On the occasion of the centenary celebrations, Sangh will hold a discussion with the key administrators of the community.

VSK TN
    
 
     

நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி சமூகத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் சங்கம் உரையாடல் நிகழ்த்தும்

ஆகஸ்ட் 26, 27, 28 ஆகிய தினங்களில் “விக்ஞான் பவனில்” மூன்று நாட்கள் விரிவுரைத்டொடர் தேசத்தின் நான்கு பெருநகரங்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

புது தில்லி

‘ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்’ சங்கத்தின் நூற்றாண்டு விழா, மாவட்ட மையத்திலிருந்து அகில பாரத எல்லை வரை, சமூக முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தும். இந்த வரிசையில், நாடு முழுவதும், ஆயிரத்துக்கும் மேலான இடங்களில் முக்கிய பிரமுகர்களின் கருத்தரங்குகள் நடத்தப்படும். நான்கு பெருநகரங்கள் உட்பட, பிற முக்கிய இடங்களிலும் கருத்தரங்குகள் நடைபெறும். தில்லி, மும்பை (ஃபிப்ரவரி) கொல்கத்தா, பங்களூரு (நவம்பர்) நடைபெற இருக்கும் நிகழ்ச்சிகளில் சர்சங்க சாலக் டாக்டர்.மோஹன் பாகவத் ஜி அவர்கள் பங்கேற்பார். அதேபோல், பொதுச்செயலாளர் அவர்களும் மற்ற மூத்த நிர்வாகிகளும் வேறுவேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்கள்.

இந்த வரிசையில் தில்லி “விக்ஞான் பவனில்” ஆகஸ்ட் 26, 27, மற்றும் 28 “மூன்று நாட்கள் விரிவுரைத்தொடர்” நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. “கேசவ் குஞ்ச்” என்ற இடத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அகில பாரத முக்கிய பிரச்சாரக் சுனில் அம்பேகர் ஜி விரிவுரை சம்பந்தமான அறிமுக தகவல்கள் கொடுத்தார். அவர், மூன்று நாட்கள் விரிவுரைத்தொடர் நிகழ்ச்சியில் சமூகத்தின் அனைத்து துறைகள், பிரிவுகளில் உள்ள சிந்தனைவாதிகள், முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்படுவார்கள். இதற்காக, சமூக, பொருளாதார, ஆன்மீகம், விளையாட்டு, கல்வித்துறை அறிஞர்கள், மற்றும், மொழி வல்லுனர்கள், தொழில் முனைவர்கள், வெளிநாட்டு தூதரகங்களை சேர்ந்தவர்கள் பெயர்களும் இணைக்கப்பட்டுள்ளன என்றார்.

பல்வகை துறையைச்சேர்ந்த முக்கிய பிரமுகர்களை 17 வகைகளாகவும், 138 துணைப்பிரிவுகளாகவும் பிரித்து அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்று நாட்கள் விரிவுரைத்தொடர் விஷயங்களில் சுனில் அம்பேகர் ஜி கூறியது, நூறு வருட சங்க பயணம், ஸ்வயம் சேவகர்களின் பங்கு மற்றும் அனுபவங்களுடன், வருங்காலத்தில் எந்த துறையில் சங்கம் முன்னேற வேண்டியிருக்கிறது என்பது பற்றி சர்சங்க சாலக் ஜி தன் கருத்தை வெளியிடுவார், மேலும், நடுவர் தீர்ப்பின் மீது சங்கத்தின் யோசனை சமூகத்தின் எதிர்பார்க்கப்படும் பங்கெடுப்பின் திட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்படும். தற்காலத்தில், நாடு முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தொடர்ந்து முன்னேறும் பெரும் லட்சியத்துடன், ஸ்வயம் சேவகர்களின் பங்களிப்புகள் பற்றியும் பேசப்படும், புதிய தொடுவானத்தை நோக்கி பாரதம் முன்னேற வேண்டுமென்றால், சுயமாகவும், தைரியத்துடனும் மட்டுமே முன்னேற முடியும். அடிமைக்காலத்திலிருந்து வந்து கொண்டிருக்கின்ற காலனித்துவவாத காரணிகள் பற்றியும் கலந்துரையாடல் நடைபெறும். இதுவரை அடக்கிவைக்கப்பட்ட எல்லையற்ற திறன்களின் சிறப்பம்சம் பற்றியும் சிந்திக்கப்படும். உடன் தற்காலத்தில் பாரத சமூகத்தின் மேன்மையான விஷயங்களுடன் கூடிய பாரதத்தின் உலகளாவிய பங்கினைப் பற்றியும் பேசப்படும். விரிவுரைத்தொடரின் மூன்றாம் நாள் சர்சங்க சாலக் ஜி எழும் வினாக்களுக்கும், ஆர்வங்களுக்கும் பதில் அளிப்பார்.

அவர் சொன்னதாவது, “ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக்” சங்கத்தின் நூறு வருடத்தின் தன் யாத்திரையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகள் வரை அடையவும், சங்கத்தின் சிந்தனை வேறுபட்டதல்ல, ஆனால் பாரதீய பரம்பரையை அடிப்படையாகக் கொண்டது என்று எப்போதும் சொல்ல முயற்சி செய்து வருகிறது. சங்கத்தின் கொள்கை, அனைவருடனும் சேர்ந்து நாட்டு முன்னேற்றத்தில் பங்கெடுக்க வேண்டும். நாங்கள் விரும்புவது நாடு முழுவதும் ஒன்று கூடி இந்த வளர்ச்சிப் பயணத்தை முன்னேறச்செய்வோம். இதில் பங்கெடுத்து சுதந்திர இந்தியாவைப்பற்றிப் பிரச்சாரம் செய்வதில் ஸ்வயம் சேவக் பலவித துறைகளில் இணையாகவும் பங்கெடுக்கவும் சேவையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

அவருடன் மேடையில் தில்லி பிராந்திய சங்க சாலக் டாக்டர். அனில் அகர்வால் ஜி உடன் இருந்தார்.

Next Post

Another name for dedication is Paapanna

Tue Aug 19 , 2025
VSK TN      Tweet    ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங் தனிமனித புகழ்பாடுதலை என்றும் விரும்பியதில்லை. சங்கம், தனி ஒருவரை தூக்கிப்பிடித்தல், அமைப்பை பலவீனப்படுத்தும் என்ற திடமான எண்ணத்துடன் செயல்பட்டுவருகிறது. நிற்க, கடந்த சில தினங்களில் சில வாட்சாப் குழுக்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஸ்ரீ. பாபு தேவாடிகா என்கிற பழுத்த ஸ்வயம்சேவகரைப் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருவதைப் பார்த்தபோது, ஸ்ரீ. தேவாடிகா அவர்களின் உயரிய ஸ்வயம்சேவக தன்மை பற்றி நாம் ஏன் உலகிற்கு […]