மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு நிகரற்ற கவிஞர். எளிமையான நடையில் தரமான கருத்துகளை கொண்ட அவருடைய படைப்புகள் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. சக்திவாய்ந்த அவரது எழுத்துக்கள் பாகுபாடு இன்றி – இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள், பணக்காரர்கள் மற்றும் ஏழைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரையும் கவர்ந்தன. இந்திய மக்களுக்கு ஒருவித சக்தி, உற்சாகம் மற்றும் தேசபக்தி உணர்வை பெருக்கியது. சுப்பிரமணிய பாரதியார் ஒரு உலகளாவிய கவிஞராகவும் எழுத்தாளராகவும் இருந்தார். […]