மாஞ்சோலை படுகொலை: இயற்கை எழில் மிகுந்த திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து மற்றும் குதிரைவெட்டி ஆகிய எஸ்டேட்கள் அமைந்துள்ளது. இரண்டு நூற்றாண்டிற்கு முன்னர் சிங்கம்பட்டி ஜமீன்தார், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் சேரன் மார்த்தாண்டவர்மனின் போர் வெற்றிக்கு உதவினார். இந்த உதவிக்கு நன்கொடையாக மேற்குத் தொடர்ச்சி மலையில் தன் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 74 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதியை மன்னர் மார்த்தாண்டவர்மன் சிங்கம்பட்டி […]

நீர்வளமும் நிலவளமும் நிரம்பிய நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்த தேயிலை சோலை. ஆம்! மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் பம்பாய் பர்மா டிரேடிங் கார்ப்பரேஷனுக்கு 110 ஆண்டுகள் குத்தகைக்கு விடப்பட்ட எட்டாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு. எல்லா ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் இருக்கும் பிரச்சனைகள் மாஞ்சோலையிலும் இருந்தது. தொழிலாளர்களுக்கு ஊதியப் பற்றாக்குறை. நாளொன்றுக்கு எழுபது ரூபாய் மட்டுமே கூலியாகத் தரப்பட்ட நிலையில் கூலி உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராடினர். அவர்களை ஒருங்கிணைத்து […]