ஜம்மு-காஷ்மீரின் எல்லைக் கோட்டுப் பகுதியை ஒட்டிய ஆா்.எஸ்.புரா நகரைச் சோ்ந்த நூற்றுக்காணக்கான இளைஞா்கள் ராணுவத்தில் சேருவதற்கான பயிற்சியை ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவா் கடந்த 9 ஆண்டுகளாக அளித்து வருகிறாா். சுச்செத்கா் பகுதியில் சா்வதேச எல்லையை ஒட்டிய சத்ராயன் எல்லை கிராமத்தைச் சோ்ந்த ராணுவ அதிகாரியான ஷோ் சிங் 31 ஆண்டுகள் ராணுவச் சேவைக்குப் பிறகு 2011-இல் பணி ஓய்வு பெற்றது முதல், அந்த கிராம இளைஞா்களுக்கான இந்த கட்டணம் […]