கேரளாவில் உள்ள ஆலப்புழாவில், 1855 ஏப்ரல் 4ஆம் தேதி, திரு பெருமாள் பிள்ளை மற்றும் திருமதி மாடத்தி அம்மாள் அவர்களுக்கு மகனாய் பிறந்த மனோன்மணியம் பெருமாள் சுந்தரனார் பிள்ளை எழுதியதுதான் தமிழ் தாய் வாழ்த்து.
அவர், சைவ சமய ஆன்மீக நூல்களான தேவாரம் மற்றும் திருவாசகத்தை நன்று படித்து ஆசாரமாக வளர்ந்தவர். மறைமலை அடிகள் அவர்களுக்கு தமிழ் ஆசிரிஉஅராக இருந்த நாகப்பட்டினம் நாராயணசாமி என்பவரிடம்தான், இவரும் தமிழைப் படித்தார்.
1876ல் பட்டம் பெற்றதுடன், தமிழ் புலமையைப் பொருட்டு சில காலம் ஆசிரியராகவும் பணீயாற்றினார். அவரது படைப்புகளில், 1891ல் வெளிவந்த ‘மனோன்மணியம்” என்ற நாடக இலக்கிய நூலே அவரது அடையாளமானது.
1970ல், அப்போதைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி, மனோன்மணியம் பாடல்களின் சில வரிகளை தொகுத்து எடுத்து, “தமிழ் தாய் வாழ்த்து” என்று அறிவித்தார். மனோன்மணியத்தில், அது தமிழ் கடவுளுக்கு வணக்கம் எனப் பொருள் படும்படியாக “தமிழணங்கு” என்று சொல்லப்பட்டது. தமிழ் தாய் என்றோ தமிழ் அம்மா என்றோ எங்கும் குறிப்பிடவில்லை.
அன்றைய தமிழக அரசு, அரசு மற்றும் பொது விழாக்களில், தமிழ் தாய் வாழ்த்து, கர்நாடக சங்கீதம் மோகன ராகம், திருஷ்ட தாளத்தில், விழா தொடக்கத்தில் கட்டாயம் பாடப்ப்ட வேண்டும் என்று அறிவித்தது. இன்று வரை கடைப்பிடிக்கப்பட்டும் வருகிறது.
மத்திய அரசின் பிராச்சார பாரதி என்ற அமைப்பின் ஒரு அங்கமான தூர்தர்ஷன் என்று அழைக்கப்படும் தொலைக்காட்சி நிறுவனம் பணியாற்றி வருகிறது. பொதிகை என்ற பெயரில் முன் அழைக்கப்பட்ட அதன் தமிழ் சேவையானது, இப்போது டிடி-தமிழ் என்று, 19 ஜனவரி 2024 முதல் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மத்த்ய அரசின் வருடாந்திர ‘ஹிந்தி மாதம்’ விழாவின் முடிவில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுனர் திரு கே.என். ரவி அவர்கள் பங்கேற்றார். அந்த விழா, தூர்தர்ஷனின் 50வது அண்டு நிறைவு விழாவாகவும் இருந்தது.
ஹிந்தி மாதம் தொடர்பாக, டிடி-தமிழில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளில், தமிழக ஆளும் கட்சியினருக்கு உடன்பாடு இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. தமிழக மக்களை, மத்திய அரசு மற்றும் ஹிந்தி மொழிக்கு எதிராகத் திருப்ப இதை ஒரு சந்தர்ப்பமாகப் பார்த்தார்கள். உண்மை என்னவோ இதற்கு மாற்றாகத்தான் இருக்கிறது. ஹிந்தி பிரச்சார் சபா நடத்தும் தேர்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால்தான் அந்த ஆர்வத்தை புரிந்து கொள்ள முடியும். ஆங்கிலமும் ஒரு அந்நிய மொழிதான். அதை எதிர்க்காமல், ஹிந்தியை மட்டும் எதிர்ப்பது அவர்களின் வேடத்தை வெளிப்படுத்துகிறது. மத்திய அரசின் ஒரு ஆட்சி மொழியான ஹிந்தியை கொண்டாடுவதில் என்ன தவறு?
ஆளுநர் கலந்து கொண்ட அந்த விழாவில், தமிழ் தாய் வாழ்த்து பாடிய குழுவினர், தவறுதலாக ‘திராவிட நல் திருநாடு’ என்ற தொடரை விட்டுவிட்டார்கள். ஞாபக மறதி அல்லது மேடை பயம் காரணமாக அந்த தொடரை அவர்கள் விட்டிருக்கலாம். நிகழ்ச்சி அமைப்பாளர்கள், பகிரங்கமாக மன்னிப்பு கோரி அறிக்கை வெளியிட்டு இருந்தார்கள். இதற்கு எக்காரணத்திலும் ஆளுநர் பொறுப்பேற்க முடியாது என்பதை அனவரும் அறிவர்.
யாரையோ மகிழ்விற்பதற்காகச் செய்தார்கள் என்றே எடுத்துக்கொண்டாலும், அதை விவாதமாக எடுத்துச் செல்லும் அளவிற்கு எந்த சட்டரீதியான அடிப்படையும் இல்லை. திராவிடம் என்ற வார்த்தை, சங்க இலக்கியத்திலோ அல்லது, சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ வரலாற்றிலோ இல்லை என்பதே நிதர்சனம்.
