம் சிறப்பு உள்கட்ட அமைப்புகள் என்று போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது
குறிப்பாக உத்தரப்பிரதேசம் மாநில அரசு நாடு முழுவதிலும் இருந்து வரும் உள்நாட்டு பக்தர்கள் முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் வரை யாவரும் சிரமமின்றி சௌகரியமாக அயோத்தி யாத்திரையை பூரணமாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக உள்கட்ட அமைப்புகள் தொடங்கி பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை இரவு பகலாக வேலை பார்க்கிறது என்பதை நிதர்சனமான உண்மை.
கடந்த ஓராண்டு காலமாக திருமலை திருப்பதியை விடவும் கூடுதலான பக்தர்களை கையாண்ட போதிலும் எந்த விதமான சிரமம் அசோகரின் அசம்பாவிதம் இன்றி அயோத்தி ராமன் யாத்திரையை நிர்வகிப்பதே மத்திய மாநில அரசுகள் அயோத்தி விஷயத்தின் எவ்வளவு பொறுப்பாக விழிப்பாக இருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம்.
பக்தர்கள் கரசேவகர்கள் ஈடுபாடு தியாகம்.
 500 ஆண்டுகால இழப்பை பெரும் வழி தியாகம் கடந்த நீண்ட நெடிய போராட்டத்தின் பலனாக இன்று அயோத்தியில் பால ராமன் ஆலயம் கம்பீரமாக எழுந்து நிற்பது உலகத்திற்கு தெரியும். ஆனால் இந்த ஆலயத்திற்காக கடந்து வந்த பலி தானங்கள் இழப்புகள் வலிகள் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் மறையாத வடுக்களே.
அயோத்தி ராமன் ஆலயத்தை காக்க அன்றைய நாளில் உயிரிழந்த மக்கள் மன்னர்கள் தொடங்கி மீண்டும் அயோத்தியில் எங்களின் ராமன் எழுந்தருளும் வரையில் காலில் காலணியும் தலையில் தலைப்பாகையும் அணிய மாட்டோம் என்று தங்களின் சுய அடையாளத்தையே இழந்து பல தலைமுறைகளாக மனவேதனையோடு மன உளைச்சலோடு வாழ்ந்த ரகு வம்சத்தினர் மீண்டும் அயோதிய இராமன் பாலபிரதத்தை ஆன நாளில் காலணியும் தலைப்பாகையும் அணிந்து தங்கள் முன்னோரின் இழப்பை தங்கள் தலைமுறை மீட்டெடுத்த நிகழ்வு உலகையே கண்ணீரில் நெகிழ வைத்தது.
 அயோத்தி ஆலயத்தின் மீட்புக்காக பெரும் கர சேவையை முன்னெடுத்த போது அயோத்தி ராமனின் ஆலயத்திற்காக கர சேவை செய்த காரணமாக சரயு நதியின் சடலமாக மிதந்த பலி தானிகளின் உயிர் தியாகம் இன்றளவும் மாறாத துயரம்.
 அயோத்தி பலிதானம் முதல் அந்த அயோத்தி ராமன் ஆலய ஆதரவு நிலைப்பாடு அதன் போராட்டத்தில் பங்களிப்பு வழங்கிய காரணமாக கரா சேவையில் ஈடுபட்ட காரணமாக நாடு முழுவதும் தேடி தேடி கொல்லப்பட்ட பலிதானிகள் உள்ளிட்ட எண்ணற்ற சனாதனிகளின் ஆன்மா அந்த பால ராமனின் பாதங்களில் இன்று நிச்சயம் அமைதி அடையும்.
ஆலயத்திற்காக பலி தானங்களும் சட்டப் போராட்டமும் பெரும் களப்போராட்டமும் ஒரு புறம் என்றால் மறுப்புறம் என் அயோத்தி ஆலயம் மீண்டு எடும் வரை மௌன விரதம் இருப்பேன் என்பதும் ஒருவேளை மட்டுமே உண்பேன் என்றும் எண்ணற்ற பக்தர்களின் ஆழ்மனதில் இருந்த பக்தியும் ஈடுபாடும் தான் இத்தனை இடர்பாடுகளையும் கடந்து மீண்டும் அயோத்தியில் பால ராமனை பிரதிஷ்டை செய்திருக்கிறது என்பதே உண்மையான பக்தியின் வலிமை எத்தகையது? என்பதற்கான சாட்சியம்.
 சட்டப் போராட்டத்தின் முக்கியமான தருணங்களில் இதற்கு நமக்கு விடை தெரியாதே? நாம் எங்கே போய் தேட முடியும் ? என்று பரிதவித்த நேரத்தில் இதோ நான் இருக்கிறேன். எனக்கு இதன் முழு விபரங்கள் தெரியும் என்று வேதங்கள் உபநிஷதங்களில் இருந்து அத்தனை தரவுகளையும் நீதிமன்றத்திற்கு எடுத்துரைத்து இந்த வழக்கின் போக்கையே மாற்றி அமைத்த ஒரு பரம சாது இரண்டு விழிகளும் பார்வை இழந்தவர் என்பதில் இருந்தே அவரின் ஞானக்கண் எவ்வளவு வலிமையானது? அவர்கள் குடி கொண்ட அந்த பக்தியும் தர்மமும் எவ்வளவு மகத்துவமானது? என்பதை இந்த உலகிற்கு உணர்த்தும்.
