“ காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ .. படிக்கலாம் ரசிக்கலாம் “ என்ற திரைப்பட பாடல் வரிகளில் கூறியது போல , இன்றைய தலைமுறையினர் அவர் எழுதியதை படிக்க, ரசிக்க வேண்டியவை பல இருக்கின்றன.
கவியரசர் பிறந்தநாள் ஜூன் 24.
3860 திரைப்பட பாடல்கள், 320 கட்டுரைகள், தனிக்கவிதை 22000 வரிகள், குட்டிக் கதைகள் 100, நாவல் 6 அவர் படைப்புகள்.
எழுத்து மூலம் தெளிவை ஏற்படுத்தினார் கண்ணதாசன்.
தற்போது தமிழத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பிரிவினை பிரசாரத்தை அன்றே ‘சிங்கிலாக’ தன் எழுத்தின் மூலம் துணிவோடு எதிர்த்து நின்றவர் கவியரசர்.
தமிழகத்தில் இந்து துவேஷம் தொடர்கிறது.
அண்மையில் காங்கிரஸ் கட்சி தலைவர் அமெரிக்கை நாராயணன் தனது X வலை தளத்தில் “ தமிழகத்தில் திரும்ப திரும்ப இந்துக்களின் நம்பிக்கையை பழித்து மனம் நோகும்படி ஆளும் கட்சி அமைச்சர்கள் பேசுவதால் மன்னிப்பு கேட்கும் வரை கூட்டணியில் இருந்தாலும் தி.மு.கவிற்கு ஓட்டு போட மாட்டேன் “ என்று பதிவிட்டுள்ளார்.
இதன் பின்னனி, இராமாயணம் கட்டுக்கதை என்று அமைச்சர் கோவி செழியன் கூறியது.
நீலகிரியில், திமுக மாணவர் அணி செயலாளர்கள் கூட்டத்தில் பேசும் போது, திமுக எம் சி , ஆ ஒராசா , கழக தொண்டர்கள் கரை வேட்டி கட்டும் போது பொட்டு வைக்காதீங்க என்று கூறியுள்ளார். முன்னர் இவர் நாங்கள் ராமருக்கு எதிரிகள் ; சூத்திரனாக இருக்கும் வரை விபச்சாரியின் மகன் போன்ற பல துவேஷங்களை வீசியவர்.
கவியரசர் தனது வாழ்நாளில் ‘ சிங்கிலாக ‘ இந்து விரோத சக்திகளை எதிர்த்து நின்றார்.
” நான் ஒரு இந்து . இந்து என்பதில் நான் பெருமைபடுகிறேன்.” என்று துணிச்சலாக கூறினார்.
இந்துவுக்கு தன் மத அமைப்பின் மூலம் கிடைக்கும் நிம்மதி வேறு யாருக்கும் கிடைப்பதில்லை . கடைசி நாத்திகனையும் , அது ஆத்திகன் என்றே அரவணைத்துக் கொள்கிறது. என்னை திட்டுகிறவன் தான் என் ‘ முதல் பக்தன் ‘ என்பது இறைவன் வாக்கு . ஏதோ பரம்பரையாகவே பகுத்தறி வாளானாக பிறந்ததுபோல் எண்ணிக் கொண்டு பாத்திரத்தை நிரப்புவதற்காகவே சாஸ்திரத்தை கேலி செய்ய்யும் பகுத்தறிவு தந்தைகள் பிற மதங்கள் மீது கைவைக்க முடியுமா? என்று கேட்டார்.
மேலும், என்னை அடிமை கொண்ட கண்ணனும், ராமனும் சந்திரமண்டலத்திற்கு பயணம் போகும் அமெரிக்காவையே அடிமைக்கொண்டு ஆன்மீக வழியில் திளைக்க வைத்திருக்கிறார்கள். . அமெரிக்காவை விடவா ஈரோடு பகுத்தறிவில் முன்னேறிவிட்டது? வேண்டுமானால் பணத்தறிவில் முன்னேறிவிட்டது என்று சொல்லலாம்.
அப்பாவி இந்துக்கள் பேசாமல் இருக்க இருக்க சமுதாய வியாபாரிகள் கோவிலுக்கு முன்னால் கடை வைக்கத் தொடங்குகிறார்கள். நாட்டு பற்று இல்லாதவனுக்கு தெய்வப்பற்று எங்கிருந்து வரும்.தெய்வப்பற்று இல்லாதவர்க்கு நாணயம், நேர்மை இவற்றின்மீது நம்பிக்கை. எங்கிருந்து வரும் .?
இவ்வாறு 1972 ல் கவியரசர் வெளியிட்ட கட்டுரையால் சேலத்தில் நடந்த இந்து எதிர்ப்பு ஆபாச ஊர்வலம் போல சென்னையில் நடத்த திட்டமிட்டது நடக்காமல் கைவிடப்பட்டது.
அடுத்ததாக கொளுத்தி போடும் பிரசாரம், சம்ஸ்க்ருதத்தால் தமிழுக்கு ஆபத்து என்பது.
