VSK TN
** “ஒரு பிரச்சினையை சந்திக்கும்போது பின்வாங்காமல் தைரியமாக அதை எதிர்கொள்வது எப்படி என்பது தான் பகவத் போதிக்கும் முதல் பாடம். நாம் என்ன செய்தாலும் அது பொது நன்மைக்காகவே அமைய வேண்டும் என்பது கீதை புகட்டும் இன்னொரு பாடம்.
** “பகவத்கீதை புதிர் போல தோன்றினாலும் அது வெகு ஜனங்களை சென்ற டைந்தாக வேண்டும் இந்திய பிரஜை ஒருவன் / ஒருத்தி தன் வாழ்வை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று பகவத் கீதை பாதை போடுவதால் பகவத்கீதையை புரிந்துகொள்வது முக்கியம்.
** “இல்லந்தோறும் பகவத்கீதையை கொண்டு சேர்த்து நாம் அதனை சரியான உணர்வுடன் பின்பற்றி வந்தால் பாரதம் உலகத் தலைமை நிலை அடைவதற்கு இன்று உள்ளதைப் போல நூறு மடங்கு வாய்ப்பு ஏற்படும். உண்மையிலேயே ஒரு தேசமாக உன்னத நிலையை அடைவதற்கு பாரதம் பகவத்கீதை காட்டும் பாதையில்நடைபோட வேண்டும்.
** “தனிநபரோ, அமைப்போ, அரசியல் கட்சியோ செய்கிற வேலை அல்ல இது. சமுதாயமே முழுமையாக இதில் ஈடுபட வேண்டும். சரியான உணர்வுடன் பகவத்கீதையை சமுதாயம் நடைமுறையில் கடைப்பிடிக்கிற போதுதான் தேசம் லட்சிய தேசமாக தலைநிமிர முடியும்”.
புணே மாநகரில் கீதா தர்ம மண்டல் அமைப்பினர் நடத்தி வரும் ’கீதா தர்சன்’ மாத இதழ் வெள்ளி விழா நிகழ்ச்சியில் செவ்வாயன்று (டிசம்பர் 18) கலந்து கொண்டு தலைமையுரையாற்றிய ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் இவ்வாறு கூறினார். கீதா தர்ம மண்டல் பொறுப்பாளர்கள், பத்திரிகை ஆசிரியை உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். மோகன் பாகவத் விழா மலரை வெளியிட்டார். கீதை பரப்பும் பணி செய்து வரும் வசுதா பலாண்டே விழாவில் கௌரவிக்கப்பட்டார். ’லட்சியம், அதற்கான பணி, பணிபுரிபவர், அவர் செய்யும் முயற்சிகள் எல்லாம் இருந்தாலும் விரும்பிய பலன் கிடைக்க உரிய நேரம் வர வேண்டும” என்ற கருத்தில் அமைந்த “அதிஷ்டானம் ததா கர்த்தா கரணம் ச” என்ற கீதை (அத்யாயம் 18 செய்யுள் 3) செய்யுள் பற்றி குறிப்பிடுகையில் மோகன் பாகவத் பின்வரும் சம்பவத்தை விவரித்தார்: “ அவசரநிலை அறிவிக்கப்பட்ட நிலையில் (1975-1977) ஆர்.எஸ்.எஸ் . தடைசெய்யப்பட்டது. சங்க.ஸ்வயம்சேவகர்கள் சத்தியாகிரகம் செய்தோம். அப்போது ’நாம் நல்ல வேலதானே செய்கிறோம், நமக்கு ஏன் இப்படி இடைஞ்சல் வருகிறது? கடவுளுக்கு கண் இல்லையா?’ என்று மூத்த பிரச்சாரகர்களிடம் கேட்போம். சங்க வேலை செய்வதை கைவிடக் கூடாது என்று மட்டும் பெரியவர்கள் சொல்வார்கள். “இன்று ஆர்.எஸ்.எஸ் அடைந்துள்ள இந்த நிலையை அன்று நாங்கள் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை. சங்கத்திற்கு இது போன்ற நிலை வரும் என்று அன்றைக்கு யாராவது சொல்லியிருந்தால் அவரைக் கேலி செய்திருப்போம்! தனிநபரோ அமைப்போ என்னதான் திறம்பட செயல்பட்டாலும் உரிய நேரம் வரும் போதுதான் பலன் கிடைக்கிறது”. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.