VHP Leaders Met Amit Shah

VSK TN
    
 
     

 

VHP leaders meet Amit Shah, demands safety of Hindus in B'desh

 

புது டெல்லி. ஆகஸ்ட் 8, 2024. வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் கொடூரமான சம்பவங்கள் குறித்து கவலை கொண்ட விசுவ ஹிந்து பரிஷத் இன்று இந்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ. அமித் ஷாவை சந்தித்து அங்குள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பாதுகாப்பிற்கு உடனடியாக தேவையான நடவடிக்கையை கோரியது.
இந்த சந்திப்பில் பேரவையின் மத்திய பொதுச் செயலாளர் ஸ்ரீ பஜ்ரங் பக்ரா‌ மற்றும் தலைவர் ஸ்ரீ. அலோக் குமாரும், மத்திய உள்துறை அமைச்சர் ஸ்ரீ. அமித் ஷாவிடம், ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக்கள் மீதான ஒடுக்குமுறையும், அங்கு தற்போதைய இந்திய சமூகத்தின் அவலநிலையையும் குறித்து அவரிடம் கூறினார்கள். வங்காளதேசத்தில் உள்ள மற்ற சிறுபான்மையினர் நிலைமையையும் குறித்து கவலையை வெளிப்படுத்தினர். மற்றும் வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக மாண்புமிகு உள்துறை அமைச்சரிடம் இருந்து உடனடியாக தேவையான நடவடிக்கையை கோரினர்.
இந்த சூழ்நிலையில், தங்களது அரசாங்கம் எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை அமைச்சர் தெரிவித்ததாகவும், இந்த விஷயத்தில் அரசாங்கம் முழு உணர்திறனுடனும் தீவிரத்துடனும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, உள்துறை அமைச்சர்‌‌ ஸ்ரீ பஜ்ரங் பக்ராவிடம் கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி அங்கு அமைக்கப்பட்ட இடைக்கால அரசின் தலைவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் ஹிந்துக்களின் பாதுகாப்புப் பிரச்சினையையும் எழுப்பியுள்ளார். மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட கேட்டு கொள்ளபட்டுள்ளது, அங்குள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணுவதன் மூலம் ஹிந்து, சீக்கிய, பௌத்த மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு குறித்து சாத்தியமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹிந்து சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை சம்பவங்களை இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் நிராகரிக்காதது போன்று, அவற்றை உடனடியாக கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்பார் என உள்துறை அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக, விசுவ ஹிந்து பரிஷத் அவசர உதவி மையத்தையும் நிறுவ முடிவு செய்துள்ளது. அதன் எண் விரைவில் வெளியிடப்படும்.

செய்தி வழங்குபவர்:
வினோத் பன்சால்
தேசிய செய்தி தொடர்பாளர், விசுவ ஹிந்து பரிஷத்

Next Post

Statement on Bangladesh incidents by RSS Sarkaryavah

Sat Aug 10 , 2024
VSK TN      Tweet     The Rashtriya Swayamsevak Sangh (RSS) expresses serious concern over the incidents of violence against Hindus, Buddhists and other minority communities in Bangladesh during the movement for regime change in the last few days. Cruelty like targeted killings, looting, arson and heinous crimes against women belonging to Hindu and […]