18ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களை கதிகலங்குமாறு செய்த ஒண்டிவீரனின் வீர தீர செயல்களை நாம் அறியும்போது பூரிப்பு ஏற்படுகிறது. ஒண்டிவீரன் அருந்ததியர் சமூகத்தில் பிறந்தவர், பிறந்த தேதி, ஊர் போன்ற விவரங்களின் ஆவணங்கள் இல்லை. அவர் பூலித்தேவரின் படையில் முக்கிய தளபதியாக செயல்பட்டவர். பூலித்தேவரும் ஒண்டிவீரனும் ஒருவரின்றி மற்றவர் இல்லை என வரலாற்று விவரங்களின் மூலம் அறியலாம். ஆக, ஒண்டிவீரனைப் பற்றி அறியவேண்டும் என்றால் பூலித்தேவரின் சரித்திரமும் தெரிந்துக்கொள்ளும் அவசியம் உள்ளது. பூலித்தேவரின் முன்னோர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். திசைகாவலுக்காக திருநெல்வேலி வந்தனர். அங்கே, நெற்கட்டும் செவ்வேல் அருகே கோட்டை அமைத்து ஆட்சி செய்தார்கள். அவர்களின் வாரிசாக பிறந்தவர் பூலித்தேவர். அந்த பகுதியில் இருந்த அருந்ததியர் மக்களின் நிலங்களை இருளப்பிள்ளை என்பவர் தன் பலத்தை பயன்படுத்தி பிடுங்கிக்கொண்டார். அருந்ததிய மக்கள் பூலித்தேவரிடம் தங்களுக்கு உதவுமாறு முறையிடு செய்தார்கள். அவர்களின் நிலங்களை இருளப்பிள்ளையிடமிருந்து மீட்டுத் தந்தார் பூலித்தேவர். அதற்குப்பிறகு அருந்ததியினர் பூலித்தேவரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர். இவ்வாறு மீட்டுக்கொடுக்கப்பட்ட நிலங்களில் ஒன்று ஒண்டிவீரனின் தாத்தாவின் நிலம். எட்டு பிள்ளைகள் பெற்ற அவரின் மூத்த மகனின் மகன்தான் ஒண்டிவீரன். பாளையக்காரன் பூலித்தேவரின் வலிமையே அவருடைய படை தான். அவரது படை வீரர்கள் தங்களது பாளையத்துக்காகவும் பூலித்தேவருக்காகவும் […]