பத்திரிகை வெளியீடு
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம்
டெல்லியில் மூன்று நாள் அகில பாரதிய மாநில அமைப்பாளர் (ப்ராந்த் பிரச்சாரக் பைட்டக்) கூட்டம் (ஜூலை 04-06, 2025)
ஸதாப்தி வருடம் (நூற்றாண்டு விழா) நிகழ்ச்சிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெறும்.
புது டெல்லி, ஜூலை 03, 2025:
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) மூன்று நாள் அகில பாரதிய ப்ராந்த் பிரச்சாரக் பைட்டக் (கூட்டம்) கேஷவ் குஞ் சில் (டெல்லி) ஜூலை 04 முதல் 06, 2025 வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டம் முக்கியமாக அமைப்பு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும். இது முடிவெடுக்கும் கூட்டம் அல்ல. பல்வேறு ப்ராந்தங்களில் உள்ள அமைப்பு ரீதியான பணிகளின் முன்னேற்றம் மற்றும் அனுபவங்கள் குறித்து விவாதிக்கப்படும். பல்வேறு கார்ய விபாகங்களின் (பணிப் பிரிவுகள்) செயல்பாடுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
பூஜனிய சர்சங்கசாலக் ஜி மற்றும் பூஜனிய சர்கார்யவாஹ் ஜி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். இவர்களின் வழிகாட்டுதல் அனைத்து கார்யகர்த்தாகளுக்கும் கிடைக்கிறது.
அனைத்து சஹ-சர்கார்யவாஹ்கர்ளும் (இணை பொதுச் செயலாளர்கள்), கார்ய விபாகங்களின் பொறுப்புப்பாளர்களும்,
ஆர்.எஸ்.எஸ்-இன் 32 விவித அமைப்புகளின் அகில பாரதிய சங்டன் மந்திரிகளும் (அகில பாரத அமைப்புச் செயலாளர்கள்) கலந்து கொள்வார்கள்.
ஆர்.எஸ்.எஸ் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் – ஸ்ரீ சுனில் அம்பேகர் ஜி, இன்று கேஷவ் குஞ்சில் ஊடகவியலாளர் சந்திப்பில், வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடன் சஹ பிரச்சார் பிரமுக் ஸ்ரீ நரேந்திர தாக்கூர் மற்றும் ஸ்ரீ பிரதீப் ஜோஷி ஆகியோர் உடன் இருந்தனர்.
மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் 100 பிரஷிக்ஷன் வர்காக்ங்கள் (பயிற்சி முகாம்கள்) நடத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இவற்றில் 75 முகாம்கள் 40 வயதுக்குட்பட்ட ஸ்வயம்சேவகர்களுக்கும், 25 முகாம்கள் 40 முதல் 65 வயதுக்குட்பட்டவர்களுக்கும் நடத்தப்பட்டன. இந்த பயிற்சி முகாம்களின் போது, சேவா விபாக் (சேவை துறை) உட்பட பல்வேறு கார்ய விபாகங்கள், கவனம் செலுத்திய பயிற்சிகளை வழங்கின. ஸ்வயம்சேவகர்கள் சேவா பிரகல்ப (நிரந்தர சேவை திட்டங்கள்) களிலும் ஈடுபட்டுள்ளனர், மேலும் பேரிடர்களின் போது நிவாரணப் பணிகளில் தீவிரமாக பங்கேற்கின்றனர். உதாரணமாக, பூரி ஜெகந்நாத் ரத யாத்திரை மற்றும் அகமதாபாத் விமான விபத்து சம்பவங்களின் போது அவர்கள் பங்களித்தனர்.
இந்தக் கூட்டத்தின் முக்கிய கவனம் ஸதாப்தி வருடம் (நூற்றாண்டு விழா) என்று அவர் குறிப்பிட்டார். அனைத்து ப்ராந்தங்களும் தங்கள் சொந்த திட்டங்களைத் தயாரித்துள்ளன, அவை விரிவாக விவாதிக்கப்படும். இது தொடர்பான தகவல்கள் கூட்டத்திற்குப் பிறகு பகிர்ந்து கொள்ளப்படும்.
ஸதாப்தி வருடம் அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 02 அன்று நாக்பூரில் விஜயதசமி உத்சவ் உடன், பூஜனிய சர்சங்கசாலக் ஜி முன்னிலையில் தொடங்கும்.
