‘Mudras’ – a science for Spiritual and Healthy life

18
VSK TN
    
 
     
A book release function
of ‘Vijayabharatham Pathipagam’ was organized at Club Melange Auditorium, Erode.  ‘Mudirai udalvazhi Nalam’ (‘Health through Mudra’)
published by Vijayabharatham Pathipagam. 
RSS Uttar Tamilnadu Joint Secretary Shri Jagadeesan welcomed the
gathering.  Arsha Vidya Vruksham, Erode
Pujya Swami Nithyamukthananda presided over the function.  He spoke on the importance of Mudra.  In his presidential address, he said, “One
could see Mudra used by God in temples. 
There is scientific significance in these Mudras.  It is helpful for spiritual and health
development, with no side effects.  For
health, there are 2000 Mudras, but only 230 were used in day-to-day’s
life.  We can practice these Mudras while
sitting, standing, lying or watching TV etc.”   
Shri Kumaraswamy, Uttar
Prant RSS Sanghachalak released the book, the first copy was received by Shri M
K Mageswaran, Hero Motors. In his speech, he said, “We are performing Mudra in
our daily life.  Saying ‘Namaste’ or
Vanakkam is also a Mudra.  Mudras
regulates 72000 Naadis and Panchaboothas in our body.  Mudra is a science”.
This book was written
by a great scholar Shrivardhan in Hindi. 
Author has written and published this book after going through various research
books and hands on experience in his life. 
This book was translated into Tamil by late Shri Balakandaswamy.  Balakandaswamy, a great swayamsevak, whose
family is a Sangh family, has also translated live speeches of great veteran
Sangh leaders like Guru Ji, Ashok Singhal Ji, Vajpayee Ji and L K Advani
Ji.  He was well versed in seven
languages. It is a great pride for us to release the book through
Vijayabharatham Pathipagam,” he added. 
Shri Magesh Kumar, Erode
Vibhag Karyawah thanked the audience.  

“முத்திரை வழி உடல் நலம்”  – புத்தக வெளியீட்டு விழா

ஏப்ரல் 4 அன்று மாலை ஈரோடு, கிளப் மேலாஞ்ச் அரங்கில் நடைப்பெற்ற எளிய விழாவில் விஜயபாரதம் பதிப்பகத்தின் “முத்திரை வழி உடல் நலம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.  ஆர்.எஸ்.எஸ் வடதமிழக இணை செயலாளர் திரு ஜெகதீசன் வரவேற்புரை வழங்கினார். 
இவ்விழாவிற்கு  ஈரோடு ஆர்ஷ வித்யா விருக்ஷம், பூஜ்ய ஸ்வாமி நித்யமுக்தானந்தா அவர்கள் தலைமை ஏற்றார்.  அவர் தனது தலைமை உரையில், முத்திரையின் சிறப்புகள் பற்றி கூறினார்.  தினசரி இறை வழிப்பாட்டில் பல முத்திரைகள் பயன்படுத்தபடுகின்றன.  சிவலிங்கம் தவிர மற்ற அனைத்து இறை வடிவங்களும் ஒரு முத்திரையை தாங்கியே நிற்கின்றனர். நமது கைகளைப் பயன்படுத்தி செய்யக்கூடிய இம்முத்திரைகள் விஞ்ஞான ரீதியானது.  ஆன்மீக முன்னேற்றம் மற்றும் ஆரோக்கிய முன்னேற்றத்திற்கு பேருதவி புரிவது.  பக்க விளைவு இல்லாதது.  பத்து விரல் கொண்டு அனைவரும் பயன்படுத்தலாம்.  ஆரோக்கியத்திற்காக இரண்டாயிரம்  முத்திரைகள் உள்ளன.  ஆனால் தற்போது 230 முத்திரைகள் மட்டுமே வழக்கத்தில் உள்ளன. நின்று, அமர்ந்து, படுத்து, டி.வி பார்த்து கொண்டே என எந்த நிலையிலும் இம்முத்திரைகளை செய்யலாம்.  இவ்வாறு அவர் தனது தலைமையுரையில் கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் வடதமிழக துணை தலைவர் டாக்டர் கே குமாரசுவாமி அவர்கள் இந்நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.  முதல் பிரதியை ஹீரோ மோட்டர்ஸ் அதிபர், திரு எம் கே மகேஸ்வரன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சிறப்புரையில் தினசரி வாழ்க்கையில் நாம் சில முத்திரைகளை ஏற்கனவே செய்து வருகிறோம்.  நமஸ்தே, வணக்கம் கூறுவதே ஒரு முத்திரைதான்.  நமது உடலில் உள்ள எழுபத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட நாடிகளை சமன் செய்வது முத்திரை ஆகும்.  மேலும் உடலில் பஞ்ச பூதங்களையும் சமன் செய்வது முத்திரை ஆகும்.  முத்திரை  ஒரு விஞ்ஞானம் ஆகும்.
இந்நூலை ஹிந்தியில் எழுதிய ஆசிரியர் ஸ்ரீவர்த்தன், மற்றும் இந்நூலை தமிழில் மொழி பெயர்த்த அமரர்  ஸ்ரீ கே ஜி பாலகந்தசுவாமி ஆகிய இருவரும் எனக்கு நன்கு அறிமுகமானவர்கள். இந்நூல் ஆசிரியர் பல நூல்களை படித்து, பல பேருக்கு சொல்லி கொடுத்து, தனது அனுபவம் மூலம் ஆராய்ச்சி செய்து இந்நூலை எழுதியிருக்கிறார். 

இந்நூலை மொழிபெயர்த்த ஸ்ரீ கே ஜி பாலகந்தசுவாமி ஏற்கனவே பல நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.  நூலை மொழிபெயர்ப்பதை விட சொற்பொழிவுகளை உடனுக்குடன் மொழிபெயர்ப்பது கடினமான பணி. இவர் குருஜி, வாஜ்பாயி ஜி, அத்வானி ஜி, அசோக் சிங்கால் ஜி, ஆகியோருடைய ஹிந்தி சொற்பொழிவுகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.  ஏழு மொழிகளில் புலமை வாய்ந்தவர்.  அவரது குடும்பமே இப்பணியில் பங்கு கொண்டுள்ளது.  அவர், தனது வாழ்க்கையில் பணம் பிரதானம் அல்ல, சமுதாயப் பணியில் ஒரு கருவியாக வாழ வேண்டும் என்ற நோக்கில் சிறந்த ஸ்வயம்சேவகராக வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்துள்ளார்.  அத்தகைய நபர் விஜயபாரதம் பதிப்பகத்தின் இந்நூலை மொழிபெயர்த்தது மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். 
நிகழ்ச்சியின் நிறைவாக ஆர்.எஸ்.எஸ் கோட்ட செயலர் திரு அ மகேஷ்குமார் நன்றியுரை  வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS volunteers swung in action at Kollam tragedy

Sun Apr 10 , 2016
VSK TN      Tweet     Over 100 people were killed and 350 injured when a major fire broke out in the Puttingal Devi Temple complex at nearby Paravoor early today when sparks emanating from a fireworks display ignited a store room filled with crackers and pyrotechnic material Thousands of people had gathered at the […]