Thevaram and Nalayira Divya Prabandam as cornerstones of Bharat’s cultural resurgence….

VSK TN
    
 
     

தமிழகம் கோவில்களின் பூமி. இதன் பாரம்பரியம் சிந்து சமவெளி நாகரீகத்துடன் மட்டுமல்ல அதற்கு முந்தைய காலகட்டத்துடன் தொடர்புடையதாக கூற்றுகளுண்டு. உலகில் மிகத் தொன்மையானது தமிழ் மொழி.
நமது கோயில்கள் ஹிந்து தர்மத்தின் கலங்கரை விளக்கம்.
ஆன்மீகம் ,கலாச்சாரம் , பாரம்பரியம் தமிழகத்தில் வேரூன்றியுள்ளது.

கோவில்கள் இறை வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் கலாசாரம் , கட்டிடக்கலை , கவிதை, இசை, நாட்டியம் ஆகியவற்றை பறைசாற்றும் சமூகக் கூடமாகவே விளங்கின. கோவில் கட்டுவதே எதிர்காலத்துக்கான பார்வையாகத் திகழ்ந்தது.

சேர சோழ பாண்டியர் பல்லவர்களும் அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்களும் நடந்த பாதையில் நடந்து தான் நாம் இந்த அற்புதங்களை அனுபவிக்கிறோம்.. அரசர்கள் , அரசாங்கம் என வழி வழியாக இந்தப் பொக்கிஷங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டுமானங்கள் ,சீரமைப்பு பணிகள் என அரசர்கள் கணிசமான தொகை செலவிட்டனர்.
கோவில்கள் மட்டுமின்றி குளங்களைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தினர்.
குளங்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கவும் , மழை நீரை சேகரிக்கவும் சுற்றுச்சூழலை சீராக்கவும் உதவியதால் அரசர்கள் அவ்வப்போது குளங்களை தூர்வாரி சுத்தப்படுத்தி ஆழப்படுத்தி சீரமைத்தனர்.
ஆங்கிலேயர் ஆட்சியில் கோவில்கள் அரசாங்கத்தின் கீழ் வந்தன. இந்து அறநிலையத் துறை சட்டம் 1929லும், தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை சட்டம் 1959லும் நிறுவப்பட்டது. இந்து அறநிலையத்துறையின் கீழ் சுமார் 44, 415 கோவில்களுள்ளன.
இதில் 21,000 கோவில்களுக்கு சீரமைப்பு தேவைப்படுகிறது.

Thevaram and Nalayira Divya Prabandam as cornerstones of Bharat’s cultural resurgence……

Read more at: https://organiser.org/2024/05/19/238384/bharat/tamil-nadu-madras-hc-recognises-thevaram-and-nalayira-divya-prabandam-as-cornerstones-of-bharats-cultural-resurgence/
இதற்கிடையில் வழக்கறிஞர் கார்த்திகேயன் நீதிபதிகள் ஆர் மகாதேவன் ,பி.டி ஆதிகேசவுலு ஆகியோர் அடங்கிய பெஞ்சில் உழவாரப்பணி தொடர்பாக வழக்குத் தொடர்ந்தார்.
கோவில் தூய்மைப் பணியில் மக்கள் நேரடியாக பங்கேற்க அன்றும் இன்றும்
ஆர்வமாகவே உள்ளனர்.ஈடுபட்டும் வருகின்றனர்.
ஆனால் உழவாரப் பணிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட திட்டம் என எதுவுமில்லை.

எனவே மாண்புமிகு நீதிமன்றம் கீழ்கண்ட வழிகாட்டுதல்களை அளித்துள்ளது.

1. ஒவ்வொரு மாவட்டக் குழுவும் மாவட்டக் கோவில்கள் குளங்களின் நிலை பற்றி ஆய்வு மேற்கொண்டு இ.அ.துறைக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2. ஆணையர் அனைத்து குழுக்களுக்கும் நீதிமன்ற முந்தைய உத்தரவுகளுள்ளிட்ட தகவல்களை அனுப்ப வேண்டும்.
3. உழவாரப்பணியில் ஆர்வமுள்ள குழுக்கள் உறுப்பினர்கள் விவரத்துடன் மாவட்ட இணை ஆணையரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
4. கோவில் வளாகத்தை ,குளத்தை சுத்தப் படுத்துதல் , தேவையற்ற செடிகளை அகற்றுதல் ஓவியங்களுக்கு வண்ணம் தீட்டுதலுக்கு மட்டுமே அனுமதி.
5. ராஜகோபுரம் தவிர்த்து சிறு கோபுரங்கள் அதிகாரிகள், ஸ்தபதியர் மேற்பார்வையில் சுத்தப்படுத்தலாம்.
6. துப்புரவுப் பணியின் போது ஏதேனும் பகுதி சேதமடைந்ததாகத் தோன்றினால் நிர்வாக இயக்குனரிடம் தெரிவிக்க வேண்டும்.
7. உழவாரப் பணி தவிர வேறெந்த உரிமையும் கோரக்கூடாது.
8. பணி முடிந்ததும் குப்பைகள் உடனடியாக அகற்றப்படுவதை ஆணையர் உறுதி செய்யவேண்டும். உடைந்த சிலைகள் கற்களை அகற்றக்கூடாது.
9. சுவரோவியங்கள் ,
சிலைகள் பாதுகாப்புக்கும் கோவில் சொத்துகள் பாதுகாப்புக்கும் உறுதியளிக்க வேண்டும்.

Next Post

ப ஞ் சா மி ர் த ம்

Thu May 23 , 2024
VSK TN      Tweet    நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்! ப ஞ் சா மி ர் த ம் இன்று (2024 மே 23) பௌர்ணமி. பஞ்சாமிர்தம் படியுங்கள் 1 புணே தம்பதியின் ஹிமாலய சேவை புணே நகரை சேர்ந்த யோகேஷ், அவர் மனைவி சுமேதா சித்தடே இருவருமாக சியாச்சினில் ராணுவ வீரர்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்கியுள்ளனர். 2018 ல், தம்பதியினர் ஆலையைக் கட்டுவதற்காக தங்களுடைய அனைத்து நகைகளையும் விற்க தீர்மானித்தார்கள். […]