இதைத் தொடர்ந்து, ஸதாப்தி வருட நிகழ்வுகள் ஒரு முழு ஆண்டுக்கு தொடரும். அதே நாளில், நாடு முழுவதும் ஷாகா, மண்டல் மற்றும் பஸ்தி (கிளை, வட்டம் மற்றும் பகுதி) நிலைகளில் கொண்டாட்டங்கள் நடைபெறும்.
ஒரு சிறப்பு தொடர்பின் பகுதியாக, ஸ்வயம்சேவகர்கள் ஒரு கிருஹ் சம்பர்க் அபியான் (வீடு வீடாக தொடர்பு பிரச்சாரம்) நடத்துவார்கள், அதில் அவர்கள் வீடுகளுக்குச் சென்று, சங்க சாகித்ய (ஆர்.எஸ்.எஸ் இலக்கியம்) விநியோகிப்பார்கள், மற்றும் ப்ராச்சாரம் செய்வார்கள்.
நாடு முழுவதும் நகர்/கண்ட (நகர் /ஒன்றிய) நிலைகளில் சமாஜிக் சத்பாவ் பைட்டக் (சமூக நல்லிசைவு கூட்டங்கள்) ஏற்பாடு செய்யப்படும். சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து சமூக தீமைகளை அகற்றுவது, நல்லிசைவு மற்றும் ஒற்றுமையை வளர்ப்பது குறித்து விவாதிப்பார்கள். கூடுதலாக, ஜில்லா கேந்திரங்களில் (மாவட்ட மையங்கள்), பிரமுக் நாகரிக் கோஷ்டிஸ் (முக்கியஸ்தர்கள் கருத்தரங்குகள்) நடத்தப்படும். இந்த கூட்டங்கள் ஹிந்துத்துவம், தேசிய நலன் மற்றும் எதிர்கால பாரதத்திற்கான தொலைநோக்கு குறித்து உரையாடல் இடம்பெறும்
ஸதாப்தி வருடம் காரணமாக இளைஞர்களின் பங்கேற்பை மையமாகக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
ஷதாப்தி வருடத்திற்கான
பூஜனிய சர்சங்க சாலக் ஜி அவர்களின் பிரவாஸ் யோஜனா (பயணம்/பார்வை திட்டம்) குறித்தும் விவாதங்கள் நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பூஜனிய சர்சங்கசாலக் ஜி உடன் சிறப்பு சம்வாத் (கலந்துரையாடல் கூட்டங்கள் )நிகழ்வுகள் நான்கு முக்கிய நகரங்களில் – டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் நடத்தப்படும்,
அங்கு சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் அழைக்கப்படுவார்கள்.
சங்கம் பற்றி அறிந்து கொள்ளவும் அதனுடன் இணையவும் சமூகத்தில் ஒரு வெளிப்படையான ஆர்வம் மற்றும் உற்சாகம் உள்ளது என்று அவர் கூறினார். ஏராளமான இளைஞர்கள் சேர ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்ற பிரசிக்ஷன் வர்காகளில் குறிப்பிடத்தக்க இளைஞர் பங்கேற்பு காணப்பட்டது. மேலும், ஏப்ரல் முதல் ஜூன் வரை, “Join RSS” தளம் மூலம் 28,571 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.
ஷதாப்தி வருடத்தில் மைய கருத்தாக பஞ்ச பரிவர்த்தன் (ஐந்து மடங்கு மாற்றங்கள்) என்ற தொலைநோக்கு பார்வையை ஆர்.எஸ்.எஸ் முன்வைத்துள்ளது, இது கூட்டு பங்கேற்பின் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் முடித்தார்.
இந்த தொலைநோக்கு பார்வையில் சமாஜிக் சமரசதா (சமூக நல்லிணக்கம்) ஊக்குவித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஸ்வ உணர்வு கொண்ட தேசம் (சுய உணர்வு குறித்த பெருமிதம்) வளர்த்தல், குடும்பங்களுக்குள் குடும்ப பிணைப்புகள் மற்றும் கலாச்சார மதிப்புகளை வலுப்படுத்துதல் (குடும்ப ப்ரபோதன்), மற்றும் ஒருவரின் குடிமை கடமைகள் (நாகரிக் கர்த்தவ்யா) நிறைவேற்றுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் சமூகத்துடன் இணைந்து இந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்வார்கள்.

