சமூக மாற்றத்திற்கான ஐந்து முன்முயற்சிகளை சமூகத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதிக்கப்படும்.
ராஞ்சி: ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் அகில பாரத பிராந்திய பிரச்சாரகர்கள் கூட்டம் ராஞ்சியில் உள்ள சரளா பிர்லா பல்கலைக்கழகத்தில் ஜூலை 12 முதல் 14 வரை நடக்கவிருக்கிறது. ஜூலை 10 புதன்கிழமை சரளா பிர்லா பல்கலைக்கழக அரங்கில் செய்தியாளர்களை சந்தித்த, அகில பாரத பிரச்சார் பிரமுக் (பிரச்சாரத் துறைத் தலைவர்), ஸ்ரீ. சுனில் அம்பேகர், அகில பாரத பிராந்திய பிரச்சாரகர்கள் கூட்டத்தில் – மானனீய சர்சங்சாலக் அவர்கள், சர்கார்யாவா அவர்கள், மற்றும் பாரதத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்து இருந்து சங்கத்தின் 46 பிராந்தங்களை சார்ந்த பிராந்த பிரச்சாரகர்கள். சக (இணை) பிராந்த பிரச்சாரகர்கள், ஷேத்ர (பகுதி) பிரச்சாரகர்கள் மற்றும் அகில பாரத கார்யகாரணி (நிர்வாக) உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார். செய்தியாளர் சந்திப்பின்பொழுது அகில பாரத பிரச்சார் பிரமுக் ஸ்ரீ. சுனில் அம்பேகர் அவர்களுடன், வடகிழக்கு ஷேத்ர சங்கசாலக் ஸ்ரீ. தேவவ்ரத் பஹான், அகில பாரத சக (இணை) பிரச்சார் பிரமுகர்கள் ஸ்ரீ. நரேந்திர குமார் மற்றும் ஸ்ரீ. பிரதீப் ஜோஷி ஆகியோரும் உடன் இருந்தனர்.
சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முக்கிய கூட்டங்களை நடத்துகிறது என்று கூறிய, ஸ்ரீ. சுனில் அம்பேகர் – இந்த கூட்டத்தில் சங்கத்தின் பல்வேறு செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும், சமீபத்தில் முடிவடைந்த பயிற்சி வகுப்புகள் மற்றும் பல்வேறு பாடத் திட்டங்கள் உட்பட சங்கத்தின் அனைத்து பணித் துறைகளின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறினார். இந்தக் கூட்டத்தில், சர்சங்சாலக் ஸ்ரீ. மோகன் பகவத் அவர்களின் பாரதம் தழுவிய சுற்றுப்பயணத் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். தற்போது பாரதத்தில், சங்கத்தின் 73,000 ஷாகாக்கள் (கிளைகள்) இயங்கி வருகின்றன. வரும் சங்க நூற்றாண்டு விழாவில், நாடு முழுவதும் ஒவ்வொரு மண்டல் (கோட்ட) அளவிலும் குறைந்தபட்சம் ஒரு கிளையாவது இருக்க வேண்டும் என்ற திட்டத்தில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர ஒவ்வொரு நகரிலும் அனைத்து குடியிருப்பு பகுதிவரை சங்கத்தைப் பற்றிய விழிப்புணர்வு சென்றடைய, நம் சேவை அமைப்புகள், பல்வேறு தர்ம சிந்தனையுள்ள மற்றும் சமூக அமைப்புகளுடன் இணைந்து செயலாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டு உடற்பயிற்சித் துறை (ஷாரீரிக்) மூலம் பல புதிய விளையாட்டுகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அவை கிளை மட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் கூறினார். நூற்றாண்டு விழா ஆண்டுகளில் (2025-26) சமூக மாற்றத்திற்கான ஐந்து முன்முயற்சிகளை கிளை மட்டம் மற்றும் சமுதாயத்திற்கு எடுத்துச் செல்வதற்கான திட்டம் வகுக்கப்படும் என்றும் ஸ்ரீ. சுனில் அம்பேகர் அவர்கள் கூறினார். நூற்றாண்டு விழாத் திட்டங்கள் பற்றிய பரப்புரை செய்து நாடு முழுவதும் 3000 ஸ்வயம்சேவகர்கள் இரண்டு ஆண்டுகளாக தங்கள் நேரத்தை அர்ப்பணித்து வருகின்றனர். மூன்று நாள் நடைபெறும் கூட்டத்தில், சமுதாயத்தின் நன்மக்கள் சக்தியை நம்முடன் இணைத்துக்கொண்டு, சமூக மாற்றத்திற்காக எவ்வாறு ஒன்றிணைந்து செயல்படுவது என்பது குறித்தும் பரிசீலிப்போம். இத்துடன் சமூகம் சார்ந்த மற்ற முக்கிய விஷயங்களும் விவாதிக்கப்படும்.