“சென்னிமலைக்கும், சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பிறந்ததாக மைசூர் மன்னர் ஹைதரலியிடம் சொல்,” என்று கர்ஜித்தான் அந்த இளைஞன். அன்றிலிருந்து அவன் தீரன் சின்னமலை என்று அழைக்கப்பட்டான்! ஈரோடு காங்கேயம் அருகே மேலப்பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ம் தேதி இரத்தினசாமி கவுண்டர் – பெரியாத்தாவுக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு தீர்த்தகிரி என பெயரிட்டனர். வசதியான செல்வாக்கு மிக்க குடும்பம், பழைய கோட்டை பட்டக்காரர்கள் வம்சாவழியைச் சேர்ந்த கவுண்டர் தம்பதி, […]