ராம பஞ்சாமிர்தம்

VSK TN
    
 
     

ராம பஞ்சாமிர்தம்

அமாவாசை (ஏப்ரல் 8)

(ராம நவமி ஏப்ரல் 17)

1 அரசியல் இங்கிதம்

தந்தை தசரதர் கூறியபடி 14 ஆண்டுகள் வனவாசம் முடித்தபின் அயோத்தி திரும்பிய ராமர் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆனால் அத்தனை ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த தம்பி பரதனுக்கு ஆட்சியில் நாட்டம் இருந்ததா என்று சோதித்து அறிந்த பிறகே ராமபிரான் அரியணை அமர்ந்தார். ஆட்சியில் நீடிக்கும் எண்ணம் பரதனுக்கு இருந்திருந்தால் ஆட்சி பொறுப்பை விட்டுக் கொடுக்கவும் ராமர் ஆயத்தமாக இருந்தார். ராமரின் கண்ணியத்திற்கு இது எடுத்துக்காட்டு.

 

2 கடமையில் கண்

வனவாசத்தின் போது ராமர் அங்கிருந்த ரிஷி முனிவர்கள் போலவே வாழ்க்கை நடத்தினார். ஆனாலும் அவர் தன்னுடைய ஷத்ரிய தர்மத்தை கைவிடவில்லை.  ராட்சசர்களின் தாக்குதலிலிருந்து அப்பாவி வனவாசி மக்களை காக்க வேண்டும் என்ற தனது கடமையை மறக்கவில்லை. தங்களை காப்பாற்றுமாறு ரிஷி முனிவர்கள் ராமரை கேட்டுக் கொண்டார்கள் என்றபோது அவரது பொறுப்பு அதிகரித்தது. ராட்சசர்கள் உங்களை நேரடியாக தாக்காத நிலையில் அவர்களை அழிப்பேன் என்பது உங்களுடைய பலத்தை துஷ்பிரயோகம் செய்வதாகிறது என்று சொல்லி சீதை ஆட்சேபம் தெரிவித்தாள். சட்டத்தை அனுசரித்து நடக்கிறவர்களை துன்புறுத்தும் தீயவர்களை ஒடுக்க, அல்லது அழிக்க, வேண்டியது என் கடமை என்று ராமர் திட்டவட்டமாக பதிலளித்தார். சீதையையும் லட்சுமணனையும் கூட துறந்து விட ஆயத்தமாக இருந்தாரே தவிர அறக் கடமையிலிருந்து வழுவ விரும்பவில்லை. பின்னாளில் தேவை ஏற்பட்டபோது அவர்களையும் துறந்தது வரலாறு. அறத்தின் உருவகம் ராமபிரான் என்பது இங்கே நிரூபணமாகிறது.

3 நட்பின் நுட்பம்

ராம பிரான் நட்பை கட்டிக் காக்கும் விதமே அலாதி. நட்பு நாடிவந்த சுக்ரீவனை ஏற்றுக்கொண்டார். வாலியை வதம் செய்து சுக்கிரீவனை கிஷ்கிந்தை மன்னனாக்கி நட்பு உடன்படிக்கையில் தன் பங்கை நிறைவேற்றினர். ஆனால் சுக்ரீவன் ராமனுக்கு உதவாமல் தாமதம் செய்தான். ராமர் கண்டித்ததையடுத்து தன்னை திருத்திக் கொண்டான். அதன் பிறகு ராம காரியத்தில் முழு மூச்சாக இறங்கினான்.

4 அபார தன்னம்பிக்கை

ராமர் தன்னைப் பின்பற்றுகிறவர்களின் நாடிபிடித்துப் பார்த்து வைத்திருந்தவர். சரண் அடைய ராமரின் பாசறைக்கு வந்தான் விபீஷணன். பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள் என்று ராமர் அங்கிருந்த அனைவரிடமும் தெரிவித்தார். ஆனால் ராமர் எடுத்த முடிவு பாசறையிலிருந்த மற்றவர்கள் அனைவருடைய முடிவுக்கும் நேர் விரோதமானது; சரண் அடைய வருகிறவர் ராவணனே ஆனாலும் அடைக்கலம் அளிப்பது என்ற தன் அறத்தை உறுதியாக கடைபிடித்த ராமர், விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுக்க முடிவெடுத்தார். ராமருடைய அசாத்தியமான தன்னம்பிக்கையை பாருங்கள். பகைவன் என்னதான் பலசாலியாக இருந்தாலும் தன்னால் வெல்ல முடியும் என்ற உறுதியான எண்ணம் கொண்டிருந்த ராமர் போருக்குப் பின் இலங்கை மக்கள் அல்லல்படக்கூடாது என்பதற்காக அப்போதே விபீஷணனை இலங்கையின் அரசனாக்கினார்.

5 மக்களை மதித்தல்

ராவணன் வதம் செய்யப்பட்ட பிறகு சீதா பிராட்டி மீட்கப்பட்டார். ராமருக்கு மகிழ்ச்சி. ஆனால் கடவுளே ஆனாலும் பழி சுமத்தத் தயங்காத வெகுஜன உளவியலை புரிந்து வைத்திருந்த ராமர் சீதையை ஏற்றுக்கொள்ள மறுத்தார். வானரர்களும் ராட்சசர்களுமாக ஒரு பெரும் கூட்டம் என்னாகுமோ என்று மூச்சை பிடித்துக்கொண்டு காத்திருந்தது. சீதைக்கு நிலவரம் புரிந்தது. அவளுக்கோ ராமர் தான் வாழ்க்கையே. அவர் ஏற்றுக்கொள்ளாததால் மரணம் தான் தீர்வு என்று கருதி அக்னிப் பிரவேசம் செய்ய முடிவெடுத்தது அவள்தான். ராமர் தடுக்கவில்லை. ராட்சசர்கள் அனுமாரின் வாலில் வைத்த நெருப்பு அவரை சுடக்கூடாது என்று அக்னி தேவனுக்கு ஆணையிட்ட சீதையை அந்த அக்னி தீண்டுமா? எதிர்பார்த்தது போலவே பத்திரமாக மீண்டு வந்த சீதா பிராட்டி ராமபிரானை அடைந்தார்.

 

(ஆதாரம்: ஸ்வாமி ஹர்ஷானந்தரின் ‘A Concise Encyclopaedia Of Hinduism’, Volume 3)

Next Post

राम पंचाम्रित

Mon Apr 8 , 2024
VSK TN      Tweet    राम पंचाम्रित आज (एप्रिल 8, 2024) अमावास्या है और पंचाम्रित आपके समक्ष। इस पंचाम्रित श्री राम के गुणों को समर्पित है। राम नवमी 17 अप्रैल को है। 1 राजनीतिक समज राम अपने पिता दशरथ के आदेश के अनुसार 14 वर्ष का वनवास पूरा करके अयोध्या लौट आए और शासन […]

You May Like