19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை திருவொற்றியூரில் திகம்பர சாமியார் ஒருவர் வீட்டில் திண்ணையில் அமர்ந்து கொண்டு தெருவில் செல்லும் மனிதர்களின் குணங்களை விமர்சித்து பாம்பு, நரி, பன்றி, எருமை, நாய் என்று சொல்வது வழக்கம். திடீரென அந்த சாமியார் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்த ஒருவரை சுட்டிக்காட்டி அதோ அறிவும் அன்பும் நிறைந்த மாமனிதர் போகிறார் என்று கத்தினார். அவர் குறிப்பிட்ட அந்த மகான் வள்ளலார் […]

  தனக்கு ஏற்பட்ட அத்துணை அவமானங்களையும் பொருட்படுத்தாது, தனது சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய மஹான் சுவாமி சகஜானந்தர். 1890, ஜனவரி 27-ல் ஆரணியை அடுத்துள்ள மேல் புதுப்பாக்கத்தில் அண்ணாமலை – அலமேலு தம்பதிக்கு முதல் மகனாய்ப் பிறந்தவர் நமது முனுசாமி. இவரே பின்பு சகஜானந்தர் எனப் புகழ் பெற்றவர். சிறு வயதிலிருந்தே விளையாட்டை வெறுத்து மௌனத்தை நேசிக்கும் பாலகனாய்த் திகழ்ந்தார். அசைவ உணவை வெறுப்பதிலும், ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவதும் இயற்கையாகவே […]

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதன்முதலில் மூவர்ணக் கொடியை பறக்கவிட்ட சாகசக்காரர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள உயரமான கொடிக்கம்பத்தில் தேசியக் கொடி பட்டொளி வீசி பறப்பதை நம்மால் பார்க்க முடியும். இந்த கோட்டைக்கு நீண்டதொரு வரலாறு இருக்கிறது. 1688ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த கொடி மரமானது தொடக்கத்தில் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டதாக இருந்தது. 1994ம் வருடம் இரும்பினால் செய்யப்பட்ட கொடிக்கம்பமாக மாற்றப்படும் வரை தேக்கு மரக் […]

இந்தியத் திருநாட்டின் தமிழகத்தையே தனது ஆளுகையில் கொண்டுவந்தவர் எம்.ஜீ ஆர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். மருதூர் கோபால ராமச்சந்திரன் அவர்கள்.1977 – 1987 ஆண்டுகளில் தமிழக முதல்வராகப் பணியாற்றியவர். 1988 ஆம் ஆண்டில் அவருக்கு பாரத நாட்டின் மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’            அவரது இறப்பிற்குப் பின் வழங்கப்பட்டது. இவையெல்லாம் ஏதோ தற்செயலாக நடைபெற்றவை அல்ல.   நீண்ட காலமாகத் திரையுலகில் […]