90 வயதை கடந்து விட்டீர்கள். தயவு செய்து நீங்கள் அமர்ந்து கொண்டே வழக்கை முன்னெடுத்து போகலாம் என்று நீதிபதிகளே வேண்டுகோள் வைத்த போதிலும் என் வாழ்நாளின் கடைசி வழக்காக இதை எடுத்துக் கொண்டிருக்கிறேன். என் ராமனுக்காக நான் வழக்காடுகிறேன். என் ராமனுக்காக நான் எத்தனை மணி நேரமும் நின்று கொண்டே வாதாடுவேன் என்று காலில் காலணி அணியாமல் இருக்கையில் அமராமல் ராம பக்தியின் துணையோடு அனுமனின் ஆசியோடு இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த வழக்கறிஞர் பராசரன் என்பவரின் பக்தியும் ஞானமும் அவரின் தர்மமும் இந்த சட்டப் போராட்டத்தின் வெற்றியை பறைசாற்றும் கீர்த்தியாக வரலாற்றில் நிலைபெறும்.
ராமன் இருக்கும் இடமெல்லாம் அவன் பெயர் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமனும் நிறைந்திருப்பார் என்பதன் அடையாளமாக ராமனின் வழக்கை நடத்தும் நீதிமன்றங்களில் கூட வானரக் கூட்டங்கள் நிறைந்து இருந்ததும் நீதிபதிகளின் வீடுகளிலும் வானரமாக ஹனுமன் காட்சி தந்து ராமனுக்கு சாட்சியாக ராம பக்தர்களுக்கு துணையாக சட்ட போராட்டத்திலும் களப்போராட்டத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு ஆத்ம பலமாக இருந்து வழி நடத்தியதும் கலியுகத்தில் கூட பக்திக்கு சக்தி உண்டு ஆழ்ந்த அன்பிற்கும் கபடில்லாத தர்மத்திற்கும் நிச்சயம் வெற்றி உண்டு என்பதை இந்த உலகிற்கு உணர்த்தியது.
வானாளாவ உயர்ந்து நிற்கும் அயோத்தி ராமனின் ஆலயம் வெறும் கலையம்சம் பொருந்திய ஆன்மீக உறைவிடம் மட்டுமல்ல. அது இந்த பூமியின் தர்மத்தின் ஞானத்தின் அடையாளம் மட்டுமல்ல. அந்த ஞானமும் தர்மமும் இந்த பூமியின் தேசியமும் என்றைக்கும் பெருமிதத்தோடு நிலைபெற வேண்டும். அதை ஆக்கிரமிக்கவோ அழிக்கவோ அனுமதிக்க கூடாது என்று காலம் காலமாக தன் உயிர் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்து என் ராமனுக்காக ! என் ஆலயத்திற்காக ! என் தெய்வீகத்திற்காக! என் தேசியத்திற்காக! என்று அனைத்தையும் இழந்த அந்த புண்ணிய ஆத்மாக்களின் ஆத்ம பலமும் தான் இன்று அயோத்தி ஆலய கோபுரமாக வானளாவ உயர்ந்து நிற்கிறது என்ற உண்மையை உணர்ந்தால் வரலாற்றின் படிப்பினையை உணர்ந்தால் எதிர்காலத்தில் இனி மீண்டும் இது போன்ற ஒரு இழப்பு நேராமல் தடுக்க முடியும்.
 எதிர்காலத்தில் நம் சந்ததிகள் இது போன்ற ஒரு போராட்டத்தை இழப்பை மீண்டும் எதிர்கொள்ளாமல் காப்பாற்றவும் முடியும் என்ற படிப்பினையையும் அயோத்தியின் ஒரு ஆலயம் மீண்டு எழும் போது தேசம் இவ்வளவு வளர்ச்சி புகழ் பெருமிதம் பெரும் எனில் இழந்த யாவும் மீண்டும் எழுந்தால் பாரதத்தின் வளமும் பலமும் பெருமையும் எப்படி இருக்கும்? என்ற கேள்வியோடும் சனாதனிகளுக்கு வாழ்நாள் படிப்பினையாக உயர்ந்த நிற்கிறது அயோத்தி ராமனின் ஆலயம்.
ஜெய் ஹிந்த் !
ஜெய் ஸ்ரீ ராம்.!
திருமதி.ஜான்சி ராணி

Next Post

The Train, the Telegraph, and Saminathan – A Wonder!

Wed Feb 19 , 2025
VSK TN      Tweet    உ வே சா பிறந்த நாள் சில நினைவுகள் ………….. ரயிலும் தந்தியும் சாமிநாதுவும் அதிசயமே ……. ஆனந்த வருஷத்தில் நிகழ்ந்த அதிசயங்களில் பாரத தேசத்திற்கு வந்த புகைவண்டியும் தந்தி பேசியும் மிகப்பெரிய விஷயங்களாக பேசப்பட்ட பொழுது அதே வருடத்தில் பிறந்த தன் குழந்தை வேங்கடரமணன் (பிற்காலத்தில் சாமிநாத ஐயர் என்று தன் ஆசிரியரால் பிரியமாக அழைக்கப்பட்டவர் ) பெரிய அதிசயம் என்று தன் தாயார் கூறுவார் என்பதை […]