ப ஞ் சா மி ர் த ம்

VSK TN
    
 
     

நாரத ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!

ப ஞ் சா மி ர் த ம்

இன்று (2024 மே 23) பௌர்ணமி. பஞ்சாமிர்தம் படியுங்கள்

1 புணே தம்பதியின் ஹிமாலசேவை

புணே நகரை சேர்ந்த யோகேஷ், அவர் மனைவி சுமேதா சித்தடே இருவருமாக சியாச்சினில் ராணுவ வீரர்களுக்காக ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் ஆலையை உருவாக்கியுள்ளனர். 2018 ல், தம்பதியினர் ஆலையைக் கட்டுவதற்காக தங்களுடைய அனைத்து நகைகளையும் விற்க தீர்மானித்தார்கள். தம்பதியினர் SIRF (Soldiers Independent Rehabilitation Foundation) என்ற தங்கள் அமைப்பு மூலம் ஆக்சிஜன் ஆலை அமைக்கத் தேவையான கிட்டத்தட்ட ரூ. 2 கோடியை மக்கள் நன்கொடை மூலம் சேகரித்தனர். ANI இடம் பேசிய யோகேஷ், “நமது தேசம் காக்கும் வீரர்களுக்கு சேவை செய்வது எங்கள் கடமை. ஆக்சிஜன் ஆலைஅங்கே கிட்டத்தட்ட 20,000 பேருக்கு உதவும்” என்றார்.

ஆதாரம்: ANI

 2 பட்னாவின் அனில் எப்போதும் நல்லவரே

பட்னாவில் நடந்த சம்பவம். ஒரு பெண் 2011 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஒரு நாள், தனது 10,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல் ஃபோனையும், 600 ரூபாய் ரொக்கத்தையும் முன்பு வாடகைக்கு அமர்த்தியிருந்த ரிக்ஷாவின் இருக்கையில் மறதியாக வைத்துவிட்டு போய்விட்டார். அவர் தன் உடைமைகளைத் தேட ஆரம்பித்தார், ரிக்ஷாவில் இருந்து அவர் இறங்கிய இடத்தைச் சுற்றி விசாரித்தார்  இதற்கிடையில், அனில், 35, ரிக்ஷாக்காரர் அந்த பெண் திரும்பி வந்து தனது மொபைலைப் பெறுவதற்காக காத்திருந்தார். அன்று மாலையிலேயே அக்கம்பக்கத்தினர் முன்னிலையில் மொபைலையும் பணத்தையும் அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். இதற்கு முன்பு 5 முறை, அனில் தனது வாகனத்தில் பயணிகள் விட்டுச் சென்ற மொபைல் போன்களை அவற்றின் உரிமையாளர்களுக்கு மீட்டுத் தந்துள்ளதாக தகவல்..

ஆதாரம்: சம்வாத் தர்ஷன் (வாரம் இருமுறை ஹிந்தி இதழ்), 2011 பிப்ரவரி II, பட்னா.

 3 பெரும்பாக்கம் பத்து ரூபாய் ஹோட்டல்

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த எஸ் ஏழுமலை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வரும் ‘பத்து ரூபாய் ஹோட்டல்’ சாதம், சாம்பார், காய்கறிகள் மற்றும் மோர் ஆகியவை கொண்ட, பசியைப் போக்க போதுமான உணவு வழங்குகிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 80 பெரும்பாக்கம் வாசிகள் பயனடைகிறார்கள். பசித்தவர்களுக்கு உணவளிப்பதில் ஏழுமலையின் அர்ப்பணிப்பு, ராமலிங்க வள்ளலாரின் அருள்வாக்கை பின்பற்றியதால் உருவானது. ஏழுமலையின் உறவினர்களான 15 பேர் கொண்ட குழு, உணவு தயாரிப்பை மேற்பார்வையிடுவதுடன், சமையல் தரம் நல்லபடியாக இருக்குமாறு பார்த்துக் கொள்கிறார்கள். பெரும்பாலும், அருகிலுள்ள விவசாயிகளுக்கும்மற்றும் கடைக்காரர்களுக்கும் ஆதரவளிக்கும் முயற்சியில், பொருட்கள் உள்ளூரிலேயா வாங்குகிறார்கள். இந்த தொடர்ச்சியான சேவை, மக்களுக்கு உதவுவது மட்டுமல்லாமல், கிராம மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வளர்த்துள்ளது. பல ஆண்டுகளாக, இந்த உணவகம் மக்கள் கூடும் இடமாக மாறியுள்ளது, அங்கு பல்வேறு பின்னணியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகள் ஒன்றாக அமர்ந்து, அளவளாவுகிறார்கள்; உறவுகளை உருவாக்குகிறார்கள்.

ஆதாரம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், மே 19, 2024.

