RSS Maha Seva at Dharmapuri, TN Minister participates

11
VSK TN
    
 
     
TN Education Minister Shri K P Anbhazhagan at RSS Seva activity

Honourable Minister for Higher Education,Tamilnadu Shri K P Anbhazhagan flagged off and inaugurated the Maha Seva
activity organized by RSS at the ongoing training camp for the elders.

RSS-Seva Vibhag of Dharmapuri training camp (at
Vijay Vidyalaya School) planned for a Maha Seva involving the trainees of the
camp. RSS volunteers cleaned the Dharmapuri bus stand and appealed the locals to join
hands for keeping clean.  Although the
local municipality carries on the work – Minister said, appreciated the participation
of RSS volunteers from different walks of the society (lawyers, doctors,
businessmen etc) and urged the public to participate.  

Prant Seva Pramuk Shri Ramarajasekar addressed
the gathering.  Kshetra Sharirik Pramuk
Shri O K Mohan, Dharmapuri RSS Camp Varg Adhikari Shri Sankarlal, Varg Karyavah
Shri Mohan, Varg Palak Shri Sethuraman participated in the event.  
ஆர்.எஸ்.எஸ்.
இயக்கத்தினுடைய
40 வயது மேற்பட்டவர்களுக்கான கோடைகால 20 நாள்கள் பண்புப் பயிற்சி முகாம் தருமபுரி விஜய் வித்யாலயா பள்ளியில் நடந்துக்
கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக தருமபுரி பஸ் நிலையத்தை
சுத்தப்படுத்தம் ‘மகா சேவா நிகழ்ச்சி’ 13.5.2017 அன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை நடைபெற்றது.
ஆர்.எஸ்.எஸ்.
மிட்டவுன் ரோட்டரி சங்கம் இணைந்து
மேற்கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ஆர்.எஸ்.எஸ். முகாம்
வரவேற்புக் குழு தலைவர் மற்றும் விஜய் வித்யாலயா கல்வி
நிறுவனங்களின் தலைவர் திரு.
டி.என்.சி.
மணிவண்ணன் அவர்கள் தலைமை ஏற்க
, விஜய் வித்யாலயா தாளாளர் திரு.
டி.என்.சி.
இளங்கோ அவர்கள் முன்னிலை வகிக்க, மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் தூய்மை தருமபுரி’ வாழ்த்துரை வழங்கி பேருந்து நிலைய
தூய்மை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த
நிகழ்ச்சியில்
கலந்து கொண்டு வாழ்த்தி பேசிய
மாண்புமிகு தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர்
, ஏற்கெனவே இதுபோன்ற நிகழ்ச்சியை நகராட்சியில் உள்ள
அனைத்து வார்டுகள் தோறும் மேற்கொண்டதாகவும்
, இதை
நகராட்சி துப்புரவுப் பணியாளர்தான் மேற்கொண்டதாகவும்
, ஆனால் தற்போது மேற்கொள்ளும் தூய்மைப் பணியானது தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து
வெவ்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள்
கலந்து
கொள்ள வந்திருக்கின்ற (பள்ளி தாளாளர்
, சார்ட்டட்
அக்கவுன்டன்ட்
, மருத்துவர், வியாபாரிகள் போன்ற) ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் நம் நகரை
தூய்மைப்படுத்த முனைந்திருப்பது
பாராட்டுக்குரியது.
இதில் பொதுமக்களும் பங்கெடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த
நிகழ்ச்சியில்
பிராந்த சேவா ப்ரமுக் திரு.இராம.
இராஜசேகர் சிறப்புரையாற்றினார். தென்பாரத ஆர்.எஸ்.எஸ்.
உடற்பயிற்சி பொறுப்பாளர் திரு. ஓ.கே. மோகன், ஆர்.எஸ்.எஸ். முகாம் அதிகாரி திரு. சங்கர் லால், முகாம்
செயலாளர் திரு. மோகன்
, முகாம் பொறுப்பாளர் திரு. சேதுராமன்
ஆகியோர் கலந்துகொண்டு
சிறப்பித்தனர்.
இந்த
நிகழ்ச்சியில்
தருமபுரி முன்னாள் நகர மன்றத் தலைவர், அதிமுக முன்னாள் நகர செயலாளர் திரு. வெற்றிவேல் மற்றும் மிட்டவுன் ரோட்டரி சங்க துணைத்
தலைவர் சக்திவேல்
, சிக்மா பயிற்சி மையத்தினர் கலந்துகொண்டனர்.
நிறைவாக
ஆர்.எஸ்.எஸ்.
தருமபுரி மாவட்டத் தலைவர் கே.
கோவிந்தராஜ் நன்றியுரை கூற
, தேசிய கீதத்துடன் தூய்மை தருமபுரி’ நிகழ்ச்சி இனிதே துவங்கியது. பின்னர் ஆர்.எஸ்.எஸ். முகாமில் கலந்துகொண்டுள்ள
ஸ்வயம்சேவகர்கள் பழைய
, புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை பணி
மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

RSS strongly condemns the brutal murder of volunteer in Kannur

Sat May 13 , 2017
VSK TN      Tweet     May 13th, 2017 Statement issued by Dr. Manmohan Vaidya, Akhil Bharatiya Prachaar Pramukh on brutal murder of Biju in Kannur. The Rashtriya Swayamsevak Sangh strongly condemns the brutal murder of Biju, a RSS worker in Kannur, Kerala and the murder politics spearheaded by CPI (M) leadership to annihilate […]