தமிழக முதல்வர், திரு ஸ்டாலினின் “ இந்தி முகமூடியில் ஒலிந்திருக்கும் சம்ஸ்க்ருத முகம் “ – பிப்ரவரி , 27, 2025 லவ் முரசொலியில் எழுதிய கடிதத்தில் , இந்தி , சம்ஸ்க்ருத மொழி திணிப்பால் 25க்கும் மேற்பட்ட மொழிகள் சிதைந்திருப்பதாக கூறியுள்ளார். தேசிய கல்வி கொள்கையின் நோக்கமே ‘ ஆரிய ‘ மொழி சம்ஸ்க்ருதத்தை திணிப்பதாகும் என்றார். இதனால் தமிழனின் பண்பாடு அழிந்துவிடும் என்று பெரியார் கூறியதை குறிப்பிட்டுள்ளார்.
சம்ஸ்க்ருதம் தமிழ் நாட்டிற்கு தேவையா என்பதை பற்றி கவியரசர் கண்ணதாசன் கருத்து என்ன ?
இந்து மதத்தின் அடிப்படை விஷயங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளது . தமிழில் உணர்வோடு ஒன்றிபோகும் இனிமை இருக்கின்றது. ஆகையால் இவை இரண்டும் தேவை.
கண்ணதாசன் தமிழ் மொழியையும், தமிழரையும் மிகவும் நேசித்தார் அதுபோல இந்திய ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தினார் .
அவர், தாய்மொழி எனது உயிர் இந்தியா எனது உடல்.அழகு தமிழ் பேசுவதே தாராளம், மற்ற மொழியை அவமதிப்பு ஓர் அறியாமை என்று மொழி தீவிரவாதத்தை எதிர்த்தார்.
இந்திய மொழிகள் அனைத்தும் மரபு சார்ந்த சொத்துக்களாகவே அவர் கண்டார்.
இப்போது புது உருட்டு கீழடி.
கீழடி அகழ்வாராய்ச்சி மூலமாக தமிழ் கலாசாரத்தை இந்து மதத்திலிருந்து பிரித்து ரோமானிய கிறிஸ்துவம் சார்ந்ததாக திரிக்க முயற்சி நடக்கிறது.
கவியரசர் அன்றே எச்சரித்து போல தமிழ், சம்ஸ்கிருதம், வடக்கு, தெற்கு , திராவிடம் , ஆரியம் என்ற போலி நாத்திகவாதிகளிடம் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்
இந்தியர்கள் கட்டுமரத்தின் மீது பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள் அதில் இருந்து ஒரு கட்டையை பிரிக்க எவன் நினைத்தாலும் அவன் உன்னை மூழ்கடிக்க விரும்புகிறான் என்று பொருள். ரஷ்யாவிலும், சைனாவிலும் பிரதேச உணர்ச்சி என்றைக்கு ஒழிக்கப்பட்டதோ அன்றைக்குத்தான் அவை வல்லரசாயின என்றார்.
இன்று இளைஞர்களை பாதிக்கும் வகையில்
Live in relation , திருமணம் தாண்டிய உறவு போன்றவற்றை சகஜமாக்கும் முயற்சி நடக்கிறது. Thuglife , விடாமுயற்சி போன்ற திரைபடங்களில் இந்த கருத்துகளை காணலாம்.
இக்காலத்தில் துண்டு துண்டாக பெண்ணை வெட்டி Fridge , suitcase ல் அடைப்பது , Live in relation கசப்பாகி காதலன் காதலியை கொல்வது போன்ற பல கொடூர சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன
கடந்த ஜூன் 4 , 2025 , பத்தொன்பது வயது கல்லூரி மாணவி அதே வயதுடைய Boyfriend ஆல் கொல்லப்பட்டாள் . மே 12, 2022 ஷ்ரத்தா வால்கர் , Live in Boyfriend அஃப் தக்கால் 20 துண்டுகளாக வெட்டப்பட்டு fridgeல் அடைத்த கொடூர சம்பவம் நினைவிருக்கலாம்.
.இளைஞர்கள் எப்படி வாழ வேண்டும்? தனது துணையை எப்படி தேட வேண்டும்? கவியரசர் கூறுகிறார் :
மேலைநாட்டு நாகரித்தில் திருமணம் என்பது ஒரு குத்தகை தான். அதற்கொரு புனிதத்தன்மை உருவாக்கப்படவில்லை . இந்து தர்மத்தில் இல்லறம் வேலிக்குள் அடங்கிய பயிர். இல்லறதர்மம் நிம்மதிக்காகவே ஏற்பட்டது.வாழ்க்கையில் பாலுணர்வும் ஒரு பகுதியே அதுவே வாழ்க்கை ஆகிவிடாது. குடும்பத்தை பிரிந்து தாய், தந்தையரை வெறுத்து ஒருத்தியின் (ஒருத்தனின்) பின்னால் ஓடுவது நிரந்தர நிம்மதியைத் தராது. தற்கால உலகம் காதலுக்கு லாயக்கற்றது. கல்யாணம் செய்து காதலிப்பது மேல் என்கிறார்.
கண்ணதாசன் ஒரு கவியரசர் , ஒரு தத்துவஞானி, ஒரு எழுத்தாளர், சமூக விமர்சகர் , நாத்திகனாக இருந்து கீதை வழியில் பயணத்தவர்.
இளைஞர்கள் அவர் எழுதிய கருத்துகளை படிக்க வேண்டும். இன்றைய காலத்திற்கு தேவைப்படுகிறது.
Source:
எண்ணங்கள் ஆயிரம், கடைசி பக்கம், செப்பு மொழிகள் – கண்ணதாசன் பதிப்பகம்.
