மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான சமீபத்திய வன்முறை சம்பவங்களுக்கு ராஷ்ட்ர சேவிகா சமிதியின் அகில பாரதிய காரியகாரிணி மற்றும் பிரதிநிதி மண்டல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் பெண்களின் அவலநிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் தீர்மானத்தை சமிதி நிறைவேற்றியது மற்றும் மத்திய அரசு மற்றும் சட்ட அமலாக்க துறைகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பிப்ரவரி 25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், சந்தேஷ்காலியில் நடந்த பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாகரீக சமுதாயத்தின் முகத்தில் ஒரு கறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதில் மேற்கு வங்க அரசு செயல்படாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 பர்கானாஸ் மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் நடந்த சம்பவங்கள்,எல்லை பகுதிகளில் சட்டவிரோத ஊடுருவி வரும் நபர்களால், சமூகப் பதட்டங்கள் அதிகரித்து, சமுதாய சீர்குலைப்பு ஆகியவை இவர்களின் முயற்சிகளால் தூண்டப்படுகின்றன – இது நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது. உச்சநீதிமன்றம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய பட்டியல் சாதி ஆணையம் போன்ற அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தாலும், மாநில அரசு சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது மட்டுமின்றி, அலட்சிய மனப்பான்மையையும் வெளிப்படுத்தி வருகிறது.
சமீப ஆண்டுகளில் இப்பகுதி சமூக பதட்டத்தை அதிகரித்து வருகிறது, சட்டமின்மை, சமூக விரோத சக்திகளின் செயலில் பங்கேற்பு, சட்டவிரோத ஊடுருவல்கள் மற்றும் சமுதாய சீர்குலைக்கும் முயற்சிகள் ஆகியவற்றால் கறை படிந்த சூழல் ஏற்படுகிறது. பெண்களை பாதுகாக்கவும், சமூக நீதியை வழங்கவும் அரசு நிர்வாகம் தவறி இருப்பது கவலைக்குரியது.
உயர்நீதிமன்றம் மற்றும் பல்வேறு தேசிய கமிஷன்கள் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தினாலும், குற்றவாளிகளுக்கு எதிராக மாநில அரசு போதுமான நடவடிக்கை எடுக்கத் தவறியதும், முழுப் பிரச்சினையையும் வகுப்புவாதமாக்கும் முயற்சிகள் இழிவான மனநிலையை பிரதிபலிக்கின்றன. பெண்களைப் பாதுகாப்பதிலும் சமூக நீதியை நிலை நிறுத்துவதிலும் நிர்வாகத்தின் இயலாமை தெளிவாகத் தெரிகிறது.
ஷேக் ஷாஜஹான் போன்ற குற்றவாளிகளால் அப்பாவிப் பெண்களை கற்பழித்து கொடூரமான சம்பவங்கள், அத்தகைய குற்றவாளிகளுக்கு மாநில அரசாங்கத்தின் பெற் ஆதரவால் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குரல் கொடுக்கும் ராஷ்ட்ர சேவிகா சமிதி, மாநில அரசின் அயோக்கியத்தனத்தை வன்மையாகக் கண்டிப்பதோடு, மத்திய அரசு, காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் அனைத்தும் , தவறு செய்தவர்கள் மீது விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவின் அவசியத்தை சமிதி வலியுறுத்துகிறது மற்றும் ஒரு மறுவாழ்வுத் திட்டத்திற்கு கோரிக்கை விடுக்கிறது.
அநீதிக்கு எதிராக குரல் எழுப்பும் துணிச்சலான பெண்களுக்கு சமிதி தனது ஆதரவை வழங்குகிறது. மேற்கு வங்கம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெண்கள் அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக அவர்களுக்கு உறுதியளிக்கிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை உடனடியாக நிறுத்துமாறு சமிதி கேட்டுக்கொள்கிறது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்திக்கிறது.