உண்மை என்னவெனில், திராவிடம் என்ற வார்த்தை, இரு நூற்றாண்டுகளாகத்தான், தென்னிந்திய பகுதியான, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழக்த்தை குறிப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது.
கர்நாடகத்தை பூர்வீகமாகக்கொண்ட ஈ.வெ. ராமசாமி மற்றும், தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட அண்ணாதுரை, கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்கள்தான் திராவிடம் என்ற சொல்லை முன்நிருத்தி வருகிறார்கள்.
தமிழ் தாய் வாழ்த்து என்று அழைத்துவிட்டு, திராவிடத்தை அதில் திணிப்பது சரியாக இருக்காது. அதனால்தான், அந்த பாடலை இயற்றிய மனோன்மணியம் சுந்தரனார், அதனை தமிழனங்கு வணக்கம் என்று அழைத்தார். முன்பே சொன்னதுபோல், அது தமிழ் கடவுளுக்கான வணக்கமே தவிர, தமிழர்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை குறிப்பதல்ல.
இப்போது பரவலாக பேசப்படும் ஆரியம்-திராவிடம் கொள்கைக்கு எந்தவிதமான வரலாற்று ஆதாரமும் இல்லையென அறிஞர்கள் ஒப்புகொள்கிறார்கள். மேலும், அப்போது ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்கள், தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளவும், மக்களை பிரித்தாள்வதற்கு ஏதுவாகவும்தான் ஆரிய-திராவிட கொள்கையை கையாண்டார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.
மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய அந்த முழு பாடலில், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மற்றும் துலு மொழிகளையும் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தான் அது தமிழ் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல் என ஆனது. ஆனால், அப்படிப்பட்ட சில வரிகளை நீக்கிவிட்டுத்தான், அதை தமிழ் தாய் வாழ்த்தாக அறிவித்தது, தமிழக அரசு.
ஆளுநர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில், தமிழ் தாய் வாழ்த்து பாடியவர்கள் செய்த பிழைக்கு ஆளுநரைப் பொறுப்பாக்கி ஒரு சர்ச்சையை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரு ஆளுநர் தலைமையேற்று நடத்தும் விழாக்களில் ஏற்படும் தவறுகளுக்கெல்லாம், அவரே பொறுப்பேற்க வேண்டுமென்பது சரியாக இருக்காது. அது அபத்தமாகத்தான் கருதப்படும்.
இந்த சர்ச்சையில்தான், தமிழக முதல்வர் அவரது X என்ற சமூக வலைதளத்தில், “இவர் ஆளுநரா அல்லது ஆரியரா?” என்று பகிர்ந்துள்ளார். இது, இந்திய அரசியல் சாசனப் பதவி வகிக்கும் ஒருவரை, அவரது இனத்தை குறித்து கேலி செய்யும் கீழ்தரமான விமர்சனம் எனலாம். இந்திய அரசியலமைப்பின் 15வது பிரிவு, ஒருவரை அவரது இனம், மதம், சாதி, பாலியல் அல்லது பிறந்த இடம் குறித்து பாகுபாடு செய்வதற்கு தடை விதிக்கிறது. இந்தியாவின் வேறொரு மாநிலத்தில் இருந்து வந்திருக்கும் ஆளுநர் திரு கே.என். ரவி அவர்கள், இனம், மதம், மொழி மற்றும் கலாச்சாரம் என்று எந்த ஒரு பாகுபாடும் காட்டாமல், அனைவரிடம் சமமாகப் பழகுவது பாராட்டத்தக்கது. இன்றைய தமிழக ஆளும் கட்சியினர், தமிழக மக்களை ஆளுநருக்கு எதிராக திருப்பிவிட பல முயற்சிகளில் ஈடுபட்டதை அனைவரும் அறிவர். மத்திய அரசுக்கும், ஹிந்தி மொழிக்கும் எதிராக மக்களை தோண்டிவிடுகிறார்கள் என்பதும் தெரிந்ததே.ஆனால், மக்கள் அனைத்தையும் உணர்ந்திருக்கிறார்கள் என்றும், தக்க சமயத்தில் பதில் அளிப்பார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள், ஆளுநரை தொடர்ந்து எதிர்ப்பது, அவரது சனாதனக் கொள்கையின் பற்றினால்தானோ? அவரை தொடர்ந்து விமர்சித்தால், அவர் மனமுடைந்து போவார் என்று பகல் கனவு காண்கிறார்கள். இவர்களது முயற்சி தமிழகத்தில் பலிக்காது. திராவிட மாயையை, தமிழக மக்கள் உடைப்பார்கள்.
இப்படி பல விமர்சனங்களுக்கு உள்ளான பாடலுக்கு பதிலாக, மகாகவி சுப்பிரமணி பாரதியாரின் “செந்தமிழ் நாடு” என்ற பாடலை, நாம் ஏன் தமிழக கீதமாக கொண்டாடக்கூடாது? மகாகவி பாரதியார், மனோன்மணியம் சுந்தரனாரைக் காட்டிலும் ஒரு சிறந்த தேசபக்தர், அறிஞர், கவிஞர். நமது தமிழ் நாட்டிற்கும், மொழிக்கும், மக்களுக்கும், கலாச்சாரத்திற்கும் அவரைவிடச் சிறந்தவர் யாரேனும் உண்டோ?
–
திருமதி.பத்மப்ரியா
மொழிபெயர்ப்பாளர் -திரு.சத்யா நாராயணன்