ஆர் எஸ் எஸ்ஸின் அகில பாரத பிரதிநிதி சபா மத்தியப் பிரதேசம் குவாலியரில் கூடுகிறது

12
VSK TN
    
 
     
ஆர்.எஸ்.எஸ்ஸின் கொள்கை வகுக்கும் – முடிவெடுக்கும் பொறுப்புள்ள அகில பாரத பிரதிநிதி சபா கூடுதல் மத்திய பிரதேசம் குவாலியரில் 2019 மார்ச் 8, 9, 10 மூன்று நாட்கள் நடைபெறும் என்று சங்கத்தின் அகில பாரத செய்தித் தொடர்பாளர் அருண்குமார் ஊடகங்களிடம் தெரிவித்தார். ஆர் எஸ். எஸ்ஸின் சர்சங்ககாலக் மோகன் பாகவத், பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி ஆகியோர் தலைமை வகிப்பார்கள். தேசத்தின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் (11 க்ஷேத்திரங்கள், 43 பிராந்தங்கள்) ஆர்எஸ்எஸ் ஷாகாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் 1,400 பேர், ஆர் எஸ் எஸ்ஸின் மாநில அளவிலான பொறுப்பாளர்கள், சங்க பரிவார் அமைப்புகளின் தேசிய அளவிலான பொறுப்பாளர்கள் ஆகியோர் மூன்று நாட்களும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்தக் கூட்டத்தில் சங்க பரிவார் அமைப்புகளின் பணி விவரங்கள் சமர்ப்பிக்கப்படும். ஆர்.எஸ்.எஸ் பணிகள் மாநில வாரியாக ஆய்வு செய்யப்படும். முக்கியமான தேசிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அவசியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS-ABPS 2019 begins at Gwalior

Fri Mar 8 , 2019
VSK TN      Tweet     Poojneeya Sarsanghchalak Dr Mohan Bhagwatji lighted the lamp and inaugurated RSS annual 3day National Meet Akhil Bharatiya Pratinidhi Sabha (ABPS-2019) at Gwalior.  Annual meeting of Akhil Bharatiya Pratinidhi Sabha (ABPS), the Apex body for policy formulation and decision making of Rashtreeya Swayamsevak Sangh (RSS), has been Inaugurated by […]