*Ambedkar Birth Anniversary Event at RSS Headquarters*

VSK TN
    
 
     

டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி சார்பாக டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா சமிதி அலுவலகத்தில் கடந்த 13ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு புதுச்சேரி தேசிய பட்டியல் இனத்துக்கான ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் அவர்கள் தலைமை தாங்கினார். திருக்குளத்தார் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு பேரருளாளன் அவர்கள் முன்னிலை வகித்தார். ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் திரு புருஷோபக்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். டாக்டர் ஹெட்கேவார் ஸ்மாரக் சமிதி அறக்கட்டளையின் தலைவர் திரு சுரேஷ் ரகுராமன் அவர்கள் கலந்து கொண்டு சமிதி ஆற்றி வரும் சேவைப் பணிகளை எடுத்துரைத்தார்.

பட்டியல் சமுதாய மக்களுக்காக சேவையாற்றி வருபவர்களுக்காக சமுதாய நல்லிணைக்கு விருதுகள் வழங்கப்பட்டன ஸ்ரீலஸ்ரீ சிவலோக தேசிக சுவாமிகள், தவத்திரு விமல் ஐயா சாமிகள், திரு லோகேஷ், திரு ஆர் முருகானந்தம், திரு. திருநாவுக்கரசு என்கின்ற மணிகண்டன், திரு ராஜேந்திர பிரசாத், திரு பூவரசன் ஆகியோருக்கு சமுதாய நல்லிணக்க விருதுகள் வழங்கப்பட்டன.

 

                                                                           

Next Post

"The patriot Chidambara Bharathi who rose in anger upon witnessing injustice."

Wed Apr 30 , 2025
VSK TN      Tweet    1940களின் துவக்கத்தில் மஹாத்மா காந்தியின் அறைகூவலை வெகு பொறுப்பாக தலை மேல் ஏற்றுக் கொண்டு மதுரை மாவட்ட தேச பக்தர்கள் வயது வித்தியாசமின்றி ஆண் -பெண் வேறுபாடின்றி தனிநபர் சத்தியாக்கிரகத்தில் இறங்கினார்கள். அதிலும் இளைஞர்கள் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதாக இருந்தது. இரண்டாம் உலகப் போரில் பாரத நாட்டு வீரர்கள் ராணுவத்தில் இணைந்து நேச நாட்டுப் படைகளுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் நிராகரித்து விட்டதை […]