…செய்தி அறிக்கை…
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை அளித்ததை ABVP தென் தமிழகம் வரவேற்கிறது.
தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கபட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கு எந்த தண்டனை குறைப்பும் இல்லாத அளவிற்கு ஆயுள் தண்டனை விதித்த சென்னை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இந்த தண்டனை மூலம் நீதித்துறை மீதான நம்பிக்கை மேலும் உறுதிசெய்யப்படுகிறது. இதே போல் இந்த வழக்கில் பின்புலமாக செயல்பட்ட அரசியல் வாதிகளையும் விரைந்து கண்டறியுமாறு ABVP தென் தமிழகம் காவல்துறைக்கு வலியுறுத்துகிறது.
“இதுபோன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் பாலியல் குற்றங்களும் கடுமையாக கையாளப்பட வேண்டும். இது போன்ற குற்றங்கள் மீண்டும் நடக்காதபடி நீதிமன்றம் கடுமையான தண்டனைகளை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தீர்ப்பானது நாடு முழுவதும் ABVP நடத்திய போராட்டத்திற்கு வெற்றியாக உள்ளது. மேலும் ABVP மாணவர்களின் பிரச்சனைக்கும், சமூகத்தின் பிரச்சனைக்கும் எப்போதும் குரல் கொடுக்கும்” என ABVP தென் தமிழக மாநில செயலாளர் ஸ்ரீ சூர்யா கூறியுள்ளார்.
இந்த செய்தி குறிப்பை வெளியிடுபவர் ஸ்ரீ அஜித் பாண்டியன் தென் தமிழக மாநில அலுவலக செயலாளர்


One thought on “ABVP PRESS RELEASE ON ANNA UNIVERSITY ISSUES”
Comments are closed.