விசாரணையின்றி யாரையும் காவலில் வைக்க வகைசெய்யும் ரௌலட் சட்டம் மார்ச் 1919 ல் பிரிட்டீஷ் அரசால் கொண்டு வரப்பட்டது. பஞ்சாபில் சத்யபால் மற்றும் ஸைபுதின் கிச்லா என்ற தலைவர்கள் கைது செய்யப்பட்டதை மக்கள் எதிர்த்ததால் அமிர்தஸரஸில் பொதுக்கூட்டம் போடக் கூடாதென்ற ஆணை பிறப்பித்தார் மைக்கேல் ஓட்வையர் என்ற பிரிட்டிஷ் கவர்னர். அந்த ஆணை மக்களைச்சென்று சேர்வதற்கு முன்னரே, 13 ஏப்ரல் 1919 அன்று பஞ்சாப் அமிர்த சரஸில் பைசாகி புத்தாண்டு […]