ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜூலை 12 முதல் 14 வரை ஆர்.எஸ்.எஸ்ஸின் மாநில அமைப்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஊடகப்பிரிவு பொறுப்பாளர் சுனில் அம்பேகர் கூறியதாவது; நாட்டில் ஏராளமான இளைஞர்கள் சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இணையவும் செய்கிறார்கள். 2012 ல் சங்கம் ‘’ஜாயின் ஆர்.எஸ்.எஸ்’’ என்ற இணையதளத்தை தொடங்கியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பேர் வரை சங்கத்தின் பல்வேறு செயல்பாடுகளில் இணைகின்றனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை 66,529 பேர் தொடர்பு கொண்டு சங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு முதல் சங்க பண்பு பயிற்சி முகாம்களின் பாடத்திட்டங்கள் அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 40 வயதுக்குட்பட்ட ஸ்வயம்சேவகர்களுக்காக நாடு முழுவதும் மொத்தம் 72 முகாம்கள் நடைபெற்றன. மொத்தம் 20,615 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சி பெற்றனர். 40 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்காக நடத்தப்பட்ட 18 முகாம்களில் 3,335 ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்றனர்.
விஜயதசமி 2025 ஆண்டின் முடிவில் ஆர்.எஸ்.எஸ் தொடங்கி நூறு ஆண்டுகள் நிறைவடையும். அப்போது ஆர்.எஸ்.எஸ் அனைத்து கிராமங்களிலும் நகர்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளிலும் சங்கத்தின் பணிகளையும் தினசரி ஷாகாக்களையும் விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 73, 117 ஷாகாக்களும் 27,717 வார கூடுதல்களும் நடைபெற்று வருகின்றன. இது தவிர ஆர்.எஸ்.எஸ் பத்திரிகை மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் சாதுக்கல் சந்நியாசிகளின் மூலம் ஆன்மிக கருத்துகளையும் செய்திகளையும் சங்கம் பரப்பி வருகிறது.
ஸ்ரீராமஜென்ம பூமி பிரானப் பிரதிஷ்டைக்கான அக்ஷதை வினியோகத்தின் போது 15 நாட்களில் ஆர்.எஸ்.எஸ் அன்பர்கள் 5.75 லட்சம் கிராமங்களை தொடர்பு கொண்டனர். இந்த ஆண்டு முழுவதும் தேவி அகல்யாபாய் ஹோல்கரின் 300 வது பிறந்த நாள் விழாவை கொண்டாடுவதற்கு ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது.