ஆர்.எஸ்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சார்பில் கோடைகால 20 நாட்கள் பண்புப் பயிற்சி முகாமானது பாரத நாடு முழுவதும் 92 இடங்களில் நடந்துக் கொண்டிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். கடந்த 93 ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில், பல்வேறு இடங்களில், பல்வேறு சேவைப்பணிகளைச் செய்துக்கொண்டிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் கண்ட கனவை நனவாக்கும் விதத்தில் வீரம், சேவை மனப்பான்மை மிகுந்த தன்னார்வலர்களை உருவாக்கும் பணியை செவ்வனே செய்துக்கொண்டிருப்பது அறிந்ததே. வட தமிழகத்தில் கள்ளக்குறிச்சி (ஏப்ரல் 22 முதல் மே 13 வரை), சென்னை –அம்பத்தூர் (மே 6 முதல் மே 26 வரை), காஞ்சிபுரம் 2 முகாம் (மே 27 முதல் ஜூன் 17, ஜூன் 9 முதல் ஜூன் 16 வரை) என மொத்தம் நான்கு முகாம்கள் இந்த ஆண்டு திட்டமிடப்பட்டது.
Kallakuruchi-pathasanchalan |
இதன் ஒரு பகுதியாக நமது பகுதியான விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் இந்த ஆண்டு 40 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 20 நாட்கள் பண்புப் பயிற்சி முகாமானது தச்சூரில் உள்ள பாரதி ஆக்ஸாலிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஏப்ரல் 22 முதல் நடந்தது. இதில் வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 194 தன்னார்வலர்கள் தங்களின் சொந்த செலவில் இங்கு தங்கி பயிற்சி மேற்கொண்டிருக்கிறார்கள். தவிர, பயிற்சியாளர்கள் 30 தன்னார்வலர்கள், ஏற்பாடுகளை கவனிக்க 50 தன்னார்வலர்கள் என இந்த முகாமில் சுமார் 274 தன்னார்வலர்கள் இந்த முகாமில் தங்கியுள்ளார்கள்.
Kallakuruchi-pathasanchalan |
இந்த முகாம் சிறப்பான முறையில் நடைபெற முகாம் வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு கடந்த நான்கு மாதங்களாக முகாமிற்கான ஏற்பாட்டு வேலைகளைச் செய்து வருகிறது. இந்த வரவேற்புக் குழுவின் தலைவராக சின்னசேலத்தைச் சேர்ந்த டாக்டர் திரு டி. மணிவண்ணன் அவர்களும், துணைத் தலைவர்களாக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வழக்குரைஞர் சங்கத்தலைவர் திரு டி. சின்னத்தம்பி அவர்களும், கள்ளக்குறிச்சி முத்துகுமரன் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் திரு. ஜி. அன்பழகன் அவர்களும், செயலாளராக கள்ளக்குறிச்சி பி.எஸ்.ஆர். செங்கல் சூளை உரிமையாளரும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவருமான திரு.பி.எஸ்.ஆர். மகாதேவன் அவர்களும், இணைச் செயலாளர்களாக கள்ளக்குறிச்சி ஸ்ரீ நல்லபுள்ளி அம்மன் மாடர்ன் ரைஸ் மில் உரிமையாளர் திரு. ஏ.கே. சுப்பிரமணியம், சின்னசேலம் ஜெய்கணேஷ் மெட்டல்ஸ் உரிமையாளர் திரு ஆர். வயணப்பெருமாள் அவர்களும், கள்ளக்குறிச்சி ஸ்ரீகிருஷ்ணா மெட்டல்ஸ் உரிமையாளர் ஜி. ராம்ராஜ் அவர்களும், பகுதியைச் சுற்றியுள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட 104 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வரவேற்புக் குழுவினர் தினசரி முகாமிற்கு வருகை தந்து, முகாம் சிறப்புற நடைபெற பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, முகாமை வழிநடத்தித்தனர்.
RSS-Kallakuruchi-pathasanchalan |
இந்த முகாமின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பயிற்சி பெற்ற தன்னார்வலர்களின் பயிற்சிகளான யோகா, சூர்யநமஸ்காரம், விளையாட்டு,கராத்தே, சிலம்பம், ஒருங்கிணைப்பு பயிற்சிகள் போன்றவற்றை செய்து காண்பித்தனர்.
RSS-Kallakuruchi-pathasanchalan |
முகாமின் நிறைவுநாள் பொதுவிழா நிகழ்ச்சியில் மன்னார்குடி ஸ்ரீஸ்ரீஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ராமாநுஜ ஜீயர் ஸ்வாமிகள் ஆசியுரைவழங்க, பா.ம.க. வழக்குரைஞர் பிரிவு மாநில துணைத் தலைவர் வழக்குரைஞர் திரு.எஸ். சிவராமன் அவர்கள் தலைமையேற்க, சின்னசேலம் கனியாமூர், சக்தி கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு. இ.சி. ரவிக்குமார் மற்றும் வடசிறுவள்ளூர் தேவபாண்டலம், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் திரு.வி.எஸ்.மாரியப்பன் அவர்கள் முன்னிலை வகிக்கத்துள்ளார்கள். இதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வடதமிழக சமுதாய நல்லிணக்க அமைப்பு பொறுப்பாளர் திரு. குரு. சுப்பிரமணியன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தவிர, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் வடதமிழகத்தின் பொறுப்பாளர்கள் பலர் இந்த நிறைவுநாள் பொது நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கங்களில் ஒன்றான சமுதாய நல்லிணக்கம், சகோதரத்துவம், தமிழ் தேசியம் குறித்த அபாயம் ஆகியவை குறித்தும், பேதமில்லாத அனைவருக்குமான கோயில், குடிதண்ணீர், மயானம் ஆகியவை குறித்தும் முகாமில் அதிகளவில் போதிக்கப்பட்டன.