VSK TN
நாரத ஜெயந்தி விழா – சென்னை – 19 மே , 2019 – வாணி மஹால் , T Nagar
விஸ்வ ஸம்வாத் கேந்திரா
சார்பில் சென்னையில் இன்று நாரதர் ஜெயந்தி விழா நடைபெற்றது. உலகின் முதல் பத்திரிக்கையாளராக நாரதர் போற்றப்படுகிறார். அவரது பிறந்த நாளான இன்று , சென்னையில் நடந்த ஊடகத்திற்கான விழாவில் பல்வேறு ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மூத்த பத்திரிகையாளர் எஸ் ரேவதி மற்றும் மற்றும் திரு உமேஷ் உபாத்தியாயா கலந்து கொண்டார்கள்.
30 ஆண் டுகளுக்கு மேல் ஊடகத்தில் பணி புரியும் திரு உமேஷ் உபாத்யாய டிஜிட் டல் மீடியா துறையில் பல நவீனங்களை புகுத்தி வருகிறார். ஊடகத்துறையில் சிறப்பாக சேவை புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.
மூத்த பத்திரிகையாளருக்கான நாரதர் விருது மாலை முரசு நாளிதழின் இணையாசிரியர் திரு ஆர்.பி. முருகேசன் அவர்களுக்கும், மலைவாழ் மக்கள்
மேம்பட சேவை புரிந்தமைக்காக அகில இந்திய வானொலி கோயமுத்தூர் நிலையத்தின் அதிகாரி திரு B. சரவணன் அவர்களுக்கும், மகளிர் நலன் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்ட விண் தொலைக்காட்சி புவனேஸ்வரி பூர்ணஸ்வாமி அவர்களுக்கும், சிறப்பு நாரதர் விருது லோட்டஸ் நியூஸ் செய்தி வாசிப்பாளர் திருநங்கை பத்மினி பிரகாஷ் அவர்களுக்கும், சமூக ஊடக துறையில் சிறப்பாக செயலாற்றிய திரு மாரிதாஸ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய திருமதி ரேவதி பேசுகையில் நமது தர்மத்தை பின்பற்றினால் நமது வாழ்வு தூய்மையாகும், நமது மனம் சுத்தமானால் சமுதாயம் சுத்தமாகும் என்று குறிப்பிட்டார் உண்மையை சொல்ல வேண்டிய சூழலில் நாம் உள்ளோம். தீர விசாரித்த பின்னர் எழுதுவதே நிருபரின் பணி. உண்மைத் தன்மையை தெரிந்து கொண்டு எழுத வேண்டும். இறையருள், திருவருள், குருவருள், உழைப்பு இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று அவர் பேசினார்
திருவள்ளுவர் ராமானுஜர் தோன்றிய புண்ணிய பூமியான தமிழகத்திற்கு வந்திருப்பது தமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று உமேஷ் உபாத்தியாயா தெரிவித்தார்.
40 ஆண்டுகளுக்கு முன்பு,தான் தமிழகம் வந்திருந்த போது கிடைத்த உபசரிப்பை பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்ட திரு உபாத்யாயா , இதே போன்ற உபசரிப்பை தேசம் எங்கும் காண முடிவதாக தெரிவித்தார்.
எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவுவதே நம் நாட்டின் கலாச்சாரம் . எந்த மொழி பேசினாலும் அனைவருமே ஒன்று.
பல ஆயிரம் வருட கலாச்சாரங்களுக்கு சொந்தக்காரர் நாம். நமது பாரத தேசத்தின் உண்மையான வரலாறு மக்களை சென்றடையவில்லை. அன்னியர்கள் அவர்களது வசதிக்கு ஏற்ப நமது நாட்டின் வரலாற்றை திரித்து எழுதி பரப்பி விட்டார்கள். எனவே நமது உண்மையான வரலாற்றை மக்களிடையே எடுத்துச் செல்வது நமது கடமையாகிறது.
டிஜிட்டல் ஊடகங்கள் நமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட மறுக்கின்றன.
ஆனால் அதேசமயம் பல்லாயிரக்கணக்கான வருவாயை நம் நாட்டில் இருந்து பெறுகின்றன. இதற்கு தீர்வு காண்பது அவசியம். நமது தேசிய சித்தாந்தத்திற்கு எதிரான விஷயங்கள் ஊடகங்களில் வருவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்
ஊடகங்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து,
சரியான செய்திகளை
மக்களிடத்தில் கொண்டு செயல்படுவது அவசியம், என்று அவர் கூறினார்.
சரியான செய்திகளை
மக்களிடத்தில் கொண்டு செயல்படுவது அவசியம், என்று அவர் கூறினார்.
வந்தே மாதரம்
பாடலுடன் நிகழ்ச்சி
இனிதே நிறைவடைந்தது
பாடலுடன் நிகழ்ச்சி
இனிதே நிறைவடைந்தது