 4 வேலங்குடி கல்வெட்டு செய்யும்ற்புதம்

இரண்டாம் உலகப் போரின் போது, 1940 களின் முற்பகுதியில், ஜப்பானியப் படைகள் பர்மா (மியான்மர்) மீது குண்டுவீசித் தாக்கின. அவசர அவசரமாக ஓடிப்போன மக்களில் பல பிரிவுகளில் நகரத்தார் சமூகம் ஒன்று. ஆதியில் தமிழ்நாட்டின் செட்டிநாட்டிலிருந்து வந்த நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த பலரின் முக்கியத் தொழில் அடகு வணிகம் (அடமானம் வைத்த நகைகளுக்குப் பணம் கொடுப்பது). உயிருக்குத் தப்பி ஓடும்போது, பர்மியர்கள் அடகு வைத்த ஆபரணங்களை நகரத்தார் எடுத்துச் சென்றனர். அவர்கள் ஏறக்குறைய 1,000 மைல் காட்டுப் பகுதியை கடந்தார்கள். 1942 ல் செட்டிநாட்டில் நடந்த கலவரங்கள், கொள்ளைகளின் போது இந்த அடகு வியாபாரிகள் கூர்க்காக்களை பாதுகாவலர்களாக நியமித்து நகைகளைப் பாதுகாத்தனர். பின்னர், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன், அவர்கள் நகைகளை மீண்டும் ரங்கூனுக்கும் பர்மாவின் பிற ஊர்களுக்கும் எடுத்துச் சென்றனர். ஒவ்வொரு நகையையும் மிக துல்லியமாக அதன் உரிமையாளரிடம் திருப்பிக் கொடுத்தார்கள். எல்லாமே வாய் வார்த்தையாக,  நம்பிக்கையின் பேரில்தான் பெரும்பாலான நகைக்கடன் பரிவர்த்தனைகள் நடந்தன என்பது குறிப்பிடத் தக்கது. செட்டிநாட்டின் (தற்போது சிவகங்கை மாவட்டத்தில்) கிராமமான வேலங்குடியில் உள்ள ஒரு கல்வெட்டு  அருளாணை, அந்த வணிகர்களின் மனதில் இத்தகைய நேர்மைப் பண்பை விதைத்துள்ளது.

ஆதாரம்: 1984 ல் வெளிவந்த ‘செட்டிநாடும் செந்தமிழ்’ என்ற சோமலெ’யின் நூல், பக்கம் 601; வானதி பதிப்பகம், சென்னை-600 017.

 5 அர்ப்பணிப்புக்கு ஒரு சிகரம் அன்னூர் சரோஜினி

கோவையை அடுத்துள்ள அன்னூரைச் சேர்ந்த குருசாமியின் மனைவி ஸ்ரீமதி சரோஜினி, கணவரின் மறைவுக்குப் பிறகு அன்னூரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இதற்கிடையில், அவரது மகன் 2012 ல் சாலை விபத்தில் இறந்தார். வேதனையடைந்த சரோஜினி, தனது மகனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி நீதிமன்றத்தை அணுகினார். சமீபத்தில், இழப்பீடாக 4 லட்ச ரூபாய்  கிடைத்தது. அந்தத் தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்யவோ, வீட்டுச் செலவுகளுக்குப் பயன்படுத்தவோ அவர் விரும்பவில்லை. கோவிலுக்கு காணிக்கையாக்க முடிவு செய்தார். அதற்கு முன், அவர் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்த 3 லட்ச ரூபாயையும் சேர்த்து, ராமேஸ்வரம் கோயிலுக்கு 7 லட்சம் காணிக்கை அளித்தார். அதில் 2 லட்சத்தை அன்னதானத் திட்டத்துக்கும், மீதமுள்ள  5 லட்சத்தை தமிழகக் கோயில்களில் கட்டளைதாரர் சிறப்பு தரிசனம் செய்ய வகை செய்யும் ‘கோல்டன் கார்டு’ திட்டத்துக்கும் கோயில் அதிகாரிகள் ஒதுக்கினர். “காணிக்கை சமர்ப்பணம் செய்த பிறகுதான் எனக்கு மனசு சரியானது. என் மகனின் ஆத்மா சத்கதி அடையும் என்று நம்புகிறேன்” என்றார் சரோஜினி.

ஆதாரம்: தினமலர், 2016 பிப்ரவரி 25).

Next Post

SREE CHANDRASEKHANDRA SARASWATHI SWAMIGAL.

Fri May 24 , 2024
VSK TN      Tweet    சிவபெருமானின் அவதாரமாக 2500 ஆண்டுகளுக்கு முன் காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்த சங்கரர், சிறுவயதிலேயே ஆன்மிக தேடலால் துறவு பூண்டு, அத்வைத கோட்பாடினை இந்த உலகுக்கு விளக்கி, ஷன்மத முறையை நிறுவி, பல்வேறு ஸ்லோகங்கள் எழுதி, இருள் சூழ்ந்திருந்த சனாதன தர்மத்தை ஒளியடையச் செய்தவர் ஆதிசங்கர பகவத்பாதர். பாரதத்தை முழுவதுமாக சுற்றிவந்து வேதநெறி தழைத்தோங்க பல மடங்களை நிறுவிய அவர், கடைசியில் ஏழு மோக்ஷபுரிகளில் ஒன்றான […]