VSK TN
மானனீய குமாரசாமி பிள்ளை மற்றும் மானனீய வேலாயுதம் அவர்களுடைய ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி
ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக சங்கம்
கன்னியாகுமரி
ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி
ராஷ்ட்ரிய ஸ்வயம்ஸேவக சங்கத்தின் முன்னாள் வில்லுக்குறி மண்டல் சங்க சாலக் மானனீய குமாரசாமி பிள்ளை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் எம் எல் ஏயும் சங்கத்தின் நெட்டங்கோடு கண்ட சங்க சாலக்கும் ஆன மானனீய வேலாயுதம் அவர்களுடைய ஸ்ரத்தாஞ்சலி நிகழ்ச்சி 26-07-2024 வெள்ளி மாலை 6.00 மணிக்கு விபாக் சங்கச்சாலக் மானனீய காமராஜ் மற்றும் குமரி கிழக்கு மேற்கு சங்கச்சாலகர்கள் முன்னிலை வகிக்க வெள்ளி மலை விவேகானந்தா ஆசிரமத்தின் தர்ம கர்த்தா சுவாமி சைதன்யானந்தஜி அவர்கள் தலைமை உரை ஆற்றினார். க்ஷேத்ர சேவா பிரமுக் திரு பி எம் ரவிக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
சுவாமிஜி அவர்கள் தங்கள் தலைமை உரையில் இங்கு வந்திருக்கக் கூடிய அனைவரும் ஒவ்வொரு ஷாகா துவங்க வேண்டும் எனவும் அதுதான் நாம் அந்த மகான்களுக்கு செய்யும் சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் சங்க மற்றும் பரிவார் இயக்கங்களைச் சார்ந்த கார்ய கருத்தர்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
விழாவில் சிறப்புரையாற்றிய திரு ரவிக்குமார் அவர்கள் பேசுகையில் அந்த இரு மகான்கள் விட்டுச் சென்ற பணியை நாம் தொடர வேண்டும். அவர்களிடம் சிறந்த ஸ்வயம்சேவகத் தன்மையும், சங்க எதிர்பார்ப்பும் , குறித்த நேரத்தில் நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் தன்மையும் இருந்தது.
நமது சங்கத்தில் மூன்று முக்கியமான விஷயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. ஹிந்து விழிப்புணர்வு, ஹிந்து ஒற்றுமை, தாய் நாட்டிற்காக செயல் படுவது . ஹிந்துக்களை விழிப்புணர்வு அடைய செய்து நமது குடும்பம் , சமுதாய ஏற்ற தாழ்வு புனித யாத்திரை, சுற்று சூழல், நிகிழி பயன்படுத்தாமை, நமது பரம்பரிய விளையாட்டு, தாய் மொழி கல்வி , உணவு,ஸ்வதேசி சிந்தனை, திருவிழாக்களில் ஹிந்து தன்மை, சட்டத்தை மதித்து வாழ்தல் ஆகியவை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொண்டார் .
நிகழ்ச்சியில் ப்ராந்த கார்யவாஹ் ஸ்ரீ பவிதரன் மற்றும் பிராந்த விபாக் பொறுப்பாளர்கள் உட்பட ,49 தாய்மார்கள் 261 ஆண்கள் 310 பேர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகள் கிழக்கு ஜில்லா கார்யவஹ் பிரதீஷ் மற்றும் கார்யகர்த்தகள் செய்திருந்தனர் .