பாரத தேசத்தின் அடிமைத்தளை அறுக்க பாரத தேவியின் சுதந்திர மாண்பை மீட்டெடுக்க தங்கள் உயிரைத் துச்சமாக்கி அந்நியருடன் போராடிய எண்ணற்ற மாவீரர்களின் முன்னோடியானவர் நெல்லை சீமையில் எட்டயபுரம் சார்ந்த வீரன் அழகு முத்து கோன் ! வரலாற்றின் பக்கங்களில் இருட்டடிப்பு செய்யப்பட்ட அந்த சரித்திர நாயகன் , கால் நூற்றாண்டு காலம் கூட வாழாமல் தன் உடல் பொருள் ஆவி அத்தனையும் பாரத தேவியின் சுதந்திர வேள்விக்கு அர்ப்பணம் செய்த […]

செண்பகராமன் பிள்ளை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெளிநாட்டில் ராணுவப்படையை உருவாக்கியதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடி. திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு உட்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார் எனப்படும் பெயரும் போரும் மிக குடும்பத்தில் பிறந்தவர் இளம் வயதிலேயே பேரறிவும் பெரும் ஆற்றலும் இயல்பாகவே வருடம் குடி கொண்டிருந்தது. முதலாம் உலகப் போரில் ஜெர்மனியப்படைகளுக்கும் நேச நாடுகளுக்கும் இடையில் மிகவும் முக்கியமான போர் நடந்து கொண்டிருந்த காலகட்டம். ஜெர்மானிய நீர்மூழ்கி கப்பலான எம்டன் […]

  “தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” இது பாரதியின் பாடல்,   பாரதி இதை எப்போது? ஏன் பாடினான்? என்ற விவரத்தைக் கேட்டால் கலங்காத மனம் கூட கலங்கிவிடும். நீலகண்டன். இவர் சீர்காழிக்கு அருகில் உள்ள எருக்கூர் என்ற கிராமத்தில் பிறந்தார். எனவே இவரை எருக்கூர் நீலகண்டன் என்று அழைப்பார்கள்…   நீலகண்ட பிரம்மச்சாரி – இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருபதாம் நூற்றாண்டின் […]

டிசம்பா்-3 இந்த புனித ஆத்மாவின் 133 ஆம் ஆண்டு பிறந்தநாள். எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். நம் பாரத விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக […]

  சுதந்திரத்திற்கு பின்னர் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை விட்டு வெளியேறினாலும் நம் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர் மூலம் இன்னும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். பாரதம் போன்ற அறிவிலும், ஆற்றலிலும் தன்னிகரற்ற ஒரு தேசத்தை பழமைவாத தேசமாக சித்தரிப்பதில் இந்த வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு பெரும் பங்கு உண்டு. பழமைவாதத்தின் அங்கமான பெண்ணடிமைத் தனத்தை நம் நாட்டின் அடையாளமாக, தங்களின் திரிந்த ஆய்வுகள் மூலம் இவர்கள் திசையெங்கும் பிரச்சாரம் செய்தனர். நமது […]

உடலால் மருதிருவர் உயிரால் அவரொருவர் சின்னவர் சிந்திக்க முன்னவரோ முனைப்போடு செயலாக்க!   விசுவாசத்தின் பொருளை அகராதியில் தேடினால் விண்ணதிர விஸ்வரூபமெடுத்து நிற்பர் வீரமும் விவேகமும் அத்தோடு ஈரமும் கொண்டே!     மண்ணைக்காத்திட மாறுபாடுகொள்ளாது மக்களைஇணைத்திட்ட முப்பாட்டன்கள் சிவசிந்தையொடு சிறியமருதும் வஜ்ர உடம்பும் வளரியொடு வர்மக்கலை பயின்ற பிரம்மாண்ட பெரியமருதும் தேசியம் தெய்வீகமென தெய்வீக வாழ்வுதனை வாழ்ந்திட்ட நமதிருவிழிகளன்றோ?   இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்று, அது […]

நம் பாரதத்தாயின் அருள் வேண்டி நடைபெற்ற சுதந்திர வேள்வியில் தன் உடல் பொருள் ஆவியை நெய்யாக வார்த்து வளர்த்த எண்ணற்ற விடுதலை வீரர்களில் ஒருவர் தான் சுப்பிரமணிய சிவா. தான் வாழ்ந்த குறுகிய காலத்திற்குள் தன் அரசியல் மற்றும் ஆன்மீக அனுபவங்களைக் கொண்டு, தன் இளமையையும், இன்னுயிரையும் தாய் திருநாட்டிற்கு தாரை வார்த்தவர் சுப்பிரமணிய சிவா. தென்தமிழ் நாட்டின் மதுரை பகுதியைச் சேர்ந்த வத்தலகுண்டுவில் அக்டோபர் 4ம் தேதி 1884ல் […]

தமிழக மகாத்மா வ.உ. சிதம்பரம் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய முக்கியமான வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். பால கங்காதர திலகரால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தில் இணைந்தார். 1905ம் ஆண்டு வங்கப் பிரிவினையை தொடர்ந்து நாட்டு மக்கள் கொந்தளித்தனர். இது சுதேசி இயக்கமாக மாறியது. சுதேசிய பண்டக சாலை, சுதேசி பிரச்சார சபை, நெசவு சாலை, கைத்தொழில் சங்கம் போன்றவற்றை நடத்தி வந்தார் வ.உ.சி. இவற்றின் மூலம் மக்கள் மத்தியில் […]

சுதந்திர போரட்டத்தின் ஆகப்பெரிய கிளர்ச்சி சிப்பாய் கலகம் என்போம்.அதற்கும் முன்பே அங்கொன்றும் இங்கொன்றுமாக அது தொடங்கிவிட்டது.இந்திய விடுதலை போரில் தமிழ்நிலத்திற்கு என்று பெருமைமிக்க வரலாறுகள் உண்டு.அதில் குறிப்பிடத்தக்க துவக்கத்தில் ஒன்று நெற்கட்டான்செவ்வல் மன்னர் பூலித்தேவரின் சுதந்திரப் போர். “வரகுணராமன் சிந்தாமணி காத்தப்ப பூலித்தேவன்” வழி வந்த பத்தாவது தலைமுறையான சித்திரபுத்திர தேவரின் புதல்வர்தான் ஆங்கிலேயரையும் நவாபையும் எதிர்த்த 4ம் காத்தப்ப பூலித்தேவர்.பாண்டிய மன்னரால் 14 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இவர்கள் […]