சுமார் 7500 கிலோமீட்டர் நீளமான கடற்கரை மற்றும் அதன் பெயரிடப்பட்ட ஒரு பெருங்கடலுடன், இந்தியா அளப்பரிய கடல் வளங்களைக் கொண்டுள்ளது. நீலப் பொருளாதாரத்திற்கான நமது நீண்ட காலத் திட்டங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல், கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல், மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வேலை உருவாக்கம் ஆகியவற்றைக் திட்டமிட வேண்டும். 3வது உலகப் பெருங்கடல் அறிவியல் காங்கிரஸ் (WOSC 2024), பிப்ரவரி 27 முதல் 29 வரை சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நீலப் பொருளாதாரத்தில் பெருங்கடல்களின் நிலையான பயன்பாடு என்ற மையக் கருப்பொருளுடன் திட்டமிடப்பட்டுள்ளது. கடல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சவால்களைத் தணிக்கும். காலநிலை மாற்றம், பாதுகாப்பை உறுதி செய்தல், தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக கடலோர சமூகங்களை ஒன்றிணைத்தல். வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சவால்களின் பின்னணியில், கொள்கை
மற்றும் தேவையும் விவாதிக்கப்படும்.
WOSC 2024, இஸ்ரோவின் முன்னாள் தலைவர் டாக்டர் ஏ எஸ் கிரண் குமார். ஏஐசிடிஇ தலைவர் டாக்டர். ஜி சீதாராம், கடல்சார் பாரம்பரிய வளாகத்தின் பொது இயக்குனர் டாக்டர் வசந்த் ஷிண்டே, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் மாலினி வி ஷங்கர் மற்றும் பேராசிரியர் ஆர் முரளி, சென்னை ஐஐடி போன்ற நாட்டின் புகழ்பெற்ற விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் நிர்வாகிகளின் அறிவியல் அமர்வுகள், முழுமையான விரிவுரைகள் ஆகியவற்றை உள்ளடக்கும் பெருங்கடல் உச்சி மாநாட்டில் பல்வேறு இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் மற்றும் இந்தியாவின் கடலோர மாநிலங்களில் இருந்து மீனவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் சந்திப்பு, தொடக்கால பெருங்கடல் வல்லுநர்களுக்கான (ECOP), குழு விவாதங்கள் மற்றும் கண்காட்சி நடைபெறும். கடல் ஆய்வு, வளங்கள், அவதானிப்புகள் மற்றும் இந்தியாவின் கடல்சார் வரலாறு உள்ளிட்ட கடல் தொடர்பான பல்வேறு களங்களில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களை கண்காட்சி வெளிப்படுத்தும். கண்காட்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குகாக திறந்திருக்கும், பல்வேறு கடல் சார்ந்த களங்களின் கண்ணோட்டத்தையும் வழங்கும்.
WOSC 2024 ஐ தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), சென்னை, விஞ்ஞான பாரதி மற்றும் ஐஐடி மெட்ராஸ் மற்றும் புவி அறிவியல் அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இது நிலையான வளர்ச்சிக்கான ஐ.நா. பத்தாண்டு கடல் அறிவியலின் நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. INCOIS, ஹைதராபாத், NCPOR, கோவா, IITM, புனே, CMLRE, கொச்சி , திருவனந்தபுரம் ,ICAR CMFRI, CSIR NIO, AICTE மற்றும் Ocean Society of India உள்ளிட்ட பல்வேறு MoES நிறுவனங்கள் WOSC 2024 இன் வெற்றிக்காக ஒத்துழைக்கின்றன.
இது 27 பிப்ரவரி 2024 அன்று காலை 10.00 மணிக்கு திறக்கப்படும். ஸ்ரீ டி கே ராமச்சந்திரன், செயலர், இந்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், டாக்டர் என் கலைசெல்வி, டிஜி, சிஎஸ்ஐஆர், டாக்டர் சேகர் மாண்டே, தலைவர், விஞ்ஞான பாரதி & முன்னாள் டிஜி, சிஎஸ்ஐஆர், பேராசிரியர் வி காமகோடி விழிநாதன், இயக்குனர், ஐஐடி, மெட்ராஸ், டாக்டர் ரஞ்சித் ராத், சிஎம்டி, ஆயில் இந்தியா லிமிடெட், ஸ்ரீ மது எஸ் நாயர், சிஎம்டி, கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட், டாக்டர் ஜி ஏ ராமதாஸ், இயக்குனர், என்ஐஓடி மற்றும் டாக்டர் சதீஷ் சந்திர ஷெனாய், துணைத் தலைவர் விஜ்ஞான பாரதி & முன்னாள் இயக்குனர், INCOIS விழாவை சிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 28ஆம் திகதி நடைபெறவுள்ள சமுத்திர உச்சி மாநாடு, புவி அறிவியல் அமைச்சின் செயலாளர் Dr. M ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.
பிப்ரவரி 29 ஆம் தேதி நடைபெறும் இந்த நிறைவு விழாவை, மாநில மீன்வளத்துறை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஸ்ரீ எல் முருகன்,இந்தியாவின் டாக்டர். வி.கே. சரஸ்வத் உறுப்பினர், நிதி ஆயோக், பத்மஸ்ரீ டாக்டர் ஷைலேஷ் நாயக், இயக்குனர், தேசிய மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனம், பெங்களூரு, முன்னாள் செயலாளர், MoES, மற்றும் டாக்டர். பி எஸ் கோயல், முன்னாள் செயலாளர், MOES இந்த நிகழ்வை சிறப்பிப்பார்கள்.